• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-03-11 15:35:36    
பேரரசியின் ச்சியான் கல்லறை (அ)

cri

ச்சியான் கல்லறை, சான்சி மாநிலத்திலுள்ள ச்சியான் மாவட்டத்தின் வடக்கு பகுதியிலிருந்து 5 கிலோமீட்டர் தூரத்திலான லியாங் மலையில் அமைந்துள்ளது. இது, தாங் வம்சகாலத்தின் பேரரசர் லீ ச்சீ மற்றும் அவரது மனைவியும் தா ச்சோ தா ஷேங் பேரரசியுமான வூ ச்சே தியான் ஆகிய இருவரின் கல்லறைகள் ஆகும்.

ச்சியான் கல்லறை, வெய் ஆற்று வடக்குப் பகுதியிலுள்ள 18 கல்லறைகளின் மேற்கில் இருக்கிறது. பிற கல்லறைகளை விட, இக்கல்லறைகளில் கற்சிலைகள் அதிகமாகவும், அதன் உச்சி பெரிதாகவும், பரப்பளவு விரிவாகவும் இருக்கின்றது. இந்த பெரிய கல்லறைகள் மற்றும் லியாங் மலையின் வடக்கு உச்சி பிரமாண்டமாகக் காட்சி அளித்துள்ளன.

லியாங் மலையில் மூன்று உச்சிகள் இருக்கின்றன. வடக்கு உச்சி, மிக உயரமாக இருக்கிறது. இக்கல்லறை இதில் தான் உள்ளது. தெற்கிலுள்ள இரு உச்சிகல் உயரம் குறைவாக இருக்கின்றன. கிழக்கு முகட்டிற்கும் மேற்கு உச்சிகளிடையில் ஒரு புனித பாதை இருக்கிறது. அதனால், அந்த இரு முகட்டுகள், மார்பு முகட்டு என அழைக்கப்படுகின்றன.

இக்கல்லறையின் முதல் வாயிலில் நுழைந்தால், புனித பாதையைக் காணலாம். அப்பாதை மூலம், இக்கல்லறைக்குச் செல்லலாம். அதன் இரு பக்கங்களிலும், இரு தூபிகள், பறக்கின்ற இரு குதிரைகள், இரு தீக்கோழிகள், 10 குதிரைகள் முதலியவற்றின் சிற்பங்கள் இருக்கின்றன. கிழக்கில், எழுத்துகளில்லாத கற்தூபி, மேற்கில் சாதனைகளைக் கூறும் கற்தூபி இருக்கின்றன.

தாங் வம்சகாலத்தின் பேரரசரின் கல்லறை என்ற சில எழுத்துக்களை கொண்ட கல் தூபியின் உயரம், 2 மீட்டராகும். அதன் வலது பக்கத்தில் ஒரு கல்லறை தூபி இருக்கிறது. அதில், Guo Moruo செதுக்கிய தாங் வம்சகாலத்தின் பேரரசர் மற்றும் பேரரசியின் கல்லறை என்ற சில எழுத்துக்கள் செதுக்கப்படுகின்றன.

சாதனைகளைக் கூறும் தூபி, வூ ச்சே தியான் பேரரசராக கட்டியமைத்த, சாதனைகளை கொண்டுள்ள கல் தூபியாகும். அது, 6.3 மீட்டர் உயரமும், 1.86 மீட்டர் அகலமும் கொண்டது.

ஆனால் இதில் எந்த எழுத்துக்களுமில்லை. பேரரசி வூ ச்சே தியானின் விருப்பத்தின்படி, இக்கல் தூபியில் எந்த எழுத்துக்களும் செதுக்கப்படவில்லை. இது சாதனைகள் அல்லது குறைபாடுகளை பிறர் விமர்சமை செய்ய வேண்டும் என்பது, அதன் பொருளாகும். தற்போது, இக்கல் தூபியில் செதுக்கப்பட்ட சில எழுத்துக்கள், சோங் மற்றும் ச்சின் வம்சகாலத்திற்குப் பின் மக்களால் செதுக்கப்பட்டவையாகும்.