வாணி -- இன்று நாம் தங்களுக்கு இன்னொரு சுவையான சீன உணவு வகையை அறிமுகப்படுத்துகின்றோம். க்ளீட்டஸ் -- ஆமாம். இன்று நாம் ஒரு மீன் இறைச்சி உணவின் தயாரிப்பு பற்றி கூறுகின்றோம். இது சீனாவில் ஒரு நீண்ட வரலாறுடைய உணவு வகையாகும் என்று கேல்விப்பட்டேன். வாணி, இது பற்றி நேயர்களுக்கு கொஞ்சம் விளக்கம் செய்யலாமா?
வாணி -- கண்டிப்பாக. இன்று நேயர்களுக்கு அறிமுகப்படுத்தப்படும் மீன் சூப், சீனாவின் சான் சி மாநிலத்து சி ஆன் நகரில் ஒரு பாரம்பரிய உணவாகும். 1000 ஆண்டுகளுக்கு முந்திய தாங் வம்ச மன்னர் மாளிகையில் மன்னருக்கு தயாரித்த ஒரு உணவு வகையிலிருந்து இது உருவாக்கப்பட்டது. சீனாவில் மிக புகழ்பெற்ற ஒரு உணவு வகையாகும். க்ளீட்டஸ் -- ஓ. அப்படியா. பழங்கால மன்னருக்கான உணவா? இதன் தயாரிப்பு எளிதல்ல என்று எண்ணுகின்றேன்.
வாணி -- பரவாயில்லை. இதன் தயாரிப்பு நேரம் சுமார் 30 நிமிடங்கள் மட்டுமே. க்ளீட்டஸ் -- சரி, நேயர்களுக்குத் தேவையான பொருட்களை எடுத்து கூறுங்கள். வாணி -- முதலில், 700 கிராம் எடையுள்ள ஒரு ஆற்று மீன் தேவைப்படும். மூங்கில் தண்டு 15 கிராம் காளாண் 5 ham 10 கிராம் கோழி சூப் 1500 கிராம் சமையல் மது 15 கிராம் வெங்காயம் போதிய அளவு இஞ்சி 4 தண்டுகள் மிளகாய் தூள் 1 கிராம் கொத்த மல்லி சிறிதளவு காடி 2 தேக்கரண்டி உப்பு 5 கிராம் சமையல் எண்ணெய் 2 தேக்கரண்டி
க்ளீட்டஸ் -- தேவையான பொருட்கள் அதிகமே. வாணி -- ஆமாம், நேயர்கள், விருப்பத்திற்கேற்ப இவற்றைத் தயாரிக்கலாம். வாணி -- முதலில், மீனின் செதில்கள், வயிற்றுள்ளவை ஆகியவற்றை நீக்கவும். ஓடும் நீரில் மீனைச் சுத்தம் செய்ய வேண்டும். தலைப் பகுதி தேவையில்லை. நடு எலும்பை நீக்கி மீனை 2 பகுதிகளாக்க வேண்டும். பிறகு, மீன் இறைச்சியை துண்டு துண்டாக நறுக்கிக் கொள்ளவும்.
க்ளீட்டஸ் -- காளாண், மூங்கில் தண்டு, பன்றி இறைச்சி ஆகியவற்றையும் சுத்தம் செய்ய வேண்டும் பிறகு, இவற்றை தனித்தனியாக துண்டாக நறுக்க வேண்டும். வாணி -- வாணலியை அடுப்பின் மீது வைத்து, இதில் எண்ணெயை ஊற்றவும். அதிக சூட்டில் கொதிக்க வைத்தப் பின், மீன் துண்டுகளை இதில் போடலாம். இவற்றை பொன் நிறமாக வரை நன்றாக வறுக்க வேண்டும். பிறகு, சமையல் மது, வெங்காயம், இஞ்சி ஆகியவற்றை இதில் சேர்க்கலாம். நன்றாக கலந்து செய்த பிறகு, கோழி சூப்பை இதில் ஊற்றலாம். நல்ல சூட்டில் வேகவிடுங்கள்.
க்ளீட்டஸ் -- கடைசியில், நறுக்கப்பட்ட காளாண், பன்றிறைச்சி, மூங்கில் தண்டு ஆகியவற்றை சூப்பில் கொட்டலாம். உப்பு சேர்க்கப்படலாம். மேலும், 5 நிமிடங்கள் கொதிக்கவிடுங்கள். க்ளீட்டஸ் -- சரி, நேயர்களே, இன்றைய மீன் சூப் தயார் க்ளீட்டஸ் -- சாப்பிடும் போது, சூப்பில் மிளகாய் தூள் சேர்க்கலாம். காடி, கொத்த மல்லி ஆகியவற்றை மற்றொரு தட்டில் கலந்து வைக்கலாம். இறைச்சியை சூப்பிலிருந்து எடுத்து, இந்த கலவையுடன் சேர்த்து சாப்பிட்டால், மேலும் சுவையானது.
|