• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-03-06 10:23:01    
உண்மையான பெற்றோரை அறிய மரபணுசோதனை

cri
உண்மையான பெற்றோரை அறிய மரபணுசோதனை
சிறு காய்ச்சல் என்றாலே பல சோதனைகள் எடுக்கப்படும் இன்று குழந்தை தவறான பெற்றோரிடம் கொடுக்கப்பட்டது என்றால் விடுவார்களா? 1976 ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 30 ஆம் நாள் ஹாங்ஹாங் தன்னாட்சி பிரதேசத்திலுள்ள Fan Yuk மருத்துவமனையில் பிறந்த ஆண் குழந்தை உண்மையான பெற்றோரிடம் கொடுக்கப்படவில்லை என்ற பிரச்சனை எழுந்தது. அப்பிரச்சனை ஆய்வு செய்யப்படும் போது அப்போது பிறந்த குழந்தைகள் அனைத்தும் மரபணு சோனைகள் மூலம் உறுதி செய்யப்பட வேண்டும் என்று ஆணையிடப்பட்டது. அதனால் அவ்வாண்டு நவம்பர் கடைசியிலும் டிசம்பர் தொடக்கத்திலும் பிறந்த 107 குழந்தைகளும் அதன் தாய்மாரும் அழைக்கப்பட்டு மரபணு சோதனை செய்யப்பட்டுள்ளனர்.


நகை திருடன், எச்சரிக்கை
அண்மையில் Tianjin நகராட்சி காவல்துறையின் திறமைக்கு சவால்விடும் விதமாக நுதன நகைதிருட்டு நடைபெற்று வந்தது. ஆறு மாதங்களுக்கு முன்னால் காலையில் எழுந்த பெண்மணி ஒருவர் தனது தங்கத்திலான மோதிரமும், காதணிகளும் காணாமல் போயிருப்பதை கண்டுபிடித்து காவல்துறையில் புகார் செய்தார். திருடன் வந்து சென்றதற்கான எவ்வித அடையாளமும் அந்த வீட்டில் கண்டுபிடிக்கப்படவில்லை. காவல்துறையினர் வழக்கை புலனாய்வு செய்துகொண்டிருந்தனர். சில நாட்கள் கடந்ததும் அவருடைய பக்கத்து வீட்டுக்காரும் அதேபோல நகைகளை பறிகொடுத்தார். காவல்துறையினருக்கு இவ்வித நுதனதிருட்டு தங்கள் புலனாய்வு திறமைக்கு சவால்விடும் விதமாக அமைந்திருந்தால் எப்படியாவது திருடனை கண்டுபிடித்துவிட வேண்டும் என்று முனைப்போடு தேடிக் கொண்டிருந்தனர். எல்லா புதிர்களுக்கும் விடை கிடைத்தாற்போல் கடந்த வாரத்தில் காணாமல் போன அனைத்து நகைகளையும் சிறுவன் ஒருவன் எலியின் வளையில் கண்டுபிடித்துள்ளான். திருடர்கள் எச்சரிக்கை என்று எழுதப்படும் பலகைகளில் எலிகள் எச்சரிக்கை என்றும் எழுத வேண்டுமோ.


நோயாளி சாதனை
சாதனைகள் பலத்துறைகளில் நிகழ்த்த படுகின்றன. விளையாட்டு, கல்வி, கலை, இலக்கியம் என அதன் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. நோயில் சாதனை புரிய முடியுமா? சிச்சுவான் மாநிலத்திலுள்ள Dazhou வில் 36 வயதுடைய Zhou என்பவருக்கு பித்தப்பையில் கற்கள் என்று கண்டறியப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டார். அப்போது 3,956 பித்தக்கற்கள் அவரிடமிருந்து அகற்றப்பட்டுள்ளது. அவருக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் தான் இதுவரை இவ்வளவு அதிகமான பித்தக்கற்கள் அகற்றியது கிடையாது என்றும், Zhou வினுடைய மோசமான உணவு பழக்கம் தான் இத்தகைய விளைவை கொண்டு வந்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். இப்படிப்பட்ட சாதனை செய்ய கண்டிப்பாக முயல வேண்டாம். நாம் உண்ணும் உணவில் எச்சரிக்கை மிகவும் தேவை என்பதை இந்நிகழ்வு காட்டுகிறதல்வா.


அன்புள்ள பாம்பு
நாய், வாத்து, குருவிகள், கிளி, புறாக்கள், வெள்ளை எலிகள் ஆகியவத்தை செல்ல பிராணிகளான வளர்ப்பதை கேள்விப்பட்டிருப்பீர்கள். வண்ண மீன்கள் கூட சிலரால் பொழுதுபோக்கிற்காக வளர்க்கப்படுகின்றன. யுன்நான் மாநிலத்தில் 36 வயதான யாங் ஜியான்சுங் என்ற இளைஞர் 14 ஆண்டுகளாக பாம்பு ஒன்றை செல்ல பிராணியாக வளர்த்து வருகிறார். 4.6 மீட்டர் நீளமும், 62 கிலோ எடையுமுள்ளது. அதற்கு உணவாக மாதத்திற்கு 16 வாத்துகள் தேவைப்படுகின்றன. அதற்கு ஆகின்ற செலவு யாங்கிற்கு பெரும் சுமையாகி கொண்டிருக்கிறது. இப்பாம்பை கொண்டு சுற்றுலா வரும் பயணிகளின் கவனத்தை ஈர்த்து, அவர்களை பாம்போடு புகைப்படம் எடுத்துக்கொள்ள செய்யும் வகையிலான வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என அவர் நம்பிக்கொண்டிருக்கிறார். பாம்புக்கு பாலூட்டி வளர்ப்பார்கள். இதற்கு யாங் வாத்து இறைச்சி ஊட்டி வளர்க்கிறார்.


விருப்ப தொகை கட்டணமாக
உணவகங்களில் சென்று சாப்பிட்டுவிட்டு அதற்கான தொகையை அறியவரும் போது முகம் சுளிப்பதுண்டு. அதிக தொகை சொல்லுகிறார்களே என்ற அடையாளம் தான் அது. சாப்பிட்டு முடிந்தபின் நீங்கள் விரும்பியதை கொடுங்கள் எனக்கூறினால் எப்படியிருக்கும்? பொய்யில்லை உண்மை. நுகர்வோரை அவர் உண்ட உணவின் தொகையை தீர்மானிக்க செய்வதுதான் தற்கால உத்தியாகி வருகிறது. ஐரோப்பிய உணவகங்கள் இதை கடைபிடிக்க தொடங்கிவிட்டன.
சில வாரங்களுக்கு முன்னால் ஜெர்மெனி பிராங்போர்ட்டிலுள்ள ஈரானிய உணவகம் யாருமே செல்லமல் வெறிச்சோடியது. தனது உணவகத்தின் தன்மையை அறிய செய்து பலரை ஈர்ப்பது எப்படி என்று உரிமையாளர் Pourya Feily சிந்தித்தார். அதன் விளைவு "விரும்பியதை செலுத்துங்கள்" என்ற அறிவிப்பை தனது உணவகத்தின் முன் எழுதி வைத்தார். தற்போது கூட்டம் அலைமோதுவதோடு மக்கள் வரிசையில் காத்திருந்து சாப்பிட்டு விட்டு செல்கின்றனர். தாங்கள் உண்ணுகின்ற உணவுக்கு 6 அல்லது 7 யுரோ என மக்கள் மதிப்பிடுகின்றனராம். நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட குறைவாக அது இருந்தாலும் பலர் வருவதால் அவ்விழப்பு ஈடுச்செய்ப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெர்மெனியிலுள்ள மது சேவையகங்கள், உணவகங்கள், அழகு நிலையங்கள், தின்பண்ட கடைகள், சில திரையரங்குகள் ஆகியவை விரும்பியதை செலுத்துங்கள் என்ற முழக்கத்தை செயல்படுத்த தொடங்கி விட்டன. பல மில்லியன் ஆண்டுகள் செலுத்த முடியாத மதிப்பிலான தொகையில் விளம்பரம் செய்தாலும் சென்று சேர முடியாத அளவில் "விரும்பியதை செலுத்தலாம்" என்ற அறிவிப்பு மக்களை சென்றடைந்துள்ளதாக Feily கூறுகிறார். நுகர்வோர் விரும்பும் அடிப்படையில் விலை என்ற நிலை விரைவில் விடிவது கண்கூடு.