• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-03-05 16:06:46    
சீனாவில் பெல்ஜிய நாட்டவரான Johan Caretteவின் வாழ்க்கை

cri
சீனாவின் குவான் சி சுவாங் இனத் தன்னாட்சி பிரதேசத்தின் தென் மேற்கு பகுதியில் Chong Zuo நகரம் அமைந்துள்ளது. இங்குள்ள மங்கனிசு படிவுகள், சுமார் 15 கோடி டன்னாகும். இந்த அளவு, சீனாவில் முதலிடம் வகிக்கின்றது. பிரான்சு நாட்டின் Eramet குழுமம், இரும்பற்ற உலோகம், உலோகக் கலவை ஆகியவற்றின் தயாரிப்பு மற்றும் உருக்குதலில் ஈடுபடுகிறது. இது தனது அலுவலகங்களை, உலகம் முழுவதிலும் பரவல் செய்துள்ளது. 2004ஆம் ஆண்டு இக்குழுமம் முதலீடு செய்து, Chong An நகரில் கார எரிமக்கலன் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை நிறுவியது. அப்போது 43 வயதான பெல்ஜிய நாட்டவர் Johan Carette, சீனாவுக்கு அனுப்பப்பட்டார். அவர் இத்தொழிற்சாலை நிறுவுவதற்கு ஆயத்தப் பணி செய்ததோடு, இத்தொழிற்சாலையின் பொறுப்பாளி பதவியையும் ஏற்றார்.
சீனாவுக்கு வந்த துவக்கத்தில், அவரின் வாழ்க்கை கடினமாக இருந்தது. அவர் கூறியதாவது:
"இங்கு வந்த பின், மொழி பிரச்சினை, எனக்கு ஏற்பட்ட முதலாவது தடையாகும். என்னால் சீன மொழியைப் பேச முடியாது. பரவாயில்லை. அதற்கு பொழிபெயர்பாளர் இருக்கின்றார். எனது தாய்மொழி, பிரெஞ்சு மொழியாகும். ஆங்கில மொழி அல்ல. இருந்த போதிலும், இங்கு வந்த பின், ஆங்கில மொழி மூலம் மற்றவர்களுடன் கருத்துக்களைப் பரிமாறி கொண்டுள்ளேன். நாம் பரஸ்பரம் புரிந்து கொண்டு, பணியை நிறைவேற்றியுள்ளோம்" என்றார், அவர்.


இரண்டு ஆண்டுகளுக்குப் பின், 2007ஆம் ஆண்டின் ஏப்ரல் திங்கள், இத்தொழிற்சாலை அதிகாரப்பூர்வமாக உற்பத்தியில் இறங்கியது. அதில் சுமார் 200 தொழிலாளர்கள் உள்ளனர். முதலீட்டுத் தொகை, ஏறக்குறைய 3 கோடி அமெரிக்க டாலராகும். தொழிற்சாலை உற்பத்தியில் இறங்கிய பின், Johan Carette மேலும் சுறுசுறுப்பாக பணியில் ஈடுபட்டார். நாள்தோறும் இரவு 9 மணி வரை அவர் தொழிற்சாலையில் வேலை செய்கின்றார். அவரின் சக பணியாளர்களின் கருத்தில், Johan பணி பயனில் கவனம் செலுத்தி, முழுமையை நாடுகின்றார். சீனா, மென்மெலும் வேகமாக வளர்ந்து வருகின்றது என்றும், வளர்ச்சி வாய்ப்பை இறுகப்பற்ற, மேலும் பாடுபட வேண்டும் என்றும் Johan Carette கூறினார். அவர் கூறியதாவது:

"சில விடயங்கள் அருமையாக இல்லை என்ற போதிலும், சீனாவின் வளர்ச்சிக்கான வாய்ப்பு அதிகம். சீன மக்கள் முயற்சிகள் மேற்கொள்கின்றனர். சீனாவின் பெரிய மேம்பாடு இதுவாகும். கடந்த சில ஆண்டுகளாக, சீனப் பொருளாதாரம் ஆண்டுக்கு 8 விழுக்காட்டுக்கு மேல் அதிகரித்துள்ளது. பொருளாதார வளர்ச்சிக்கு வலுவான உயிராற்றல் உண்டு" என்றார், அவர்.
படிப்படியாக சீனாவைச் சேர்ந்த சக பணியாளர்கள் பலர், Johan Caretteவின் நண்பர்களாக மாறியுள்ளனர். அவர் சீனப் பண்பாட்டைப் புரிந்து கொள்வதற்கு இது துணை புரியும். Johan கூறியதாவது:
"பரஸ்பரம் தொடர்பு கொள்வதுடன், சக பணியாளர்கள் பலருடன் நண்பராக பழகுகின்றேன். நாம் பணி புரிவதோடு, பல்வகை தகவல்களைப் பரிமாறிக் கொள்கின்றோம். ஆனால், பண்பாட்டில் சில தடைகள் இன்னும் நிலவுகின்றன" என்றார், அவர்.
சீனாவில் தங்கியுள்ள மூன்று ஆண்டுகளில், சீனாவின் பல நகரங்களுக்கு Johan Carette சென்றுள்ளார். எடுத்துக்காட்டாக, சீனாவின் தலைநகரும், அரசியல் மற்றும் பண்பாட்டு மையமுமான பெய்சிங், பொருளாதாரம் மற்றும் நாணய மையமான ஷாங்காய், மேற்கு பகுதியில் உள்ள பண்டைக்காலத்தின் தலைநகரமான Xi An, வட சீனாவிலுள்ள தொழிற்துறை நகரங்களை Tai Yuan, Da Tong, கடலோர நகரங்களான Da Lian மற்றும் Qing Dao போன்ற சீனாவின் பெரும்பாலான பகுதிகளில் Johan Carette பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நகரங்கள் பற்றி Johan கூறியதாவது:


"Nan Ning நகரம், மிக சிறந்த பசுமை நிறைந்த நகரமாகும். நான்கு பருவங்களிலும் இங்கு தாவரங்கள் பசுமையாக உள்ளன. Da Lian மற்றும் Qing Dao அழகானவை. பெய்சிங்கின் பண்பாட்டுச் சூழல் நல்லது. ஷாங்காய் மாநகரின் புதிய Pu Dong பிரதேசத்தின் பொருளாதாரம் விரைவாக வளர்ந்து வருகிறது" என்றார், அவர்.
பன்னாட்டு நிறுவனத்தின் நிர்வாகி என்ற முறையில், Johan சீனாவில் சோதனைப் பயணம் மேற்கொண்டுள்ளார். பல்வேறு இடங்களின் அரசுகள், பொருளாதாரத்தை வளர்ப்பதற்கு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளிலும், அதில் பெறப்பட்டுள்ள பயனிலும் அவர் கவனம் செலுத்தி, சீனாவின் வேகமான வளர்ச்சியைப் பாராட்டுகின்றார். குழந்தை பருவத்தில் சீனாவை பற்றி கேள்விப்பட்டு, படங்கள் மற்றும் நூல்களின் மூலம், அவர் சீனாவை அறிந்து கொண்டார். அப்போதே அவர் சீனா மீது பற்று கொண்டார். அவ்வேளையில் சீனா, பழமை வாய்ந்த பண்பாட்டின் ஊற்றுமூலம் என்று மட்டுமே அவர் அறிந்து கொண்டார். ஆனால், சீனாவுக்கு வருகை தந்த பின், சீனாவின் வெளிநாட்டுத் திறப்புப்பணியும், நவீனமயமாக்க அளவும், தமது கற்பனைக்கு அப்பால் உள்ளன என்று அவர் கூறினார். அவர் கூறியதாவது:
"சீனாவைப் புரிந்து கொள்ள வேண்டுமானால், சீனாவில் தங்கியிருக்க வேண்டும். சீனாவில் தங்கியிருந்தால் மட்டுமே, சீனாவை முழுமையாக புரிந்து கொள்ள முடியும்" என்றார், அவர்.
சீனாவின் வேகமான வளர்ச்சி மற்றும் சீன மக்களின் அயராத உழைப்பு, சீனாவின் மிக பெரிய தனித்தன்மையாகும். சீனாவின் வெளிநாட்டுத் திறப்புக் கொள்கையை அவர் வெகுவாக பாராட்டுகின்றார். அவர் கூறியதாவது:
"வெளிநாட்டுத் திறப்பு கொள்கை, மிகவும் நல்லது. சீனாவுக்கு மட்டுமல்ல, மேலை நாடுகளுக்கும் இது நல்லது" என்றார், அவர்.
இது வரை, Johan சீன மொழியை சரளமாக பேச முடியாத போதிலும், அவரின் சக பணியாளர்களின் கருத்தில், அவர் சீனாவை மிகவும் புரிந்து கொண்டுள்ளார். அவரின் உதவியாளர் Cai Lan Juan அம்மையார் கூறியதாவது:


"அவர் சீனாவுக்கு வந்து, மூன்று ஆண்டுகள் ஆகின்றன. சீன மக்களின் செயல்முறையை Johan நன்றாக புரிந்து கொண்டுள்ளார். சில வணிகர்களுடன் உறவாடும் போது, அவர்களின் கருத்துக்களை Johanனால் புரிந்து கொள்ள முடியும்" என்றார், அவர்.
Johan, சீனாவுக்கு வந்த சில நாட்களில், தமது குடும்பத்தினரை சீனாவின் ஷாங்காய் மாநகருக்கு அழைத்து கொண்டார். தற்போது, திங்கட்கிழமை முதல் வெள்ளிகிழமை வரை அவர் Chonng Zuo நகரில் பணி புரிகின்றார். வார இறுதியில், விமானத்தில் ஷாங்காய் மாநகருக்குச் சென்று, தமது குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக பொழுதை கழிக்கிறார். தமது குடும்பத்தினரும், சீனாவை நேசிகின்றனர் என்று அவர் கூறினார்.
சீனாவின் பட்டு மற்றும் பீக்கிங் இசை நாடகத்தை Johan மிகவும் நேசிக்கின்றார். சீனத் தேசிய நடையுடை பாவனைகள் கொண்ட கலைப் பொருட்களையும், வீட்டுத் தட்டுமுட்டுச்சாமான்களையும் அவர் அடிக்கடி வாங்குகின்றார். சீனாவில் அவரின் உணவு பழக்க வழக்கம், படிப்படியாக மாறியுள்ளது. தற்போது பெய்சிங் வாத்திறைச்சியை உட்கொள்ள அவர் மிகவும் விரும்புகின்றார். எனவே Chong Zuo நகரில் உள்ள சில உணவகங்களுக்கு அவர் அடிக்கடி செல்வதுண்டு.