• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-03-11 14:23:43    
சீனாவின் பல்கலைக்கழகங்கள் வெளிநாட்டு மாணவர்களை சேர்ப்பது 2

cri
1997ம் ஆண்டு முதல் சீன அரசின் புலமை பரிசு பெற்ற வெளிநாட்டு மாணவர்களுக்கான தேர்வு, சேர்க்கை மற்றும் நிர்வாகப் பணிக்குச் சீன கல்வி உதவி அவை அதிகாரப்பூர்வமாக பொறுப்பு ஏற்றது. சீன அரசின் புலமை பரிசு பற்றி இந்த அவையின் அதிகாரி li yan guang எங்களுக்கு அறிமுகப்படுத்தினார். அவர் கூறியதாவது,
சீன அரசு புலமை பரிசு வழங்குவதில் பொதுவாக தனிநபருடன் தொடர்பு கொள்ளவில்லை. சீன அரசும் பிற நாடுகளும் உருவாக்கிய இரு தரப்பு உடன்படிக்கையின் படியே இது வழங்கப்படும். வெளிநாடுகளிலுள்ள சீனத் தூதரகங்களிடம் சீனா வெளிநாட்டு மாணவர்களை சேர்க்கும் எண்ணிக்கை, அகந்த கோரிக்கை, நாம் ஒப்படைக்கின்றோம்.. ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும், சீனத் தூதரகங்கள் மூலம் இந்த தகவல்கள் அந்தந்த நாட்டு அரசு வாரியங்களிடம் ஒப்படைக்கப்படும். ஏப்ரல் திங்கள் 30ம் நாள், சீனத் தூதரகங்கள் கிடைத்த பதில் தகவல்களை எங்களுக்குத் திருப்பி அனுப்பும். இதன் படி மாணவர்களைச் சேர்க்கின்றோம் என்றார் அவர்.
தனிநபர் விண்ணப்பம் செய்யக் கூடிய புலமை பரிசுகளையும் சீன அரசு வழங்குகின்றதா என்று சிலர் கேட்கின்றார்கள். இது பற்றி li yan guang கூறியதாவது

ஆசிய புலமை பரிசை சீன அரசு நிறுவியுள்ளது. ஆஸ்திரேலியா, நியு சிலாந்து உள்ளிட்ட ஆசிய நாடுகளின் மாணவர்கள் தங்களது சொந்த பெயரில் இதனை பெறலாம். எதிர்காலத்தில், தொழில் நிறுவனங்களுடன் ஒத்துழைத்து, தொழில் நிறுவனப் புலமை பரிசை நிறுவத் திட்டமிட்டுள்ளோம். தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி தேவைக்கிணங்க, குறிப்பிட்ட நாடுகளின் மாணவர்களுக்கு இது வழங்கப்படும் என்றார் அவர்.
வெளிநாடுகளின் மாணவர்கள், சீனக் கல்வி உதவி அவையின் இணையதளம் மூலம் புலமை பரிசுக்காக விண்ணப்பப் படிவங்களை நிரப்பலாம். தவிர, தமது நாட்டிலுள்ள சீனத் தூதரகத்திடமிருந்து விண்ணப்பப் படிவங்களைப் பெறலாம் என்று அவர் எடுத்து கூறினார். சீனாவில் முதுகலை அல்லது மேலதிக ஆய்வு பெற, 2 பேராசிரியர்கள் அல்லது துணை பேராசிரியர்களின் பரிந்துரை கடிதங்களையும் தமது கல்வித்தகுதி பற்றிய முழு விபரங்களையும் வழங்க வேண்டும். கலை துறையில் சேர வேண்டுமானால், படைப்புகள் கொண்ட இறுவட்டை ஒப்படைக்க வேண்டும்.


கடந்த ஆண்டு 8484 வெளிநாட்டு மாணவர்கள் சீன அரசின் புலமை பரிசுடன் சீனாவில் கல்வி பெற்றனர். அவர்களில் 48 விழுக்காட்டினர் மொழி அல்லது பண்பாட்டு துறையில், பயில்கின்றனர். வளரும் நாடுகள் குறிப்பாக ஆப்பிரிக்க நாடுகளின் மாணவர்களில் பொறியியல், வேளாண்மை, மருத்துவம், பொருளாதாரம், நிர்வாகம் முதலிய துறைகளைத் தேர்தெடுப்பவரின் எண்ணிக்கை மென்மேலும் அதிகரித்து வருகின்றது. சீனாவின் உயர் கல்வி துறையிலான ஒதுக்கீட்டுத் தொகை அதிகரிப்பதுடனும், சீனாவில் அறிவியல் ஆய்வின் ஆற்றல் வலுவடைவதுடனும், பொறியியல் துறையில் சேரும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை மென்மேலும் அதிகரிக்கும் என்று LI YAN GUANG நம்பிக்கை தெரிவித்தார்.
வெளிநாட்டவர்கள் எங்கிருந்து சீன உயர் கல்வி நிலையங்களின் தகவல் பெறுவர் என்பது பற்றி அவர் கூறியதாவது


சீன அரசின் புலமை பரிசை ஏற்றுக்கொள்ளும் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்கள், இவற்றின் துறைகள் ஆகியவை பற்றிய ஒரு கையேட்டு புத்தகத்தை எமது அவை வெளியிட்டது. சீன மொழி மற்றும் ஆங்கில மொழியில் இது பதிப்பிக்கப்பட்டது. தவிர, ஒவ்வொரு ஆண்டும், மாணவர்களைச் சேர்ப்பது பற்றிய தகவலை விநியோகிக்கும் போது, இணையம் உள்ளிட்ட வழிமுறைகளின் மூலம், இந்த தகவல்களை வழங்குகின்றோம் என்றார் அவர்.
2003ம் ஆண்டு முதல், சீனக் கல்வி துறையின் பெயரில் வெளிநாட்டு மாணவர்களுக்கான ஒட்டுமொத்த மருத்துவ காப்பீட்டு உடன்படிக்கையை சீன கல்வி உதவி அவை சீன PING AN காப்பீட்டு கூட்டு நிறுவனத்துடன் உருவாக்கியது. எதிர்பாராதகாயம், உயிர் இழப்பு, சம்பவம், கடுமையான நோய் ஆகியவற்றுக்கான மருத்துவமனையிலான சிகிச்சை கட்டணம் ஆகியவை இந்த காப்பீட்டில் சேர்க்கப்படுகின்றன. அன்றாட மருத்துவ சிகிச்சை காட்டணம் இதில் சேர்க்கப்படவில்லை. இதற்கு பல்கலைக்கழகங்கள் 90 விழுக்காட்டை பொறுப்பேற்கும். மாணவர்கள் எஞ்சிய 10 விழுக்காட்டு கட்டணம் செலுத்த வேண்டும். இதுவரை, தனி செலவு மாணவர்கள் இதில் சேர்க்கப்படவில்லை.
சீன கல்வி உதவி அவையின் மற்றொரு அதிகாரி QIU YONG,சீனாவில் பயிலும் வெளிநாட்டு மாணவர்களுக்கு அன்றாட வாழ்க்கையில் தேவையான யோசனை சிலவற்றை வழங்கினார். அவர் கூறியதாவது


வெளிநாட்டு மாணவர்களுக்கான நிர்வாக அலுவலகத்தில் பணிபுரிகின்ற ஆசிரியர்கள் வெளிநாட்டு மாணவர்களின் நிலைமையை நன்றாக அதிகமாக அறிந்து கொண்டுள்ளனர். வெளிநாட்டு மாணவர்கள் இன்னலுக்குளாகும் போது, அவர்களிடமிருந்து ஆலோசனையையும் உதவியையும் கேட்டு பெறலாம். எடுத்துக்காட்டாக குளிர்காலத்தில், சில ஆசிரியர்கள் சொந்த செலவில் ஆப்பிரிக்க மாணவர்களுக்கு குளிர் தடுப்பு ஆடைகளையும் போர்வைகளையும் வழங்குகின்றனர்.
சீன மக்கள் நட்புப்பூர்வ மக்களாவர். சீன மாணவர்களும் பல்வேறு நாட்டு மாணவர்களுடன் நண்பர்களாக பழக விரும்புகின்றனர். வெவேறான நாடுகளாயிலும், வெவேறான பண்பாட்டு பின்னணிகளாயிலும் மாணவர்கள் உண்மையாக மற்றவருக்கு மதிப்பளித்து பழகினால், சீனாவில் பயிலும் அனுபவம் அவர்களின் வாழ்க்கையில் மறக்க முடியாத இனிமையான பகுதியாக மாறுவது உறுதி.