• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-03-03 09:47:57    
விவசாயிகள் வருமானத்தை அதிகரிக்கின்ற liaoning மாநிலம்

cri
கடந்த சில ஆண்டுகளாக, சீனாவின் வடக்கிழக்கு பகுதியிலான liaoning மாநிலம், பல்வகை தொழில்கள் நடத்தி, உள்ளூர் பொருளாதாரத்தை வளர்ச்சியுறச் செய்வதன் மூலம், விவசாயிகளின் வருமானத்தைப் பெரிதும் உயர்த்தியுள்ளது. விவசாயிகள் பெற வேண்டிய வேலை வாய்ப்புகளும் மேலும் பல்வகைகளாகியுள்ளன.


கடந்த சில ஆண்டுகளாக, தொழில்துறைக்கும் வேளாண்துறைக்குமிடை சரிசமமான ஒருங்கிணைப்பான வளர்ச்சியை நிறைவேற்றுவதற்காக, liaoning மாநிலம் பல்வகை பொருளாதார வடிவமைகளைப் பெரிதும் வளர்க்க ஊக்குவித்ததுள்ளது. அங்குள்ள fengcheng நகரின் dalishu என்ற கிராமம், கூட்டுடைமை கொண்ட பொருளாதாரத்தை வளர்ப்பதன் மூலம், விவசாயிகள் அனைவரையும் செல்வபெருக்குடையவர்களாக முன்னேறச் செய்துள்ளது.
மலை குன்றில் அமைந்துள்ள dalishu கிராமத்தின் இயற்கை சூழ்நிலை சிறந்ததில்லை. ஆனால், இக்கிராமத்தின் கம்யூனிஸ்ட் கட்சி குழுவின் செயலாளர் mao fengmei இன் தலைமையில், குன்றுகளை 1800 ஹெக்ட்டர் நிலப்பரப்புடைய பழத் தோட்டமாக விவசாயிகள் மாற்றியுள்ளனர். இது தவிர, கிராமத்தில் 700 ஹெக்ட்டருக்கு மேலான சீன பாரம்பரிய மூலிகை பயிரிடும் தளமும், வேதியியல் உரத் தயாரிப்பு தொழிற்சாலையும் கிராமவாசிகள் நடத்தியுள்ளனர். வாகன உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை, வர்த்தக சந்தை முதலிய சேவைத் துறைகளும் தொடங்கப்பட்டன. இவை எல்லாம், இங்குள்ள விவசாயிகளுக்கு அதிக வருமானத்தை கொண்டு வந்துள்ளன.


தற்போது, dalishu கிராமத்தின் 400க்கு அதிகமான குடும்பங்கள், சிறுபான்மை தேசிய இன பாணி கொண்ட வீடுகளில் வாழ்கின்றன. 40க்கு மேலான குடும்பங்கள் சிற்றுந்துகளை வாங்கி ஒடுகின்றன. Li qingzhong என்னும் விவசாயி, அவர்களில் ஒருவராகும். கடந்த சில ஆண்டுகளில் கூட்டுடைமை கொண்ட பொருளாதாரத்தை வளர்பதன் மூலம், இக்கிராமத்துக்கு ஏற்படுத்திய மாற்றங்களைக் குறிப்பிட்ட போது, அவர் கூறியதாவது,


என் குடும்பத்தில் 6 பேர் உள்ளனர். ஆண்டு நபர்வாரி வருமானம், சுமார் 20 அல்லது 30 ஆயிரமாகும். Wuweizi என்ற சீன பாரம்பரிய மூலிகை பயிரிடுவது எங்கள் செழுமையான வாழ்க்கையின் காரணமாகும் என்று அவர் கூறினார்.
சீனப் பாரம்பரிய மூலிகை பயிரிடுவதன் மூலம், Li qingzhong வளமடைந்தார். Guanxin என்னும் விவசாயி, பயிரிடுதலை தவிர, சரக்கு போக்குவரத்து மூலமும் தனது வாழ்க்கையை மேம்படுத்தி, வருமானத்தை அதிகரித்தார். இது பற்றி அவர் கூறியதாவது,
என் வீட்டில் 4 பேர் உள்ளனர். ஆண்டு நபர்வாரி வருமானம் 20 ஆயிரத்துக்கு மேலான யுவான் ஆகும். எங்களுக்கு சில லாரி உண்டு. இதனால் வெளி ஊருக்குச் சென்று வேலை செய்ய முடிகிறது. எங்கள் கிராமத்துக்குள், சரக்கு போக்குவரத்து பணியையும் செய்ய முடிகிறது. இதனால் ஆண்டு வருமானம் மிகவும் அதிகமானது என்று அவர் கூறினார்.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 17வது தேசிய மாநாடு, விவசாயிகளுக்கு சலுகை தரும் பல கொள்கைகளை முன்வைத்தது. தங்கள் கிராமத் தலைவர்களின் தலைமையுடன், எதிர்கால வாழ்க்கை மீது அவளுக்கு நிறைந்த நம்பிக்கை உண்டு என்று Guanxin அம்மையார் கூறினார்.
கூட்டுடைமை கொண்ட பொருளாதாரத்தை வளர்ப்பது என்பது, இங்குள்ள விவசாயிகள் வளம் பெற்ற முக்கிய வழிகளில் ஒன்றாகும் என்று dalishu கிராமத்தின் பொறுப்பாளர் Maofengmei கருதுகின்றார்.


கூட்டுடைமை கொண்ட பொருளாதாரத்தை, வளர்ப்பதில், கிராம நிலை பொருளாதாரத்தை வளர்ப்பது, மிக முக்கியமானது. நகரவாசிகளை விட, விவசாயிகள் மேலும் இனிமையான வாழ்க்கையை வாழச் செய்வது என்பது, எனது நோக்கமாகும். அதனால் எங்கள் எதிர்காலம் மேலும் சிறப்பானது என்று நம்புவதாக அவர் கூறினார்.
liaoning மாநிலத்தில், கூட்டுடைமை கொண்ட பொருளாதாரம் நன்றாக வளர்ந்த இடங்களில், மக்கள் அதிகமான வருமானம் பெற்று செல்வ செழிப்போடு வாழ்கின்றனர். அங்குள்ள வேளாண்மை, புதிய வரலாற்று நிலைக்கு வளர்ந்துள்ளது. விவசாயிகளின் வருமானத்தை மேலும் அதிகரித்து, கிராமத்தில் கூட்டுடைமை கொண்ட பொருளாதாரத்தை எவ்வாறு வளர்ப்பது என்பது, அவர்கள் கருதி கொண்டுள்ள பிரச்சினையாகும். liaoning மாநிலத்தின் வேளாண் குழுவின் துணை தலைவர் lizhongguo எமது செய்தியாளருக்குப் பேட்டியளித்த போது, இவ்வாறு கூறினார்.


பொது நிதியை, கிராமங்களுக்கு அதிகமாக அளிக்க வேண்டும். கிராமங்களின் வளர்ச்சியில், உள்புற மற்றும் வெளிபுற சக்திகள் கூட்டாக பாடுபாட வேண்டும். அரசு மற்றும் சமூகத்தின் சக்திகள், வெளிபுற சக்திகளாகும். உள்புற சக்தி, விவசாயிகள் தான். கிராமப் பொருளாதாரத்தை எப்படி வளர்பது என்பது குறித்து, நாங்கள் liaoning மாநிலத்தின் நடைமுறைக்கு ஏற்ப, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 17வது தேசிய மாநாட்டின் எழுச்சியின்படி, கண்ணோட்டங்களைச் சரிபடுத்தி வருகின்றோம் என்றார் அவர்.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 17வது தேசிய மாநாடு, கிராமபுற வளர்ச்சிக்கு ஆதரவளிக்கும் பல கொள்கைகளை முன்வைத்தது. இதைக் கண்டு, நானும் இக்கிராமத்தின் பிற விவசாயிகளும், பெரும் மகிழ்ச்சியடைகிறோம். இக்கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு, விவசாயிகள் சந்திக்கும் பிரச்சினைகள் பயனுள்ள முறையில் தீர்க்கப்பட வேண்டும் என்று Da lishu கிராமத்தின் தலைவர் mao fengmei விருப்பம் தெரிவித்தார்.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 17வது தேசிய மாநாட்டிற்குப் பின், வேளாண்துறையின் வளர்ச்சிக்கான கொள்கைகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இக்கொள்கைகள் எப்படி நடைமுறைப்படுத்தப்படுவது என்பது மிக முக்கியமானது என்று அவர் கூறினார்.