• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-03-06 09:25:48    
பாஃயுவான் கோயில்

cri
பெய்ஜிங் மாநகரில் ஆயிரம் ஆண்டுகால வரலாறுடைய கோயில் ஒன்று உள்ளது. அதாவது, பெய்ஜிங்கில் மிகவும் பண்டைய கோயில். அதன் பெயர் பாஃயுவான் கோயிலாகும். சீன புத்தவியலகம் இக்கோயிலில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் பாஃயுவான் கோயிலில் நடைபெறும் பாரம்பரிய LILAC கவிதை கருத்தரங்கு, ஏராளமான சீனக் கவிஞர்களையும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணியர்களையும் ஈர்க்கிறது.

பெய்ஜிங்கின் தென் பகுதியிலுள்ள XUAN WU பிரதேசத்தில் அமைந்துள்ள பாஃயுவான் கோயில், 6700 சதுர மீட்டர் பரப்பளவுடையது. சுமார் 1300 ஆண்டுகளுக்கு முந்திய தாங் வம்சக்காலத்தில் கட்டியமைக்கப்பட்டது. பேரரசரின் கட்டளையினால் கட்டப்பட்ட இக்கோயிலின் கட்டிடங்கள், பண்டைக்கால அரண்மனை மாளிகையைப் போன்றவை. பல முறை செப்பனிடப்பட்ட பின், இறுதியில், பல நூறு ஆண்டுகளுக்கு முந்திய சீனாவின் மிங் மற்றும் ச்சிங் வம்சக்காலத்தின் கட்டிடங்கள், பாஃயுவான் கோயிலில் தக்கவைக்கப்பட்டுள்ளன. இக்கோயிலில் நிர்வாக பணி புரியும் திரு YAO YUAN, பாஃயுவான் கோயில் தொடர்பான வரலாற்று ஆய்வு செய்து, தொடர்புடைய படைப்புகளை வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது:

தாங் வம்சக்காலத்தில் கட்டியமைக்கத் தொடங்கிய பாஃயுவான் கோயில், சுமார் 1300 ஆண்டுகள் வரலாறுடைய பண்டைய கோயில் ஆகும். இக்கோயில், பல வரலாற்று மற்றும் பண்பாட்டுக் கதைகளைக் கொண்டுள்ளது என்றார் அவர்.
DA BEI TAN என்னும் மாளிகையில், பாஃயுவான் கோயிலின் தொல்பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன. இதில், சீனாவில் மிகப் பண்டைய புத்தர் சிலையான 1900 ஆண்டுகளுக்கு முந்திய கிழக்கு ஹேன் வம்சக்காலத்தின் மண்பாண்ட புத்தர் சிலை உள்ளிட்ட பல்வேறு வம்சக்கால புத்தர் சிலைகள், கற்சிலைகள் முதலிய

கலைப்பொருட்கள் இடம்பெறுகின்றன. தவிர, பாஃயுவான் கோயிலின் குவான் யீன் மாளிகையில், ஆயிரம் கைகளையும் ஆயிரம் கண்களையும் கொண்ட குவான் யீன் வெண்கலச்சிலை உள்ளது. இவ்வெண்கலச்சிலை, சுமார் அரை மீட்டர் உயரம் கொண்டது. அதன் சிற்பத் தொழில் நுட்பம் தலைச்சிறந்தது. இந்த வெண்கலச்சிலையின் கையில், இடைவிடாமல் நீர்கசிவு ஏற்பட்டுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கத்து. இதுவரை, அதற்கு காரணம் தெரியாது. இக்கோயிலைச் சேர்ந்த மத குருமார் ZHI YONG பேசுகையில், இந்த அழகான குவான் யீன வெண்கலச்சிலை, பல வெளிநாட்டு நம்பிக்கையாளர்களையும் பயணியர்களையும் ஈர்த்துள்ளது என்று அறிமுகப்படு்ததினார். அவர் மேலும் கூறியதாவது:

ஆயிரம் கைகளையும் ஆயிரம் கண்களையும் கொண்ட குவான் யீன் வெண்கலச்சிலை, மிகவும் அதிக எடையுடையது. கடந்த சில நூறு ஆண்டுகளில் இதில் நீர் கசிந்து கொண்டிரக்கிறது. இதனால், வெளிநாடுகளின் பல வாழும் புத்தர்கள், புத்த நம்பிக்கையாளர்கள், லாமாக்கள் ஆகியோர் இங்கு வந்து இப்புத்தருக்கு வழிபாடு செய்கின்றனர். அதன் தயாரிப்புக் கலை, அப்போதைய தலைசிறந்த கலைத் தொழில் நுட்பத்தைப் பிரதிபலித்துள்ளது. அப்போதைய மிங் வம்சத்தின் மிகச் சிறந்த கலைத் தொழில் நுட்பத்தையும், நேபாளத்தின் கலைத் தொழில் நுட்பத்தையும் இணைக்கும் படைப்பு, இதுவாகும். இந்த குவான் யீன் புத்தர் சிலையைப் பார்த்த பிறகு, பயணியர்கள் அனைவரும் மிகவும் வியப்படைந்தனர் என்றார் அவர்.

பாஃயுவான் கோயில், புத்த மதத்தின் புனித இடங்களில் ஒன்றாக மட்டுமல்ல, பண்பாட்டை நெருக்கமாக இணைக்கும் சுற்றுலா இடமும் ஆகும். ஆண்டுதோறும் ஏப்ரல் திங்கள் நடைபெறும் LILAC கவிதைக் கருத்தரங்கு, மிகவும் வரவேற்கப்படுகிறது. இதுவரை, இக்கவிதைக்கருத்தரங்கு 80க்கு அதிகமாக ஆண்டுகள் நடைபெற்றுள்ளது.
1914ம் ஆண்டின் ஏப்ரல் திங்களில், நூறு பேர் கலந்துகொண்ட முதலாவது LILAC கவிதைக் கருத்தரங்கு, பாஃயுவான் கோயிலில் நடைபெற்றது. 1924ம் ஆண்டில் புகழ்பெற்ற இந்திய கவிஞர் தாகூர் சீனாவுக்கு வந்து, பாஃயுவான் கோயிலைப் பார்வையிட்டு, LILAC மலர்களைப் பார்த்து ரசித்து, LILAC மரத்தின் கீழ் கவிதை எழுதினார். பிற்காலத்தில், LILAC கவிதைக் கருத்தரங்கு, பாஃயுவான் கோயிலின் தனிச்சிறப்பியல்பாக மாறி தொடர்ந்து நடைபெற்று வரு