பிரிட்டன் வெளியுறவு அமைச்சரின் கருத்து
cri
பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்ளுமாறு, உலகின் பல்வேறு நாடுகளுக்கு பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் David Miliband வேண்டுகோள் விடுத்தார். சீன பயணம் மேற்கொண்டுள்ள அவர், நேற்று பிற்பகல் சீனத் தேசிய நீச்சல் மையமான நீர் கன சதுர அரங்கை பார்வையிட்ட போது இவ்வாறு தெரிவித்தார். உலகின் பல்வேறு நாடுகளின் மக்களை ஒன்று திரளச் செய்யும் மாபெரும் விளையாட்டுப் போட்டியாக, ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி இருக்க வேண்டும். பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை, அரசியல் பிரச்சினையுடன் இணைப்பது, நியாயமானதல்ல. இப்போட்டியை புறக்கணிப்பதை எதிர்ப்பதாக David Miliband தெரிவித்தார்.

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியிலான இலண்டன் பெய்ஜிங் ஒத்துழைப்பு பற்றி, பேசிய அவர், இலண்டன், பெய்ஜிங் ஒலிம்பிக் ஆயத்த பணிகளிலிருந்து பலவற்றை கற்று கொண்டுள்ளது என்றார். நடிகை Maria Nafpliotou, 2008ம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான தீபத்திற்கு தீ பெறும் சடங்கின் தலைமை பெண் குருவானவனர் நிலையை ஏற்கிறார் என்று 27ம் நாள் கிரேக்க ஒலிம்பிக் குழுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
 1936ம் ஆண்டு ஒலிம்பிக் தீப்பத்திற்கு தீ பெறும் சடங்கு துவங்கிய பின், 10வது தலைமை பெண் குருவானவர் நிலையை, அவர் ஏற்கிறார். திட்டப்படி, மார்ச் 24ம் நாள் பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான தீபம், பழைய ஒலிம்பியாவில் பெறப்பட்டு ஏற்றப்படும். ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான ஆயத்தப் பணிக்கான தலைமையையும் ஆயத்த அணியையும் வலுப்படுத்தும் வகையில், பெய்ஜிங் ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான ஆயத்தப் பணி நிர்வாக குழுவை அதிகாரபூர்வமாக உருவாக்க பெய்ஜிங் ஒலிம்பிக் அமைப்புக் குழு 27ம் நாள் முடிவெடுத்தது.
 பெய்ஜிங் ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான ஆயத்த பணிகளுக்குப் பொறுப்பேற்பது, பல்வேறு கட்டங்களுக்கான ஆயத்தப் பணியை பரவல் செய்வது, இப்போட்டிக்கான முக்கிய பணிகள், விவகாரங்கள் பிரச்சினைகள் ஆகியவற்றை ஆராய்வது, சர்வதேச ஊனமுற்றோர் ஒலிம்பிக் குழுவுக்கும் சீன ஊனமுற்றோர் அமைப்புகளுக்குமிடை உறவை இணைப்பது ஆகியவை இவ்வாயத்த பணி நிர்வாக குழுவின் கடமையாகும். பெய்ஜிங் ஒலிம்பிக் அமைப்பு குழுவின் துணை செயல் தலைவர் liu jing min, தலைமை ஆணையாளராக பணிபுரிவார்.
|
|