திபெத்தின் வளர்ச்சி உண்மை தான்
cri
சீன திபெத் தன்னாட்சி பிரதேசம் பற்றி தலாய் லாமா அண்மையில் வெளியிட்ட தவறான கூற்றிற்குச் சீன வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் சின் காங் மறுப்பு தெரிவித்தார். திபெத்தின் வளர்ச்சி திரித்துக் கூறப்பட முடியாது என்று அவர் சுட்டிக்காட்டினார். இன்று பெய்ஜிங்கில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பேசிய அவர், உண்மையைத்திரித்துக் கூறி, திபெத் பிரச்சினையை பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியுடன் இணைத்து, ஒலிம்பிக்கை அரசியலாக்கும் சூழ்ச்சி வெற்றி பெறாது என்று கூறினார். தலாய் லாமா வரலாற்றையும் நடைமுறையையும் சரியாக அறிந்து தனது வாழ்நாளில் திபெத் மக்களுக்கு நன்மை தரும் உண்மையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று சின் காங் விருப்பம் தெரிவித்தார்.
|
|