• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-03-07 09:53:03    
கால் பந்துப் போட்டி

cri
பிப்ரவரி 29ம் நாள் ஜெர்மனியின் Freiburg நகரில் நடைபெற்ற மகளிர் நட்பு கால் பந்துப் போட்டி ஒன்றில், உலக சாம்பியனான ஜெர்மன் அணி 2-0 என்ற கோல் கணக்கில் சீன அணியைத் தோற்கடித்தது.
சீன-ஜெர்மனி மகளிர் கால் பந்து அணிகளுக்கிடையிலான 23வது போட்டி இதுவாகும்.
கூடைப்பந்து விளையாட்டில் புகழ் பெற்ற சீன வீரர் யோ மீன் இன்று அமெரிக்காவின் Houston நகரில் இடது காலுக்கான சிகிச்சையை பெற்றார். யோ மீனின் சிகிச்சை மாபெரும் வெற்றி பெறும். 4 திங்கள் கால மருத்துவ சிகிச்சைக்கு பின், இவ்வாண்டு ஆகஸ்டு திங்கள் நடைபெறவுள்ள பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியில்

அவர் பங்கெடுக்கலாம் என்று இச்சிகிச்சைக்குப் பொறுப்பான மருத்துவ நிபுணர் ஒருவர் தெரிவித்தார்.
ஒலிம்பிக் விளையாட்டை அரசியல் மயமாக்குவது வீரர்களின் உணர்வுகளை மிக புண்படுத்தி வருகின்றது என்று 2008ம் ஆண்டு பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கான தூதர் யொன் லாங் அம்மையார் அண்மையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது, தெரிவித்தார். 1993ம் ஆண்டு மற்றும் 2001ம் ஆண்டு, பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கு விண்ணப்பம் செய்வதில் யொன் லாங் அம்மையார் கலந்துகொண்டார்.
ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கு அதற்கு சாரா பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு பொறுப்பு இல்லை. வீரர்களுக்கான சேவையை இதன் முக்கிய கடமையாகும். இதுவும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் முக்கிய கோட்பாடாக கருதப்படுகிறது என்று அவர் கூறினார்.

பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் துவக்க விழா, வெற்றி பெறுவதன் மீது, தான் அகித நம்பிக்கை கொண்டுள்ளதாக பொது திரைப்பட இயக்குநர் zhang yi mou தெரிவித்தார்.
அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் உறுப்பினரான அவர், சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 11வது கமிட்டியின் முதல் கூட்டத்தொடருக்கு முன், செய்தியாலருக்கு பேட்டி அளித்தார். பெய்ஜிங் ஒலிம்பிக் துவக்க விழா, பெருமளவான பயிற்சி கட்டத்தில் நுழைந்துள்ளது. இவ்விழாவில் கலந்துகொள்ளும் கலைஞரின் எண்ணிக்கை,10 ஆயிரத்தை தாண்டியுள்ளது என்று அவர் கூறினார்.

ஒலிம்பிக் பாடல்கள், தேர்ந்தெடுக்கப்பட்டு வருகின்றன என்று பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான கருத்து பாடல் குறித்து, பேசியபோது அவர் கூறினார்.
நடிகை Maria Nafpliotou, 2008ம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான தீபத்திற்கு தீ பெறும் சடங்கின் தலைமை பெண் குருவானவனர் நிலையை ஏற்கிறார் என்று 27ம் நாள் கிரேக்க ஒலிம்பிக் குழுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
1936ம் ஆண்டு ஒலிம்பிக் தீப்பத்திற்கு தீ பெறும் சடங்கு துவங்கிய பின், 10வது தலைமை பெண் குருவானவர் நிலையை, அவர் ஏற்கிறார்.
திட்டப்படி, மார்ச் 24ம் நாள் பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான தீபம், பழைய ஒலிம்பியாவில் பெறப்பட்டு ஏற்றப்படும்.