• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-03-10 09:32:21    
49வது உலக மேசைபந்து போட்டி

cri
49வது உலக மேசைபந்து குழுப் போட்டிகள் மார்ச் 2ம் நாள் இரவு சீனாவின் குவாங் சோவில் நிறைவடைந்தன.

அன்றிரவு நடைபெற்ற ஆடவர் குழுவின் இறுதிப் போட்டியில், சீன ஆடவர் அணி 3-0 என்ற ஆட்ட கணக்கில் தென் கொரிய அணியை தோற்கடித்தது. சீன ஆடவர் மேசைபந்து அணி 16வது முறையாக இப்போட்டியின் சாம்பியன்பட்டத்தைப் பெறுவதோடு, 4 முறைகளாக உலக மேசைபந்து ஆடவர் குழுப் போட்டியின் சாம்பியன்பட்டத்தைத் தொடர்ந்து பெற்றுள்ளது. தென் கொரிய ஆடவர் அணி இரண்டாவது இடத்தை வகித்தது, சீன ஹாங்காங் மற்றும் ஜப்பானிய ஆடவர் அணிகள் மூன்றாம் இடத்தை பெற்றன.

1ம் நாள் நடைபெற்ற மகளிர் குழுவின் இறுதிப் போட்டியில், சீன மகளிர் அணி 3-1 என்ற ஆட்ட கணக்கில் சிங்கப்பூர் அணியை தோற்கடித்து, இப்போட்டியின் சாம்பியன்பட்டத்தைப் பெற்றது.
130க்கு மேலான நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 72 ஆடவர் மற்றும் 72 மகளிர் அணிகள் பிப்ரவரி 23ம் நாள் இந்த 49வது உலக மேசைபந்து போட்டியில் போட்டியிட்டுள்ளன.
49வது உலக மேசைபந்து தனிநபர் போட்டிகள் 2009ம் ஆண்டு ஜப்பானின் Yokohama நகரில் நடைபெறும்.

ஆடவர் 110 மீட்டர் தடைகள போட்டியின் உலக சாதனையாளரும், ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் சாம்பியன் பட்டம் பெற்ற சீனப் புகழ் பெற்ற வீரருமான லீயு சியங், 2008ம் ஆண்டு உலக உள்அரங்க தடகள போட்டியில் கலந்துகொள்ள, சீனத் தடகள பிரதிநிதிக் குழுவுடன் 1ம் நாள் ஸ்பெயினின் Valencia நகருக்குச் சென்றார்.
லீயு சியங், இப்போட்டியின் சாம்பியன் பட்டத்தைப் பெறுவது கடிமை என்று கணிக்கப்பட்டுள்ளது. கியூப வீரர் Dayron Robles அண்மையில் அசுர வேகத்தில் வளர்ச்சியடைந்து, இவ்வாண்டின் ஆடவர் 60 மீட்டர் தடைகள போட்டியில், 7.33 வினாடிகள் என்ற அவருடைய பதிவைப் பெற்றுள்ளதோடு, வரலாற்றில் இப்போட்டியின் 2வது தலைசிறந்த சாதனையை உருவாக்கியுள்ளார்.
திட்டப்படி, லீயு சியங் மார்ச் 8ம் நாள் ஆடவர் 110 மீட்டர் தடைகள போட்டியில் கலந்துகொள்வார்.

திட்டப்படி, 2008ம் ஆண்டு பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் மரத்தான் ஓட்டப்போட்டி பெய்சிங்கில் நடைபெறும். பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு அமைப்புக் குழுவின் விளையாட்டு பிரிவின் துணைத் தலைவர் Liu Wenbin வானிலை மற்றும் காற்று மாசுபாடு காரணமாக பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் மரத்தான் ஓட்டப்போட்டி இதர நகரில் நடைபெறுவது பற்றிய செய்தி குறித்து 19ம் நாள் இவ்வாறு தெரிவித்தார்.