• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-03-04 11:10:54    
ஹுவாங் பேரரசரின் கல்லறை

cri

ஹுவாங் பேரரசரின் கல்லறை, ஷான் சி மாநிலத்திலுள்ள ஹுவாங் லிங் மாவட்டத்தின் ச்சியௌ மலையின் உச்சியில் அமைந்துள்ளது. ஹுவாங் பேரரசர், சீன நாட்டின் முற்கால சமூகத்தின் இறுதி காலத்தின் தலைசிறந்த பழங்குடி இன தலைவராவார். சீனத் தேசத்தை ஒன்றுப்படுத்திய சாதனையால், அவர் வரலாற்று புதிவேட்டில் சேர்க்கப்பட்டார். உற்பத்தியைப் பெரிதும் வளர்த்து, எழுத்துக்களை உருவாக்கி, ஆடைகள் மற்றும் தொப்பிகளைத் தயாரிப்பதில், சீனத் தேசத்தின் பழங்கால நாகரிகத்தைத் துவக்கிய மூதாதையர் என அவர் அழைக்கப்படுகிறார்.

ஹுவாங் பேரரசரின் கல்லறை, ச்சியௌ மலையில் உள்ளது. அங்கு தெளிந்த ஆறுகளும், பச்சையான மலைகளும், தேவதாரு மரங்களும், இருக்கின்றன. நன்கு காலங்களிலும், இங்கு, பச்சைப் பசேல் என்ற காட்சி அழகாக இருக்கிறது. மலையடிவாரத்தில், ஒரு பெரிய பாதை, கல்லறைக்கு நேராக செய்கிறது. கல்லறையின் விதான மண்டபத்தின் நடுவிலுள்ள ஒரு உயரமான கற்சானத்தில், ஹுவாங் பேரரசரின் கல்லறை என்ற மூன்று சீன எழுத்துகள் எழுதப்பட்டுள்ளன. இவ்விதான மண்டபத்தின் பின்புறத்திலுள்ள ஒரு கற்சானத்தில், ச்சியௌ ஷான் லோங் துயொ என்ற நன்கு எழுத்துக்கள் எழுதப்பட்டுள்ளன. இக்கல்லறை, மலையின் உச்சியின் நடுவில் இருக்கிறது. அது, 3.6 மீட்டர் உயரமும், 48 மீட்டர் சுற்றளவும் கொண்டது.

ஹுவாங் பேரரசரின் கோயில், சதுர வடிவமாகக் காணப்படுகிறது. இக்கோயிலின் வாயில், தெற்கு திசையை நோக்கி அமைந்துள்ளது. வாயிலின் மேல், சியுவான் யுவான் கோயில் என்ற மூன்று எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. கோயிலுக்குளுள்ள மண்டபத்தின் நடுவில், ஹுவாங் பேரரசரின் மாபெரும் நினைவு பலகை வைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலின் தோட்டத்தில், ஒரு பெரிய சைப்பிரஸ் மரம் வளர்கிறது. இது, ஹுவாங் பேரரசர் தாமாகவே நட்ட மரம் என்று அறியப்படுகிறது. இது வரை, 4 ஆயிரம் ஆண்டுகள் ஆகியுள்ளன. அது, 19 மீட்டர் உயரமும், 10 மீட்டர் சுற்றளவும் உடையது. இம்மரம், உலக சைப்பிரஸ் மரங்களின் தந்தை என அழைக்கப்படுகிறது.

இக்கல்லறை, சீனாவின் முதல்தர கல்லறை என அழைக்கப்படுகிறது. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக, ஒவ்வொறு ச்சிங் மிங் விழா நாட்களிலும், இங்கு வந்து, வணக்கம் செலுத்துகின்ற பயணிகளின் எண்ணிக்கை, அதிகமாக இருக்கிறது.