சின் காய்-திபெத் இருப்புப் பாதை, திபெத்தின் சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தவில்லை. திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் தலைவர் Qiangba Puncog நேற்று பெய்சிங்கில் செய்தியாளருக்கு பேட்டி அளிக்கையில் இவ்வாறு கூறினார்.
கடந்த ஆண்டில் சின் காய்-திபெத் இருப்புப் பாதை மூலம், 40இலட்சம் சுற்றுலா பயணிகள் இப்பிரதேசத்துக்கு வந்து பயணம் மேற்கொண்டுள்ளனர். திபெத்தின் 12இலட்சம் சதுர கிலோமீட்டருக்கும் மேலான நிலப்பரப்பைப் பொறுத்த வரை, இவ்வெண்ணிக்கை அதிகமல்ல. பயணிகளின் நடவடிக்கைகள், திபெத்தின் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தவில்லை என்று அவர் தெரிவித்தார்.
இந்த இருப்புப் பாதை கட்டி அமைக்கப்பட்ட போது, அதிகமான சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. திட்டப்பணிகளின் கட்டுமானத் தரம் உத்தரவாதம் செய்வதன் மூலம், திட்டப்பணிகள் சுற்றுச்சூழலுடன் இசைவாக ஒன்றிணைக்கப்படும் நிலைமையை நனவாக்கலாம் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. தவிரவும், தேசிய உயிரினப் பாதுகாப்பு கட்டுமானத்திற்கு அதிக முதலீட்டுத் தொகையை திபெத் ஒதுக்கியுள்ளது. அதே வேளையில், உயிரினச்சுற்றுச்சூழல் பாதுகாப்புக் கட்டுமானத்துக்கு பன்முக நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்று Qiangba Puncog குறிப்பிட்டார்.
|