• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-03-11 14:25:27    
பெயர்களின் வகைகள்

cri

தற்போது ஏறக்குறைய 300 மிகப்பரவலான முடும்பப்பெயர்கள் சீனாவில் பயன்பாட்டில் உள்ளன. சீனாவிலிருந்தான அண்மைய புள்ளிவிபரங்களின் படி ஷாங் (ZHANG), என்ற பெயரை குடும்பப்பெயராக கொண்டவர்களின் எண்ணிக்கை மட்டுமே 10 கோடியாகும். சீனாவில் மிகப் பரவலான பயன்பாட்டிலுள்ள குடும்பப்பெயர்களில் ஒன்றாக ஷாங் (ZHANG) உள்ளது. 10 கோடி என்ற எண்ணிக்கை பிரிட்டன் பிரான்ஸ் இருநாடுகளின் மொத்த மக்கள் தொகைக்கு இணை என்று கூறப்படுகிறது.


சீனாவில் குடும்பப் பெயர்களை வகைப்படுத்தி பார்க்கவேண்டுமாயின், பரவலான பெயர்கள் அல்லது மிக பெரும்பாண்மையாக உள்ள குடும்பப்பெயர்கள் தொடங்கி கொஞ்சம் கொஞ்சமாக பட்டியலை நீட்டிக்கலாம். அந்த வகையில், சீனாவில் மிகப்பரவலாக பயன்படுத்தப்படும் முதல் 10 குடும்பபெயர்களின் மொத்த மக்கள் தொகை, சீனாவின் மொத்த மக்கள் தொகையில் 40 விழுக்காடு என்று மற்றொரு புள்ளி விபரம் கூறுகிறது. பரவலான பயன்பாட்டிலுள்ள குடும்பப்பெயர்களின் முதல் 10 பெயர்களை இப்போது உங்களுக்காக அறியத் தருகிறோம். ஷாங் (ZHANG), வாங் (WANG), லீ (Li), ஷாவ் (ZHAO), ச்சன் (CHEN), யாங் (YANG), வூ (WU), லியு (LIU), ஹுவாங் (HUANG) மற்றும் ஷோ (ZHOU).


அடுத்த 10 இடங்களை பிடித்த பெயர்கள் :
சூ (XU), ஸூ (ZHU), லின் (LIN), சுன் (SUN), மா (MA), காவ் (GAO), ஹு (HU), ஷெங் (ZHENG), குவோ (GUO) மற்றும் ஷியாவ் (XIAO). இந்த பத்து பெயர்களை குடும்பப் பெயர்களாகக் கொண்டவர்கள் சீனாவின் மொத்தை மக்கள் தொகையில் 10 விழுக்காட்டினர்.
இதற்கு அடுத்து சியே (XIE), ஹ (HE), சுங் (SUNG), ஷென் (SHEN), லுவோ (LUO), ஹான் (HAN), தெங் (DENG), லியாங் (LIANG), யெ (YE) முதலியவை பெயர்கள் மூன்றாவது 10 பரவலான பெயர்களாகவுள்ளன.
இந்த 30 குடும்பபெயர்களை தவிர்த்த அடுத்த மிகப்பரவலான எண்ணிக்கையிலுள்ளவர்கள் அடுத்த 15 பெயர்களைக் கொண்டவர்களாவர்.
இது தவிர, பெயர்களின் பொருள், அர்த்தம் அதன் அடிப்படையிலும் குடும்பப்பெயர்களை வகைப்படுத்தலாம். எடுத்துக்காட்டாக, எண்கள் பெயராக பயன்படுத்தப்படுவது, பருவகாலங்கள், திசை, செய்யும் தொழில், குறிப்பிட்ட விலங்கு, செடி, நிறம் இவற்றின் அடிப்படையிலான பெயர்கள் என குடும்பப் பெயர்களை வகைப்படுத்தலாம்.
1000 ஆண்டுகளுக்கு முன்பு குடும்பப்பெயர்களை பற்றி ஒரு நூல் எழுதப்பட்டது. கி. பி. 960 முதல் 1127 ம் ஆண்டு வரையான வட சுங் வம்சகாலத்தில் எழுதப்பட்ட இந்நூலின் பெயர் பாய் ஜியா சிங் (BAI JIA XING). அந்நாட்களில் மிகவும் புகழ்பெற்ற ஒரு நூலாக இந்த நூல் திகழ்ந்தது. இந்நூலை இயற்றியவர் யார் என்பது தெரியவில்லை. ஆனால், இதன் ஆசிரியர் மிக அழகாக குடும்பப்பெயர்கள்,


இதில் மொத்தம் 438 குடும்பப்பெயர்கள் உள்ளன. அவற்றில் 408 பெயர்கள், ஒற்றை அசை அல்லது ஒற்றை எழுத்து பெயர்களாகும். முந்தைய நிகழ்ச்சியில் இது பற்றி விளக்கியிருந்தோம், இருப்பினும் மறுபடி உங்களுக்காக ஒற்றை அசை இரட்டை அசை பெயர்கள் பற்றி சிறு குறிப்பு.
வாங், ஷாங், வாங், ஷாவ் ஓவ்யாங், ஷுகெ, சுமா, குங்சுன் இவை சில சீனாவில் பயன்படுத்தப்படும் குடும்பப்பெயர்களாகும்.