• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-03-07 14:42:18    
சீனாவின் ஜிங்போ இனம்

cri
சீனாவின் ஜிங்போ இனம், முக்கியமாக யுன்னான் மாநிலத்தின் ஜிங்போ இனத் தன்னாட்சி சோவின் மலைப் பிரதேசங்களில் வாழ்கின்றனர். இதன் மக்கள் தொகை, 1 இலட்சத்து 19 ஆயிரமாகும்.

ஜிங்போ இனத்திற்கு இரு வட்டார மொழிகள் உண்டு. இரண்டும் வேறுபடுகின்றன. அவை சீன-திபெத் மற்றும் திபெத்-மியான்மார் மொழி குடும்ப கிளைகளைச் சேர்ந்தது. ஜிங்போ இனத்துக்கு அதிகமான இலக்கியங்கள் வாய்மொழியாக பரவல் செய்யப்பட்டன. தேசிய இனத்தின் தொடக்கம், குடியேற்ற வரலாறு கவிதைகள், புராண கதைகள், பழமொழிகள் முதலியவை இதில் அடங்குகின்றன.

ஜிங்போ இன மக்கள், முக்கியமாக வேளாண்துறையில் ஈடுபடுகின்றனர். அவர்கள் வாழ்கின்ற பிரதேசங்களில் பெரு மதிப்பு மிக்க மரங்கள், பல்வேறு சீன பாரம்பரிய மருந்துகள் மூலிகைகள் அதிகமாக பயிரிடுகின்றன. ரப்பர், தேயிலை, காப்பி முதலியவை இங்குள்ள தொழில்பயிர்களாகும்.

ஜிங்போ இனத்தின் குடும்பங்களில், தலை மூத்தக பிள்ளையை விட, கடைசி பிள்ளைகள் மேலும் உயர்ந்த தகுநிலை கொண்டவராக இருக்கின்றனர். மூத்தவர் திருமணம் செய்த பின், தனி குடும்பத்தில் வாழ வேண்டும். கடைசி பிள்ளை குடும்பத்தில் தங்கி பெற்றோர்களைப் பராமரிக்க வேண்டும். குடும்ப சொத்துகளை கடைசி பிள்ளை பெற உரிமையானவராக இருக்கின்றனர்.

ஜிங்போ இன மக்கள், பல கடவுள்களை வழிபடுகின்றனர். சிலர் கிறிஸ்தவர்களாக உள்ளனர்.

munaozongge என்ற திருநாள், யுந்நான் மாநிலத்தின் ஜிங்போ மக்கள் மங்களத்தையும் அறுவடையையும் கொண்டாடும் விழாவாகும். சீன சந்திர நாள் காட்டியின்படி, முதல் திங்களின் 15ம் நாள் முதல், 2 அல்லது 3 நாட்களாக இவ்விழாவைக் கொண்டாடுகின்றனர். இக்கொண்டாட்டம், அதிகாலை முதல் இரவு வரை நடைபெறும். சில சமயம், இரவு முழுவதும் இவ்விழாவைக் கொண்டாடுகின்றனர். இது, ஜிங்போ இன வரலாறு, பண்பாடு, கலை ஆகியவற்றின் வெளிப்பாடாகும்.