புராணக் கதை போன்ற ZHANG HAN ZHIயின் வாழ்வு
cri
2008ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் நாள், திருமதி ZHANG HAN ZHI காலமானார். SHI JIA HU TONG என்ற சீன சிறு வீதியில் கனமான சிவப்பு கதவைக் கொண்ட 51வது இலக்க வீட்டு முற்றத்தில், அஞ்சலி தெரிவிக்க மக்கள் நிறைந்து காணப்பட்டனர். 25 ஆண்டுகளுக்கு முந்தைய அவரது கணவரின் மரணத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தால், இவரது மரணம் மேலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருந்தாலும் பிரபல தூதாண்மை நிபுணர் மற்றும் திறமைசாலி என்ற புகழை அவர்களது கணவர் QIAO GUAN HUA பெற்றிருந்தார்.
திருமதி ZHANG HAN ZHIயின் செவிவழி கதை போன்ற வாழ்வு, 1930ஆம் ஆண்டுகளிலிருந்து தொடங்கியது. ஷாங்காய் மாநகரில் புகழ்பெற்ற ZHANG SHI ZHAO அவரை மகளாக தத்துஎடுத்தார். நவ சீனாவில் வளர்ந்த ZHANG HAN ZHI, குடும்ப கல்வியையும் புரட்சி சாரம்சத்தையும் இணைக்க வேண்டும் என எண்ணினார். அரசியல் மற்றும் புரட்சியை, மதிப்புள்ள முதல் தெரிவாக கொண்டதால், அவர்களது வாழ்க்கை, குடும்ப வாழ்வு என்றாலும், அரசியல் வாழ்வு என்றாலும், அதனுடன் தொடர்புடையதாய் இருந்தது. 1963ஆம் ஆண்டு டிசம்பர் திங்களில், சீன மக்கள் குடியரசு தலைவர் மா சே துங்கின் பிறந்த நாள் கொண்டாட்டக் கூட்டத்தில், மா சே துங்கின் நண்பர் மற்றும் ஐனநாயக பிரமுகர் என்ற முறையில் ZHANG SHI ZHAO கலந்து கொண்டார். அப்போது பெய்ஜிங் அந்நிய மொழி கழகத்தில் ஆசிரியராக வேலை செய்த ZHANG HAN ZHIயும் தனது வளர்ப்பு தந்தையுடன் இணைந்து அதில் கலந்து கொண்டார். தமது ஆங்கில மொழி ஆசிரியராக இருக்குமாறு அவருக்கு மா சே துங் கோரிக்கை விடுத்தார். ஆகவே, அவர் 1964ஆம் ஆண்டு ஜனவரி முதல்
ஞாயிற்றுக்கிழமையிலிருந்து தொடங்கி, வாரத்துக்கு ஒருமுறை மா சே துங்கிற்கு ஆங்கில மொழியைக் கற்றுக் கொடுத்தார். அரை ஆண்டு மட்டுமே மா சே துங்கின் ஆசிரியராக இருந்த போதிலும், அவரின் பார்வை வரம்புக்குள் ZHANG HAN ZHI இருந்து வந்தார். 1971ஆம் ஆண்டு மார்ச் திங்கள் இறுதியில், மா சே துங்கின் உத்தரவுக்கு இணங்க, சீன வெளியுறவு அமைச்சகத்தில் அவர் நுழைந்து ஆங்கில மொழிப்பெயர்ப்பாளராக பணிபுரிந்தார். 1973ஆம் ஆண்டு QIAO GUAN HUAவுடன் காதலில் மூழ்கிய பின், வெளிநாடு ஒன்றில் தூதராக வேலை செய்ய அவர் மறுத்து விட்டார். 1976ஆம் ஆண்டு மே திங்களில் அவர் மற்றும் அவரது கணவர் QIAO GUAN HUAவின் அரசியல் வாழ்வு முடிவுக்கு வந்தது. புராணக் கதை போன்ற ஒரு பெண்மணியின்
திருமணம் பொது மக்களின் கவனத்தை ஈர்ப்பது நிச்சயம். ZHANG HAN ZHI, QIAO GUAN HUA தம்பதியரின் அருமையான காதல் கதை புராணக் கட்டுக்கதை போல் தோன்றுகிறது. QIAO GUAN HUAஐ திருமணம் செய்யும் முன், திருமணத்தின் தோல்வியை ZHANG HAN ZHI அனுபவித்திருந்தார். அழகான, புத்திக்கூர்மைமிக்க ZHANG HAN ZHI சுதந்திரமான குணாதிசயங்களைக் கொண்டிருந்த போதிலும், விவாகரத்து செய்யு வேண்டுமா என்பது குறித்து தயங்கினார். அப்போதைய அரசுத் தலைவர் மா சே துங்கின் ஆதரவுடன், இறுதியில் அவர் மன உறுதியுடன் மணமுறிவு செய்தார். பின்னர் ZHANG HAN ZHIக்கும் QIAO GUAN HUAவுக்கும் இடையில் காதல் ஏற்பட்டது. வயதிலான இடைவெளி ஓரளவு அதிகம் என்ற போதிலும் அவர்கள் இருவரும் திருமணம் செய்தனர். 1976ஆம் ஆண்டுக்குப் பின், அவர்கள் பொது மக்களைப் போன்று வாழ்க்கை
நடத்தத் துவங்கினர். SHI JIA HU TONG என்ற சீன சிறு வீதியிலுள்ள 51வது இலக்க வீட்டின் முற்றத்தில்தான் அவர்களின் காதல் பதிவு செய்யப்பட்டுள்ளது. 1983ஆம் ஆண்டில் QIAO GUAN HUA காலமானார். கணவர் மீதான நினைவில் 48 வயதான ZHANG HAN ZHI ஆழ்ந்தார். 10 ஆண்டுகளுக்குப் பின்தான், அவர்கள் மன வருத்தத்திருந்து மீண்டார். QIAO GUAN HUAவுக்காகவும் தமக்காகவும் அவர் நூல்களை எழுதினார். கனமான சிவப்பு கதவை கடந்து விடுவது என்ற நூலில், நாம் சீன வரலாற்றை படிக்கலாம். ஆனால், தெரிந்து கொள்ள விரும்பும் அம்சங்கள் போதுமானதாக இல்லை.
இது பற்றி வரலாற்று நிபுணர்கள் மன வருத்தம் அடைகின்றனர். வெளியுறவு துறையிலான தமது செயல்பாடுகளை ZHANG HAN ZHI முழுமையாக எழுதினார். 1970ஆம் ஆண்டுகளில் சீனத் தூதாண்மை துறை வளர்ச்சி அடைந்த காலத்தில், தூதாண்மை அதிகாரியான அவர் உரிய பங்காற்றினார். பல முக்கியமான தூதாண்மை நிகழ்ச்சிகளில் மொழிப்பெயர்ப்பாளராக தனது தலைசிறந்த திறமையை வெளிப்படுத்தினார். அவர் எழுதிய நூலிலான அம்சங்கள், வரலாற்றை நிரப்பும் தரவுகளாக இருப்பதால், வரலாற்று நிபுணர்களின் முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளன.
|
|