• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-03-10 10:20:54    
xi'an நகரத்தின் வெளிநாட்டு முதலீட்டுப் பயன்பாடு

cri
சீனாவில் புகழ் பெற்ற பண்டைக்காலத் தலைநகரமான xi'an நகரம், சீனாவின் மேற்குப் பகுதியிலுள்ள Shanxi மாநிலத்தில் அமைந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளில், xi'an நகரம் சீனாவின் மேற்குப் பகுதியின் முக்கிய போக்குவரத்து மையமாகவும், நாணய மற்றும் வர்த்தக மையமாக இருக்கிறது. பல வெளிநாட்டு வணிகர்கள், இந்நகரில் முதலீடு செய்யவும், தொழிற்சாலைகளை நிறுவவும் ஈர்க்கப்படுகின்றனர். வெளிநாட்டு முதலீட்டைப் பயன்படுத்துவதிலும், வெளிநாட்டு முன்னேறிய தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, புதிய உயர் தொழில் நுட்ப துறையை உருவாக்குவதன் மூலமும் தொடரவல்ல வளர்ச்சியை விரைவுபடுத்துவது என்ற பாதையில் xi'an நகரம் நடைபோட்டு வருகிறது. அந்நிய முதலீடு குவிகின்ற xi'an இன் புதிய உயர் தொழில் நுட்பத் தாராள மண்டலம், இவ்வளர்ச்சிப் பாதையில் நடைபோடும் தலைசிறந்த மாதிரிகளில் ஒன்றாகும்.


xi'an புதிய உயர் தொழில் நுட்ப தாரள மண்டலம், சீன அரசு 1991ம் ஆண்டில் அனுமதி அளித்து நிறுவிய முதல் தேசிய புதிய உயர் தொழில் நுட்ப மண்டலங்களில் ஒன்றாகும். 2006ம் ஆண்டின் இறுதி வரை, அமெரிக்கா, ஐப்பான், ஜெர்மனி, சிங்காப்பூர் உள்ளிட்ட 29 நாடுகள் மற்றும் பிரதேசங்களின் தொழில் முனைவோர்கள், இந்த புதிய உயர் தொழில் மண்டலத்தில் அந்நிய முதலீட்டுடன் கூடிய 800 தொழில் நிறுவனங்களை நிறுவியுள்ளனர். அந்நிய முதலீட்டு நிகழ்ச்சிகளில் 90 விழுக்காடு, இந்த புதிய உயர் தொழில் நுட்ப நிறுவனங்களைச் சேர்ந்துள்ளது.
உலகில் இரண்டாவது பெரிய ஒளிநார் வினியோக நிறுவனமான ஜப்பானிய furukawa மின்சார நிறுவனம், xi'an புதிய உயர் தொழில் மண்டலத்தில் இரண்டு நிறுவனங்களை முதலீடு செய்து கட்டியமைத்துள்ளது. Shianfu ஒலி நார் மற்றும் ஒளி வட நிறுவனம் அவற்றில் ஒன்றாகும். இந்நிறுவனத்தின் தலைமை இயக்குநர் kazuo imamura கூறியதாவது:

1986ம் ஆண்டில் நிறுவப்பட்ட ஒலி நார் மற்றும் ஒளி வட நிறுவனம், சீனாவில் ஒளி வடத்தை உற்பத்தி செய்யும் முதலாவது நிறுவனமாகும். சீனப் பொருளாதார வளர்ச்சியுடன், 2002ம் ஆண்டில், xi'an நகரத்தின் புதிய உயர் தொழில் மண்டலத்தில் furukawa ஒளி மின்சார xi'an நிறுவனமும் நிறுவப்பட்டது என்றார் அவர்.
சீனாவின் பல்வேறு தொலை தொடர்பு நிறுவனங்கள் மற்றும் தேசிய முக்கிய திட்டப்பணிகள், இந்த நிறுவனங்கள் தயாரித்த ஒளி நார் பொருட்களைப் பயன்படுத்துகின்றன. 1990ம் ஆண்டு பெய்ஜிங்கில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டி, பெய்ஜிங்கையும் ஹங்காங் jiulong கையும் இணைக்கும் jingjiu இருப்புப் பாதை, சின் காய்-திபெத் இருப்புப் பாதை உள்ளிட்ட திட்டப்பணிகள், அவைகளின் ஒளி நார்களைப் பயன்படுத்தியுள்ளன. தற்போது, ஆண்டுதோறும் இந்த 2 நிறுவனஙகள் 30 இலட்சம் கிலோமீட்டர் நீளமான ஒளி நார்களை உற்பத்தி செய்ய முடியும் என்று தெரிகிறது.


ஐ.நாவின் தொழில் துறை வளர்ச்சி அமைப்பு சோதனை மூலம் உறுதிப்படுத்தியுள்ள சீனாவின் அதிவுயர் ஆற்றல் நிறைந்த 6 நகரங்கள் மற்றும் பிரதேசங்களில் இது ஒன்றாகும். உயர் தொழில் நுட்பம் வாய்ந்த வெளிநாட்டு நிறுவனங்களை, இந்த புதிய உயர் தொழில் மண்டலம் வெற்றிகரமாக ஈர்ப்பது மட்டுமல்ல, இத்தொழிற் மண்டலத்தின் சுற்றுச் சூழல் பாதுகாப்புப் பணி, குறிப்பிடத்தக்க கனிகளைப் பெற்றுள்ளது.
சுற்றுச்சூழல், முதலாவது மூல வளமாகவும், போட்டி ஆற்றலாகவும், உற்பத்தி ஆற்றலாகவும் விளங்கப்படுகிறது. இவை xi'an புதிய உயர் தொழில் மண்டலத்தின் நிர்வாக குழுவின் கண்ணோட்டமாகும். அக்கருத்துக்களின் படி, அழகான சூழலைக் கட்டியமைக்க இம்மண்டலம் பாடுபட்டு வருகிறது. இத்தொழிற் மண்டலத்தின் நிர்வாக ஆணையக் குழுவின் சுற்றுச் சூழல் நகரத்தின் தோற்றத் தோட்டக் கலை பணியகத்தின் தொடர்பான பொறுப்பாளர் zhaoji கூறியதாவது: 
கடந்த சில ஆண்டுகளில், xi'an உயர் புதிய தொழில் நுட்ப பூங்காவில், பச்சைமயமாக்குத் திட்டப்பணிகள், சுற்றுச் சூழல், காற்றுத் தரம் ஆகியவை ஆண்டுக்கு ஆண்டு மேம்படுத்தப்பட்டுள்ளது. புதிய மற்றும் ஏற்கனவேயுள்ள திட்டப்பணிகளின் எரியாற்றலைச் சிக்கனப்படுத்தி பசுங்கூட வாயு வெளியேற்றத்தைக் குறைப்பது 100 விழுக்காடு அடையுள்ளது. தொழில் துறையின் கழிப்பொருட்களிந் பன்நோக்கப் பயன்ப்பாடு 91.4 விழுக்காட்டை எட்டியுள்ளது. இப்பூங்காவின் பச்சைமயமாக்கும் 40.4 விழுக்காட்டாக உயத்தியுள்ளது என்றார் அவர்.
பன்நோக்க தொடர்புடைய வசதிகள் பற்றி, இப்பூங்கா அடிப்படை வசதிகள் மற்றும் பயன்களைத் தொடர்ந்து மேம்படுத்துவதன் மூலம், தலைசிறந்த மென்மற்றும் கடின பொருள் சூழலை இப்பூங்கா உருவாக்கியுள்ளது. உயர் தரம் கொண்ட நெடுஞ்சாலை, செய்தித்தொடர்பு, நீர், மின்சாரம், எரியாற்றல், வெப்ப காற்று வசதி ஆகிய பொது வசகிகள் இப்பூங்காவில் காணப்படலாம். தவிரவும், சீன மற்றும் ஆங்கில மொழிகளில் கற்றுகொள்ளும் சர்வதேச இடை நிலை பள்ளி, சிறந்த சூழல் கொண்ட மருத்துவமனைகள், நச்சதிர விருந்தகம், பேரங்காடி, கட்டுக் குலையாமல் உடலை வைக்கும் மையம், தனிச்சிறப்பு வாய்ந்த உணவு விடுதி ஆகியவற்றை இப்பூங்கா பெற்றுள்ளது. Shianfu ஒலி நார் மற்றும் ஒளி வட நிறுவனத்தின் தலைமை இயக்குநர் kazuo imamura, xi'an நகரத்தில் வேலை செய்து வாழ்வது என்பது 3 ஆண்டுகள் ஆகிவிட்டது. அவர் கூறியதாவது:


நான் xi'an நகரத்துக்கு வந்த போது, இங்கு நிறைந்த பொருட்கள் காணப்படலாம். எடுத்துக்காட்டாக, பல்வகை பேரங்காடி, வசதியான செய்தித் தொடர்பு, உயர் வேக நெடஞ்சாலைகள் ஆகியவையை இந்நகர் பெற்றுள்ளது. கடந்த சில ஆண்டுகளில், காற்றுத் தரம் பெரிதும் உயர்த்தப்பட்டுள்ளன என்பது என் மனதில் ஆழப்பதிந்துள்ளது. சுற்றுச் சூழல் பாதுகாப்பில் அரசு அதிக வேலையை செய்துள்ளது என்றார் அவர்.
தற்போது, xi'an உயர் புதிய தொழில் நுட்ப பூங்கா, மின்னணு தகவல் துறை, சாதனத் தயாரிப்பு, உயிரியல் மருத்துவம், புதிய எரியாற்றல் ஆகிய 4 தொழில் துறைகள் மிகுந்த கவனம் செலுத்தி, பன்நோக்க குறிக்கோள் நாட்டு உயர் புதிய பூங்கா தரவரிசையில் முன்னணி 4 இடங்களை வகிக்கின்றன. சீனாவின் உயர் புதிய தொழில் நுட்பப் தொழில் துறை பூங்காவில் மிக வளர்ச்சியடைய மண்டலமாக மாறியுள்ளது.