• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-03-07 09:48:28    
நிழற்படத் துறையிலான சீனத் தூதர் WANG YAO

cri
ஒழுக்கத்திலும் கலைத் துறையிலும் தலைசிறந்த நடுத்தர வயதான மற்றும் இளம் கலைஞர்களைப் பாராட்டும் 2வது தேசிய மாநாடு 2007ஆம் ஆண்டு நவம்பர் 5ஆம் நாள் பெய்ஜிங்கிலுள்ள மக்கள் மா மண்டபத்தில் நடைபெற்றது. சீன நிழற்படக் கலைஞர் சங்கத்தின் துணைத் தலைவரும் சீன செய்தி நிறுவனத்தின் துணைத் தலைமை பதிப்பாசிரியருமான WANG YAO அம்மையார் இம்மாநாட்டில் புகழ் பெற்றார். உலக பத்திரிக்கை நிழற்படப் பரிசையும் சீன தலைசிறந்த செய்தித்துறை பணியாளருக்கான அதியுயர் பரிசான FAN CHANG JIANG பரிசையும் அவர் பெற்றார். ஆனால் அவருக்கு வயது 36 மட்டுமே.


தற்போது சீனாவில் உள்ள தலைசிறந்த இளம் பெண் நிழற்படக் கலைஞர் என்ற முறையில், நிழற்படத் துறையின் முன்னணியில் WANG YAO அம்மையார் சுறுசுறுப்பாக இருக்கிறார். பிரதிநிதித்துவம் வாய்ந்த அவரது படைப்புகளான அரங்கிற்குத் திரும்பிய 60 வயதான நடனக் கலைஞர், செப்டெம்பர் 11ஆம் நாளுக்குப் பின் முதலியவை உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பெரும் வெற்றி பெற்றுள்ளன. அவரைப் பொறுத்த வரை, நிழற்படம் எடுப்பது என்பது, வாழ்க்கையில் பிழைக்கும் திறமை மட்டுமல்ல, வாழ்வாகும். நிழற்படத் துறையிலான சீனத் தூதர் என அவர் மதிப்போடு அழைக்கப்படுகிறார். 5 வயது கொண்ட குழந்தைகள் அனைவரையும் பொறுத்த வரை, மனதில் எல்லாவற்றையும் பதிவு செய்யத்தக்க வயதாகும். முழு வாழ்விலான திறன், 5 வயதிலான ஆர்வத்தைப் பொறுத்திருக்கக் கூடும். 5 வயதில்தான், நிழற்படம் எடுத்தலை நேசிக்கும் தந்தையின் உதவியுடன், WANG YAO முதல்முறையில் நிழற்படக் கருவியின் பொத்தானை அமிழ்த்தி இயக்கி இருக்கிறார்.

11ஆம் வயதில், 1981ஆம் ஆண்டு தேசிய சிறந்த செய்திக்கான முதலாவது பரிசை அவர் பெற்றார். 17 வயதில், சொந்த நிழற்படக் கண்காட்சியை அவர் நடத்தினார். 18 வயதி, தேர்வின்றி, சீன REN MIN பல்கலைக்கழகத்தின் செய்தி துறையில் அவர் நுழைந்தார். நிழற்படம் பிடிப்பதன் மீதான ஆர்வம் மூலம், ஒரு வகை கலைத் திறனைக் கிரகித்துக் கொண்டுள்ள WANG YAOவின் ஒட்டுமொத்த திறனும் மேலும் வளர்க்கப்பட்டது.
அதிர்ஷ்டசாலியான WANG YAO அம்மையார், 1992ஆம் ஆண்டு பல்கலைக்கழக பட்டம் பெற்ற பின், சீன செய்தி நிறுவனத்தில் நுழைந்தார். நிழற்படச் செய்தியாளராக வேலை செய்த பின் அவர் எடுத்த முதலாவது படத்துக்கு, அவ்வாண்டுக்கான சீன செய்தி 2வது பரிசு வழங்கப்பட்டது. சீன செய்தி நிறுவனத்தைச் சேர்ந்த WANG YAO, தொடக்கத்தில் குவாங் சி கிளைக்கு வேலை செய்ய அனுப்பப்பட்டார். குய் லின் நகரில் நிகழ்ந்த விமான விபத்து பற்றி பேட்டி காண்பது, அவர் செய்ய வேண்டிய முதல் கடமையானது. ஆனால், குய் லின் நகரை WANG YAO சென்றடைந்த போது, விபத்து நிகழ்ந்த இடம் காவற்துறையினரால் சுற்றி வளைக்கப்பட்டிருந்தது. செய்தி ஊடகங்கள் எதுவுமே அதில் நுழைய முடியவில்லை. வேறு வழியின்றி, உள்ளூர் விவசாயி ஒருவரின் மனைவியாக அவர் வேடம் போட்டு, அவ்விடத்துக்குள் நுழைந்தார்.

கட்டுப்பாடு இழந்தால்தான், சிறந்த படம் பிடிக்க முடியும் என்று ஒருவர் கூறினால், அநேகமாக யாரும் அதை நம்பப் போவதில்லை. ஆனால், அவ்விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினரைச் சந்தித்த WANG YAO, தமது உணர்வைக் கட்டுப்படுத்த முடியாமல், அவர்களோடு இணைந்து, அவரும் அழுதார். நிழற்படக் கருவியை எடுத்த அவரது கைகள் நடுங்கின. நிழற்படக் கருவிக்கு முன்னாலான காட்சிகள் தெளிவாக இல்லை என்ற போதிலும், அவரது சிந்தனை மிகவும் தெளிவாக இருந்தது.
உணர்வு நிறைந்த நிழற்படக் கருவி மற்றும் மனித இயல்பை நேரடியாக வெளிப்படுத்தும் காட்சி ஆகியவை, நிழற்படம் பிடிப்பவர்களிலிருந்து WANG YAO அம்மையாரை வேறுப்படுத்தியது.

உலக செய்தி நிழற்படப் போட்டி, சர்வதேச செய்தி நிழற்படத் துறையிலான Oscar என மக்களால் அழைக்கப்படுகிறது. 2000ஆம் ஆண்டு 30 வயதான WANG YAO தமது படைப்புகளிலிருந்து அரங்கிற்குத் திரும்பிய 60 வயதான நடன கலைஞர் என்ற படங்களைத் தெரிவு செய்து இப்போட்டியில் கலந்து கொண்டார். கலைத் துறைக்கான தங்கப் பரிசை அவர் பெற்றார். சீனர் ஒருவர் இத்தகைய பரிசைப் பெறுவது அதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்தது.
செய்தி நிழற்படம் பிடிப்பது, செய்தியை எழுதுவதைப் போல், பார்ப்பதற்கு சில நிகழ்ச்சிகளைப் பதிவு செய்வதாக காணப்படுகிறது. உண்மையில் சில பொருட்கள் இதன் மூலம் உருவாக்கப்பட்டுள்ளன. ஏனென்றால், தனித்தன்மை வாய்ந்த கண்ணோட்டங்கள் இவற்றுக்கு இன்றியமையாதது. கண்ணுக்கு புலப்படாத பெய்ஜிங் இசை நாடகம் என்ற நிழற்பட நூல், பெய்ஜிங்கில் பிறந்து வளர்ந்த WANG YAO, 2008ஆம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு வழங்கும் அன்பளிப்பாகும். இந்த நூல், 2008ஆம் ஆண்டு ஜுன் திங்கள் அமெரிக்காவில் நடைபெறும் ஆசிய வணிகச் சின்ன கண்காட்சியின் துவக்க விழாவில் காட்சிக்கு வைக்கப்பட உள்ளது