• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-03-04 09:54:43    
நிகழ்ச்சிகளை கேட்ட பின் நேயர்கள் தெரிவித்த கருத்துக்கள்

cri

கலை:சீன வானொலி நிகழ்ச்சிகள் பற்றிய கடிதம் மற்றும் மின்னஞ்சல் மூலமான உங்கள் கருத்துப் பதிவுகளை ஒலிபரப்பி, வானொலி நேயர் நண்பர்கள் அனைவருக்கும் அறிய செய்யும் இந்நிகழ்ச்சி வழியாக உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. இன்றைய நிகழ்ச்சியின் முதலாவதாக பழனி பி.சுரேஷ்குமார் எழுதி அனுப்பிய கடிதம். நான் எழுதி கேட்டவுடன் எனக்கு நேயர் எண்ணும், தமிழ் மூலம் சீனம் புத்தகமும் அனுப்பி கொடுத்தீர்கள். இவ்வாறு நேயர்களுக்கு விரைவாக சிறப்பு செய்யும் சீன வானொலிக்கு நிகர் வேறு எந்த வானொலியும் இல்லை. மலர் சோலை நிகழ்ச்சியில் மனம்நெகிழ வைத்த பன்றி பற்றிய செய்தி வியப்பாக இருந்தது.
தமிழன்பன் தொடர்வது மணச்சநல்லூர் என். சண்முகம் எழுதிய கடிதம். மக்கள் சீனம் நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படாமல் இருக்க இயற்கை எரியாற்றலுக்கான முயற்ச்சிகள் பற்றி அறிந்து கொண்டேன். சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்கு சீனா மேற்கொள்ளும் முயற்சிகள் வியக்கதக்கதாகவும், உலகிற்கு பங்களிப்பதாகவும் உள்ளது. சீன சமூக வாழ்வு நிகழ்ச்சியில் மதிவண்டி சுற்றுச்சூழலுக்கு ஏற்றதாக உள்ளதோடு உடற்பயிற்சிக்கு சிறந்தது எனவும் அறிந்தேன். சீனாவில் மதிவண்டி பயன்பாடு அதிகம் என்று அறிந்து மகிழ்ந்தேன்.


கலை: அடுத்ததாக நடுப்பட்டி வி. ஏகாம்பரம் எழுதிய கடிதம். சீன வானொலியை கேட்கின்ற இலட்சக்கணக்கான நேயர்களில் நானும் ஒருவன். உலகெங்கும் தமிழ்மணம் வீசச்செய்யும் சீன வானெலியின் புகழ் மேலும் வளர வேண்டும். மிகவும் பயனுள்ள முறையில் இருப்பதால் இன்னும் ஒலிபரப்பு நேரத்தை அதிகரிக்கலாம் என்று பரிந்துரைக்கிறேன். சீன மொழியை கற்கவும் ஆவலாய் இருக்கிறேன்.
தமிழன்பன் ஏகாம்பரம் அவர்களின் சீன மொழி கற்றுக்கொள்ளும் ஆவலை பாராட்டுகின்றோம். முயன்றால் முடியாதது இல்லை. உங்கள் அயரா முயற்சி வெற்றிபெற வாழ்த்துக்கள். அடுத்து கடையாலுருட்டி எம். பிச்சைமணி கேள்வியும் பதிலும் நிகழ்ச்சி பற்றி எழுதிய கடிதம். எய்ட்ஸ், காசநோய், மற்றும் மலேரியா தடுப்பிற்கு அரசு மற்றும் கூட்டாண்மை நிறுவனங்கள் உதவுவது, இரத்த பரிசோதனை, இரத்ததானம், புச்சிதடுப்பு மருந்து கண்காணிப்பு ஆகியவற்றை அரசு செய்து வருவது ஆகியவை மனிதநேய அரசின் செயல்பாட்டை விளக்குகிறது. மேலும் இன்னுனொரு கேள்வியும் பதிலும் நிகழ்ச்சியில் எரியாற்றல் சிக்கனம் பற்றி கேட்டேன். கிராமபுறங்களில் கூட முன்னேறிய தொழில்நுட்பங்களான உயிரின, சூரிய மற்றும் காற்று ஆற்றல்களை பயன்படுத்த ஏற்பாடு செய்வது பிரமிக்க வைக்கிறது. நோய் தடுப்பிற்கான அரசின் மனிதநேய செயல்பாடுகளை பற்றி ஜே. முஜிப்புர் ரஹிமான் தனது கடிதத்தில் தெரித்திருக்கின்றார்.


கலை: பாலூர் சமயசஞ்சீவி எழுதிய கடிதம். புத்தாண்டே உனது வரவு எங்கள் அனைவருக்கும் புகழ் மற்றும் வளம் சேர்பதாக வாழ்த்தியுள்ளதோடு, புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிகள், அதில் பணியாளர்களின் பங்கேற்புக்கள் அனைத்தும் அருமையாக இருந்தன. பணியாளர்கள் பாடிய பாடல்கள் அனைத்தும் இனிமையாய் அமைந்தன என்றும் பாராட்டியுள்ளார். இதே கருத்துக்களை பாத்திகாரன்பட்டி அந்திமலர், லோ. மகேஷ்வரன், திமிறி சுந்தரராஜன், ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
தமிழன்பன் திருவாரூர் எம். எஸ். பசீர் அஹ்மது நட்புபாலம் நிகழ்ச்சி குறித்து எழுதிய கடிதம். கலையரசி அவர்கள் மலேசியாவிலிருந்து சீன மொழி கற்றுக்கொள்ள பெய்ஜிங் வந்துள்ள மாணவி நித்தியாவுடன் கண்ட பேட்டி ஆர்வத்தை தூண்டியது. நித்தியாவின் உள்ளார்ந்த ஆவல்களை வெளிக்கொணரும் விதமாக கேள்வி கேட்கப்பட்டது அனுபவபுர்வமானதாக அமைந்திருந்தது. சீனாவின் மொழி, கலை, பண்பாடு, இலக்கியம் ஆகியவற்றை கற்க உள்ள அவரது பெருமிதமான குரலிலிருந்து சீன மொழியை கற்க வேண்டும் என்ற ஆசை பிறந்தது.


கலை: அடுத்தாக காத்தான் குடியிலிருந்து எம். ஆர். எம். வலீதி அனுப்பிய கடிதம். அவர் நேயர்கள் அனைவருக்காகவும் எழுதியுள்ள கவிதையை உங்களுக்கு வழங்குகிறோம்.
பகல் இருந்தால் இரவிருக்கும் - இறைவன் நீதி
வரவிருந்தால் செலவிருக்கும் - வாழ்க்கை நீதி
உறவிருந்தால் பிரிவிருக்கும் - உலக நீதி
பழகிய பின் பிரிவதெல்லாம் - மனித நீதி
அன்பால் இணைவதெல்லாம் - இன்றைய நீதி
தமிழன்பன் எம். ஆர். எம். வலீதி, சிறந்தொரு கவிதையை நேயர்களுக்காக வழங்கியமைக்கு நன்றி. இவ்வாறு பலநூறு கவிதைகள் படைத்து தமிழ் கவிஞராய் வளர்ந்து, வலம் வர எங்கள் வாழ்த்துக்கள். அடுத்து வளவனூர் உமா காயத்திரி சீனாவில் இன்பப்பயணம் நிகழ்ச்சி பற்றி எழுதிய கடிதம். கலைமகள் கூறிய புத்தர் சிலை தாமரை புவின் நடுவில் அமர்ந்திருப்பது என்ற தகவல் என்னை கற்பனையில் ஆழ்த்தியது. அத்தகைய அருமையான பண்பாட்டு தளத்தை நேரில் சென்று பார்க்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது. அதன் புகைப்படத்தையாவது பார்த்துவிட வேண்டும் என்று எண்ணுகின்றேன். அமர்ந்த நிலையிலான புத்தரைப்பற்றி இராசிபுரம் எஸ். ஸ்ரீ ஆண்டாள் அவர்களும் குறிப்பிட்டு கடிதம் எழுதியுள்ளார்.


கலை: தொடர்வது காந்திபுரம் தி. கார்த்திக் எழுதிய கடிதம். அறிவியல் உலகம் நிகழ்ச்சி கேட்டேன். சுற்றுச்சூழல் மாசுபாடுகளை ஏற்படுத்தாத சிற்றுந்துகளை தயாரிப்பதில் சீனா உறுதியுடன் ஆய்வு செய்து வருவதை அறிந்தேன். சூரிய, மின்சார, கலப்பு மின்கல ஆற்றல்களை பயன்படுத்தி சீன தாயாரிக்கும் சிற்றுந்துகளை இந்த உலகமே எதிர்நோக்கி கொண்டிருக்கிறது. இத்தகைய சிற்றுந்துகள் சுற்றுச்சூழல் மேம்பாட்டில் புரட்சியை உருவாக்கும்.


மின்னஞ்சல் பகுதி
திருச்சி அண்ணா நகர் வி.டி.இரவிச்சந்திரன்
பல்வகையில் வசந்த விழாவினை கொண்டாடும் சீன மக்களின் வசந்தவிழா கொண்டாட்ட நடவடிக்கைகளை செய்தித் தொகுப்பி்ல் கலையரசி வழங்கினார். சீனர்களைப் பொறுத்தவரை, சீன புத்தாண்டு கொண்டாட்டம் என்பது அவர்களது வாழ்வில் பின்னிப் பிணைந்த ஒன்று. ஏழையானாலும், பணக்காரன் என்றாலும் குதுலமாக கொண்டாடி மகிழ்வர். ஒரு நாட்கள் இரண்டு நாட்கள் அல்ல ஒரு வாரம் முழுவதும் சீனப் புத்தாண்டினை சீனர் வரவேற்பர். சீன வம்சாவழிகள் நாட்டில் 6 ஆண்டுகள் சீனர்களின் புத்தாண்டு கொண்டாட்டத்தை நேரில் கண்டு ரசித்துள்ளேன். வம்சாவழிகள் உள்ள நாட்டிலேயே இந்தளவு சிறப்பு என்றால், சீனாவில் சொல்லவும் வேண்டுமா?


.........திருப்பூர் இரா.சின்ன‌ப்ப‌ன்..............
"மக்களின் வாழ்க்கை தர உயர்வுக்கான முயற்சி" என்ற மக்கள்சீனம் நிகழ்ச்சி மூல‌ம் சீன‌அர‌சு ந‌டைமுறைப் ப‌டுத்திவ‌ரும் திட்ட‌ங்க‌ளான, மக்கள் மருத்துவ சிகிச்சை பெறும் சூழ்நிலையை மேம்படுத்துவது, முதியோருக்கான காப்புறுதித் தொகையை அதிகரிப்பது, தொடக்க மற்றும் இடைநிலை பள்ளி மாணவர்களுக்கு இலவச கட்டாய கல்வி வழங்குவது, குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு வீட்டுடைமை காப்புறுதி வழங்குவது போன்ற நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு ம‌க்க‌ளின் வாழ்க்கைத்த‌ர‌ம் சீர‌டைந்துள்ள‌து என் அறிய‌முடிந்த‌து.
'விளையாட்டுச்செய்திகள்' நிகழ்ச்சி கேட்டேன். தொழிற்சாலைகளில் பணிபுரிவோர்,அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்,மாணவ மாணவிகள்,விளையாட்டு வீரர்கள் அடங்கிய சுமார் 16 ஆயிரத்து 663 பேர் மார்ச் மாதம் 20 ஆம் தேதிமுதல் 2008 பீய்ஜிங் ஒலிப்பிக் தீபம் ஏந்தி சீனாவை வளம் வர இருக்கிறார்கள் என்ற செய்தி கேட்டதும் இந்நிகழ்ச்சியை தங்களின் இணையதளத்தில் காண ஆவல் ஏற்படுத்தியது.


….விழுப்புரம் எஸ்.பாண்டியராஜன்….
இந்திய அரசு வழங்கும் பத்மபூஷன் விருது பெற்ற ஜியாலின், சீனாவிற்கு பெருமை தேடித்தந்துள்ளார். அவருக்கு எங்கள் பாராட்டுக்கள். அறிவியல் கல்வி மற்றும் நலவாழ்வு பாதுகாப்பு நிகழ்ச்சியில் காப்புரிமை பற்றிய செய்திகள், மேலாதிக்க நாடுகளின் வஞ்சகத் தன்மையை வெளிப்படுத்தியது. காப்புரிமை செயல்பாடுகளில் வளரும் நாடுகள் ஒன்றுசேர்ந்து செயல்பட்டால்தான் அந்தந்த நாட்டின் கண்டுபிடிப்பு, முறைவழிகளுக்கு உரிமை கொண்டாடலாம். இல்லை என்றால் மேலாதிக்க நாடுகள் வளரும் நாடுகளை மிரட்டுவதோடு, காப்புரிமை போன்ற வஞ்சக செயல் மூலமும் சுரண்டி வருவது தெரிகிறது.


……வளவனுர் புதுப்பாளையம் எஸ்.செல்வம்……
ஜனவரித் திங்கள் 29 ஆம் நாள் இடம்பெற்ற •சீனப் பண்பாடு• நிகழ்ச்சியில் சீனக் குடும்பப் பெயர்கள் பற்றிய சுவையான தகவல்களை வழங்கினார் கிளிட்டஸ் அவர்கள். குடும்பப் பெயர்களில் அதிக அளவில் பயன்படுத்தப்படும் முதல் 10 குடும்பப் பெயர்களை வைத்துக் கொண்டவர்களின் எண்ணிக்கை, சீனாவின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 40 விழுக்காடு என்பதை அறியும்போது, குடும்பப் பெயர்களின் மீது சீனர்கள் காட்டும் ஆர்வத்தை புரிந்து கொள்ள முடிகின்றது. சீன சமூகத்தில் உள்ள பண்பாட்டுப் பழக்க வழக்கங்களைப் பற்றி தொடர்ந்து அறிந்து கொள்ள மிகவும் ஆவலுடன் இருக்கின்றேன்.