• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-03-11 10:01:42    
சுற்றுசூழல் பாதுகாப்பு

cri

தமிழன்பன் இன்றைய நிகழ்ச்சியின் முதலாவதாக சென்னை பி. குமரேசன் எழுதிய கடிதம். நேயர் விருப்பம் நிகழ்ச்சி கேட்டேன். பாடல்களை விரும்பிய நேயர்களின் பெயர்கள் சரியாக குறிப்பிடப்பட்டு, பழையப்பாடலுக்கு பின் ஒரு புதியப்பாடல் என்ற முறையில் வழங்குவது நிகழ்ச்சியியை மெருகூட்டுகிறது. இம்முறை எல்லா நேயர்களையும் திருப்திபடுத்தும்.


கலை தொடர்வது அறிவியல் கல்வி நலவாழ்வு பாதுகாப்பு நிகழ்ச்சி பற்றிய ஈரோடு க. ராகம் பழனியப்பன் எழுதிய கடிதம். தாய்பாலின் மகத்துவம், வேலைக்கு செல்லும் மகளிர் தாய்பால் கொடுக்க முடியாத நிலைக்கு உள்ளாகும் அவலநிலை ஆகியவை பற்றி அறிந்து கொண்டேன். பேறுகால விடுப்பு ஆறு மாதகாலமாக உயர்த்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை நியாயமானதாகவே தோன்றுகிறது. தாய்மையின் மகத்துவத்தை போற்றிய நிகழ்ச்சிக்கு பாராட்டுக்கள்.
தமிழன்பன் அடுத்ததாக, பழனி பகத்சிங் ஏழுதிய கடிதம். சீன வரலாற்று சுவடுகள் நிகழ்ச்சி கேட்டேன். ஒரு நாட்டின் வரலாறு, நிகழ்கால முன்னேற்றத்தின் பாதை. சீன நாட்டின் வரலாற்று தகவல்கள் அதன் கடந்தகால வளர்ச்சி போக்கை விளக்குவதாக அமைந்துள்ளன. இந்த நிகழ்ச்சி வரலாற்று பிரியர்களுக்கு விருந்தாய் அமைகிறது என்றால் மிகையாகாது. நேருக்குநேர் நிகழ்ச்சியில் மதுரை – 20 அமுதராணி அவர்களுடனான பேட்டி கேட்டேன். நேயர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சீன வானொலிக்கு நிகர் வேறெதுவுமில்லை


கலை பகத்சிங் உங்கள் புகழுரைக்கு நன்றி. எங்கள் இந்த முயற்சிகள் தொடர உங்கள் இடைவிடாத ஒத்துழைப்புகளை எதிர்பார்க்கின்றோம். அடுத்ததாக இலங்கை கண்டி ச. கஜனி எழுதிய கடிதம். மலரானது ஆதவனைக்கண்டு மகிழ்வதைவிட அதிகமாக சீன வானொலி நிகழ்ச்சிகள் கண்டு நாங்கள் மகிழ்கின்றோம். கஜனி எழுதி அனுப்பியுள்ள மரங்களை அழிப்பதால் ஏற்படும் அழிவு பற்றிய அருமையான கவிதையை கேளுங்கள்.
அரும்பு மலர்ந்து விரியும் தருவாயில்
வெட்டினான் அம்மரத்தை
கண்ணீர் விட்டன கிளைகள்
கசிந்துரிகின மலர்கள் – இன்று
மிதவை நகரமாய் அந்நகரம்.


தமிழன்பன் சமூக அக்கறை நிறைந்த உங்கள் கவிதை வரிகளுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். இதை போன்ற பல்வேறு கவிதை வரிகளால் சமூக கருத்துக்களை பலர் உள்ளத்தில் விதைக்க வாழ்த்துகிறோம். அடுத்து குமரி இரா. பத்மதாஸ் அனுப்பிய கடிதம்.இன்பப்பயணம் நிகழ்ச்சியில் பெங்குங் காட்டு புங்கா பற்றி அறிந்து கொண்டேன். சீன கதை நிகழ்ச்சி வழங்கும் விதம் நன்றாக உள்ளது.
கலை அடுத்ததாக திமிறி கே. எஸ் அபிராமி எழுதிய கடிதம். நேயர் நேரம் நிகழ்ச்சியில் கடிதங்களை படிப்பதோடு நின்று விடாமல் இடைஇடையே நேயர்களின் குரல் பதிவையும் வழங்குவது பாராட்டுவதற்குரியது. சீன வானொலி செய்திகள் முக்கியமானதாகவும் உகந்ததாகவும் தொகுத்து வழங்கப்படுவது பேற்றுதற்குரியது. இதே கருத்தை வேலூர் என். கோதைலஷிமியும் செய்திகளைப்பற்றி தெரிவித்திருந்தார். புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சியை வித்தியாசமாக அமைத்திருந்தது தொடர்ந்து கடைபிடிக்கப்படலாம். இராமபாளையம் ஆதித்தியனும் தான் எழுதிய கடிதத்தில் புத்தாண்டு நிகழ்ச்சி வழங்கப்பட்ட முறையை பாராட்டியுள்ளார்.
மின்னஞ்சல் பகுதி


……மதுரை-20 அமுதாராணி……
ஒரு கோடியே 80லட்சம் மக்கள் தொகையை கொண்ட மாநகரமான ஷாங்ஹாய் கடந்த சில ஆண்டுகளாக நகரவாழ் மக்களின் போக்குவரத்து தேவையை நிறைவு செய்து 2010ஆண்டு உலக பொருட்காட்சிக்கு சிறந்த போக்குவரத்து சேவையை வழக்கியுள்ளது பாராட்டுதற்குரியது.


……பெரிய காலாப்பட்டு பி.சந்திரசேகரன்……
குரல் இனிது, யாழ் இனிது என்பார்கள் மழலைச் சொல் கேளாதவர்கள் என்பது எவ்வளவு பெரிய உண்மை என்பதை பலமுறை உணர்ந்து இருந்தாலும் இசை நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் உணர்ந்தேன். குழந்தைகள் பாடிய சீன நாட்டுப் புற பாடல்கள் மிகவும் இனிமை. மனதின் பாரத்தை குறைத்து இளவன் பஞ்சாக காற்றில் மிதக்க விட்டது அந்த மழலையரின் கணங்கள். ஒவ்வொரு பாடலையும் சிறப்பான முறையில் மொழிபெயர்த்துக் கூறிய திலகவதி அவர்கள் இந்த நிகழ்ச்சிக்கு புதியவர் என்பதையே மறக்கச் செய்துவிட்டது.


….ஊத்தங்கரை கவி.செங்குட்டுவன்….
கேள்வியும் பதிலும் நிகழ்ச்சி கேட்டேன். அதில் 2008 - ம் ஆண்டு சீனாவின் ஒலிம்பிக் ஆண்டு என்பதால் நாள்தோறும் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கென 5 நிமிட நிகழ்ச்சி ஒலிபரப்பப்படும் என்ற செய்தி கேட்டு மகிழ்ந்தேன். மேலும் ஆகஸ்ட் திங்கள் முதல் நாள் தமிழ் ஒலிபரப்பின் 45வது ஆண்டு நிறைவை கொண்டாடும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள கட்டுரைப் போட்டியில் அதிக நேயர்கள் கலந்து கொள்வதற்கு எமது கிருஷ்ணகிரி மாவட்ட சீன வானொலி நேயர் மன்றம் சார்பில் வாழ்த்துக்கள்.
。。。。。。மதுரை அண்ணாநகர் N. ராமசாமி。。。。。。
உரிமை போரட்டம் என்ற தலைப்பில் சீனாவில் தோன்றி பல்லாண்டுகள் பயிரிடப்பட்ட சோயா அவரை பயிரை இன்று வெளிநாட்டினர் உரிமை கொண்டாடும் நிலைமை ஏற்பட்டு உள்ளது என்ற கருத்தை சிறப்பாக சீனா வானெலி தமிழ் பிரிவு எடுத்து கூறியது பாராட்டுதலுக்கு உரியது. பிற நாடுகளின் மூலவளங்களை கொள்ளை அடிக்கும் நிலை மாற வேண்டும். இதற்கு வளரும் நாடுகள் முயற்சி மேற்கொள்ளவேண்டும்.


……வளவனுர் புதுப்பாளையம் எஸ்.செல்வம்……
ஜனவரித் திங்கள் 31 ஆம் நாள் இடம்பெற்ற அறிவியல் கல்வி மற்றும் நலவாழ்வுப் பாதுகாப்பு நிகழ்ச்சியில் நான்ஜிங் மாநகரிலுள்ள செஞ்சிலுவை மருத்துவமனை என்ற கட்டுரையைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன். குறைந்த கட்டணம், தரமான சேவை என்று சிறப்பான முறையில் செயல்பட்டு வரும் இம்மருத்துவமனையில் தியன்ஜின் நகரின் மொத்த மக்கள் தொகையில் சரிபாதி பேர் சிகிச்சை பெற்றுள்ளனர் என்ற தகவலில் இருந்து இதன் உள்ளார்ந்த சேவையை புரிந்து கொள்ள முடிகின்றது. மருத்துவ செலவு என்பது தற்போதைய காலக்கட்டத்தில் மக்களுக்கு பெரிதும் சுமையாகிவிட்டது. இதுபோன்ற மருத்துவமனைகள் பல்வேறு இடங்களிலும் தோன்றினால்தான், சாதாரண மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ முடியும். நோயாளி, நோயாளியின் உறவினர், மருத்துவர் என பலதரப்பட்டோரை இக்கட்டுரைக்காக சந்தித்த செய்தியாளருக்கு என் பாராட்டுக்கள். திருப்பூர் இரா.சின்ன‌ப்ப‌ன் அனுப்பிய மின்னஞ்சலிலும் இதை பற்றி குறிப்பிட்டுள்ளார்.