• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-03-05 09:27:26    
தொங் யோங்கும் நெசவுக்கன்னியும்

cri
ஹான் வம்சக்காலத்தில் சியன்செங் என்ற இடத்தில் தொங் யோங் என்ற வாலிபன் வாழ்ந்து வந்தான். இளவயதிலேயே தன் தாயை இழந்த தொங் யோங்கிற்கு எல்லாமே அவனது தந்தைதான். தன் தந்தைக்கு உதவியாய் வயலில் நிலத்தை உழுதும், வண்டியை இழுத்தும் உதவி வந்தான். ஆண்டுகள் கழிந்து அவனும் வாலிபனாக, அவனது தந்தை மூப்பில் இறந்தும் போனார். இறந்த தன் தந்தையை அடக்கம் செய்யக்கூட கையில் பணம் இல்லாத தொங் யோங், வேறு வழியின்றி தன்னை அடிமையாக விற்று அதன் மூலம் கிடைக்கும் பணத்தை கொண்டு தன் தந்தையை நல்லடக்கம் செய்ய முடிவெடுத்தான். அவ்வாறே தன்னை அடிமையாக விற்கவும் செய்தான். அவனை விலைக்கு வாங்கி அடிமையாக ஏற்றுக்கொண்ட அவன் தலைவன், தொங் யோங்கின் தந்தை மீதான் பற்றும் பாசமும் அறிந்து, அவனுக்கு 10 ஆயிரம் காசுகளை கொடுத்து அவனை விடுவித்து அனுப்பியும் வைத்தான்.
தொங் யோங்கும் பணத்துடன் வீடு திரும்பி தந்தையை நல்லடக்கம் செய்து, மூன்றாண்டுகள் துக்கம் அனுசரித்தான். பின் மீண்டும் அடிமையாக பணிபுரிய, அவனது தலைவன் இருந்த இடம் நோக்கி புறப்பட்டான். வழியில் அவன் ஒரு பெண்ணை சந்தித்தான். அந்த பெண் தொங் யோங்கை மணம் புரிந்து அவனது மனைவியாக இருக்க இணங்கினாள். ஆக இருவரும் ஒன்றாக புறப்பட்டு தொங் யோங்கின் தலைவனின் இடத்தை நோக்கிச் சென்றனர்.
தொங் யோங்கை கண்ட தலைவன், அவன் வந்த காரணத்தை அறிந்து. "நான் உனக்கு அந்த பணத்தை அன்பளிப்பாக, கொடையாகத்தான் தந்தேன்" என்றான். ஆனால் தொங் யோங்" உங்கள் உதவியால் என் தந்தையை நான் நல்லடக்கம் செய்தேன். நான் தாழ் நிலையில் இருப்பவன் என்றாலும், உங்கள் இரக்கத்திற்கு ஈடாக என் உடலுழைப்பை தந்து, சமன் செய்வேன்" என்றான்.
தொங் யோங் கூறியதை கேட்ட தலைவன் " சரி இந்த பெண்ணுக்கு என்ன செய்யத் தெரியும்" என்று கேட்டான். தொங் யோங் " அவள் நன்றாக நெசவு செய்வாள்" என்றான். உடனே தலைவன் "அப்பயென்றால், எனக்கு இப்பெண் 100 சுருள் பட்டை நூற்றால் போதும்" என்றான்.
இதற்கு பின் தொங் யோங்கின் மனைவியான அந்த பெண், தொங் யோங்கின் தலைவனது க்டும்பத்துக்காக பட்டை நூற்கத் தொடங்கினாள். கொடுக்கப்பட்ட இலக்கான 100 சுருள் பட்டை 10 நாட்களில் முடித்தாள் தொங் யோங்கின் மனைவி. பின்னர் அவள் தொங் யோங்கிடம் வந்து தான் ஒரு தேவ மங்கை என்றும், வானுலகின் நெசவுக்கன்னியான தன்னை, தந்தைக்கு உகந்த மகனாய் இருந்த தொங் யோங்கிற்கு அவனது கடனை திருப்பி செலுத்த உதவுமாறு வானுலகின் பேரரசர் அனுப்பியதாகவும் கூறி தான் விடைபெறுவதாக கூறி, காற்றோடு காற்றாய் மேலெழும்பி மறைந்தும் போனாள்.