• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-03-06 10:27:51    
சீனாவிலான உயர் நிலை கல்வி நிலைமை

cri
தமிழன்பன்.......கலை இன்றைய நிகழ்ச்சியில் நாங்கள் எந்த வினாவுக்கு விடை அளிக்க போகிறோம்.
கலை......சீனாவின் கல்வி நிலைமை பற்றி பல மாணவ நேயர்கள் அக்கறை செலுத்தியுள்ளனர். ஆனால் யாரும் சீரான ஒரு வினாவை எழுப்ப வில்லை. அண்மையில் மின்னஞ்சல் மூலம் பேளுக்குறிச்சி சி ஓஸ்லின் மாணவர்களின் சார்பில் ஒரு வினா எழுப்பினார். சீனாவின் கல்வித் துறை பற்றி கூறுமாறு அவர் வேண்டிக் கொண்டார்.
தமிழன்பன்........அப்படியிருந்தால் நாம் அவருடைய வினாவுக்கு விபரமாக விடை அளிக்கலாமே.
கலை........கண்டிப்பாக. முதலில் சீனாவின் கல்வி அமைப்பு முறை பற்றி விளக்கிக் கூற வேண்டும்.
தமிழன்பன்........ஆமாம். முதலில் சீனாவின் கல்வி அமைப்பு முறை எப்படி என்பது பற்றி பதிலளிக்கலாமா?
கலை..........நிச்சயம். அதில் ஐயமேதும் இல்லை. சீனாவின் கல்வி அமைப்பு முறை பொதுவாக அரசுடைமை அமைப்பு முறையாகும்.
தமிழன்பன்........பொதுவாக சொன்னால் சில பகுதியில் தனியார் அல்லது கூட்டுரிமை முறை இருக்கலாம். அப்படிதானே.


கலை........ஆமாம். கல்லூரி அல்லது பல்கலைக்கழக கல்வி அமைப்பு முறையில் சில தனியார் அல்லது கூட்டுரிமை கொண்ட கல்வி அமைப்பு முறை இருக்கின்றது.
தமிழன்பன்..........அப்படியிருந்தால் இந்த வகை உயர் கல்வி நிலையங்களில் பயின்று பட்டம் பெற்ற மாணவர்கள் வேலை வாய்ப்பு பெறுவதில் சிக்கல் உண்டா?
கலை.......சிக்கல் ஒன்றுமே இல்லை. அவர்கள் பெற்றுள்ள கல்வி பட்டம் சில சமயத்தில் அரசு சார் பல்கலைக்கழகத்தில் வழங்கப்பட்ட பட்டத்தை விட மதிப்புக்குரியது.
தமிழன்பன்......இதே மாதிரி பட்டம் பெற்ற மாணவர்கள் பொதுவாக எந்த வகை வேலைகள் பெற முடியும்?
கலை.....பொதுவாக கார் தயாரிப்புத் தொழில் நிறுவனங்களிலும் வெளிநாட்டு கூட்டு முதலீட்டு நிறுவனங்களிலும் வேலை வாய்பு பெற முடியும்.


கலை........தனியார் அல்லது கூட்டுரிமை கொண்ட உயர் கல்வி நிலையங்கள் மட்டுமல்ல அரசு சார் கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் சீனாவின் மாநில மற்றும் மாநகரங்களில் உள்ளன. பெய்ஜிங், ஷாங்காய், தியென் சின், குவாங் சோ, ஹார்பின், வூஹான், சியான் மன், நாங் கிங் முதலிய மாநகரங்களில் புகழ் பெற்ற உயர் கல்வி நிலையங்கள் உள்ளன.
தமிழன்பன்.........இக்கல்வி நிறுவனங்களின் பெயர்களை குறிப்பிட முடியுமா?
கலை.......மகிழ்ச்சி. பெய்ஜிங்கில் உலகில் புகழ் பெற்ற பீக்கிங் பல்கலைக்கழகம், சிங் குவா பல்கலைக்கழகம், பெய்ஜிக் அந்நிய மொழி பல்கலைக்கழகம், பெய்ஜிங் தகவல் மற்றும் தொலை தொடர்பு பல்கலைக்கழகம் முதலிய உயர் கல்வி நிலையங்கள் உள்ளன.


தமிழன்பன்.......அப்படியிருந்தால் ஷாங்காயில் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் பூஃதான், தூங் ஜி, போக்குவரத்து, ஆசிரியர் பயிற்சி பல்கலைக்கழங்கள் போன்றவை உள்ளன. அப்படித்தானே.
கலை......ஆமாம். இவை தவிரவும் ஹார்பின் இராணுவ பொறியியல் பல்கலைக்கழகம், வூஹான் சட்டத் துறை பல்கலைக்கழகம், குவாங்சோவிலுள்ள ச்சுன் சான் பல்கலைக்கழகம் போன்ற முக்கிய அரசு நிலை பல்கலைக்கழகங்கள் உள்ளன. ஆண்டுதோறும் இலட்சக்கணக்கான மாணவர்கள் படிப்பை முடித்து விட்டு பட்டம் பெற்று வேலைக்கு செல்கின்றனர்கள்.
தமிழன்பன்........அப்படியிருந்தால் சீனாவில் ஆண்டுதோறும் பல்கலைக்கழகத்திலிருந்து பட்டம் பெற்ற மாணவர்கள் வேலைவாய்ப்பு பெறும் விகிதம் எவ்வளவு.


கலை......ஆண்டு தோறும் இத்தகைய மாணவர்கள் வேலை வாய்ப்பு பெறும் விகிதம் 85 விழுக்காட்டுக்கு மேலாகும்.
தமிழன்பன்........மிஞ்சிய 15 விழுக்காட்டு மாணவர்கள் என்ன செய்வார்கள்?
கலை.......மிஞ்சிய 15 விழுக்காட்டு மாணவர்கள் மேற்படிப்பு அல்லது வெளிநாடுகளில் முனைவர் பட்டம் படிக்க செல்கின்றனர்.
தமிழன்பன்........அப்படியிருந்தால் உயர் கல்வி நிலையங்களில் பட்டம் பெற்ற மாணவர்கள் அனைவரும் வேலை வாய்ப்பு பெறுவதில் சிக்கல் இல்லையா.
கலை.....அப்படி சொல்ல முடியாது. சில விழுக்காட்டு மாணவர்கள் அவர்கள் விரும்பிய வேலை பெறாத நிலையில் வீட்டில் சும்மா இருப்பர். அல்லது தற்காலிகமாக ஏதாவது வேலை பார்ப்பர். விரும்பிய வேலை பெற்றவுடன் வேலை பார்க்கின்ற இடத்தை விட்டு புதிய பணியை ஏற்கச் செல்வர்.