
சீன பதிப்புரிமை தலைமை நிறுவனம், சீனாவின் மிகப் பெரிய பதிப்புரிமை நிறுவனமாகும். கடந்த சில ஆண்டுகளில், சீன மற்றும் வெளிநாட்டு நூல் பதிப்புரிமை வர்த்தகத்தில் முக்கிய பங்காற்றி வருகிறது. இப்படைப்புக்களுக்கான பதிப்புரிமை வர்த்தகத்தின் போது, இந்நிறுவனம் ஜப்பானிய தொடர்புடைய தரப்புக்களுடன் நெடுநோக்கு ஒத்துழைப்பு உடன்படிக்கைகளைக் கையொப்பமிட்டுள்ளது. இனிமேல், இரு தரப்பும் பரஸ்பர ஒத்துழைப்பை மேற்கொண்டு, சொந்த படைப்புக்கள் ஒன்று மற்றதன் சந்தையில் நுழைவுவதை முன்னேற்ற வேண்டும். தவிரவும், சர்வதேச நூல் பொருட்காட்சியில் பங்கெடுப்பு, பணியாளர்களுக்கான பயிற்சி, பரஸ்பர பயண பரிமாற்றம், பரிமாற்றத்தின் தலைப்புகளின் ஆராய்ச்சி ஆகியவற்றில் நீண்டகாலமான ஒத்துழைப்பு அமைப்புமுறை உருவாக்கப்படும்.

பெய்ஜிங் நூல் முன்பதிவுக் கூட்டம் பல முறையாக நடைபெற்றுள்ளது. ஆனால், பதிப்புரிமை வர்த்தகப் பொருட்காசி, 2006ம் ஆண்டில் தொடங்கியது. இவ்வாண்டின் வர்த்தகப் பொருட்காசியில், நூலாசியியர்கள் தொடர்புடைய நிறுவனங்களுடன் சுமார் 100 பதிப்புரிமை ஒத்துழைப்பு விருப்ப உடன்படிக்கைகளை எட்டினர்.

சீன பதிப்புரிமை தலைமை நிறுவனம் உள்ளிட்ட சீனாவில் ஏறக்குறைய 20 மாநில உயர் நிலை வாய்ந்த சிறப்பு பதிப்புரிமை நிறுவனங்கள் உள்ளன. தவிரவும், பல சிறப்பு வெளியீட்டகங்கள், பண்பாட்டு நிறுவனங்கள் மற்றும் தனிநபவர் பதிப்புரிமை வேலையில் ஈடுபடுகின்றனர். மென்மேலும் சுறுசுறுபான பதிப்புரிமை வர்த்தகம், சீனாவின் வெளியீட்டகத் தொழில் துறையின் வளர்ச்சியைத் தூண்டி, சீன மற்றும் வெளிநாட்டுப் பதிப்புரிமை வர்த்தக வளர்ச்சியை முன்னேற்றும் என்று இத்துறையின் நிபுணர்கள் தெரிவித்தனர்.

நண்பர்களே, சீனாவின் நூல் பதிப்புரிமை வர்த்தகத்தின் நடவடிக்கைகள் என்ற தகவலைப் படித்த பின், உங்கள் கருத்துக்களை தெரிவிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம். உங்களுக்கு இத்தகவல் பிடித்திருக்கும் என்று நம்புகின்றோம். நன்றி!மீண்டும் சந்திப்போம்.
|