• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-03-12 14:32:35    
இந்தியாவிலிருந்து வந்த இளைஞர் சௌத்ரி திலீப் கிரிதர்

cri
இந்தியாவிலிருந்து வந்த இளைஞர் சௌத்ரி திலீப் கிரிதர், சீனாவின் மத்திய பகுதியிலுள்ள SHAN XI மாநிலத்தின் TAI YUAN நகரத்தை ஆழமாக விரும்புகிறார். கடந்த சில ஆண்டுகளாக, உள்ளூர் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு ஆங்கில மொழியைக் கற்றுக் கொடுப்பது மட்டுமல்ல, சீன Kong Fuவையும் அவர் கற்றுக் கொண்டுள்ளார். அன்பு நேயர்களே, இன்றைய நிகழ்ச்சியில், அவரது உலகில் நுழைந்து, இந்திய இளைஞர் ஒருவருக்கும் சீனப் பண்பாட்டுக்கும் இடையில் எத்தகைய உறவு இருக்கிறது என்பதைப் பார்ப்போம்.
"என் சீனப் பெயர் CHEN AI LONG. டிராகன் என்பது, சீனப் பண்பாட்டையும் கலையையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. எனது விருப்ப நாயகர் Bruce leeயையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. சீனப் பண்பாட்டை நான் மிகவும் விரும்புகின்றேன். Bruce leeயை விரும்புகின்றேன். சீனாவை நான் நேசிக்கின்றேன். எனவே என் பெயர் AI LONG" என்றார் கிரிதர்.
வெளிநாட்டவர் பலரை போல், சீனாவின் Kong Fu திரைப்படங்களே, சீனப் பண்பாட்டை CHEN AI LONG விரும்புவதற்கு முதலாவது காரணம். எதிர்பாரா ஒரு வாய்ப்பினால், உடல் நிலை பலவீனமான அவர், Kong fu நட்சத்திரம் Bruce lee கதா நாயகனாக நடித்த திரைப்படத்தைக் கண்டு ரசித்தார். திரைப்படத்தில் தீய சக்திக்கு அடிபணியாத Bruce leeயின் வியப்பூட்டும் நேர்மை மற்றும் தலைசிறந்த Kong Fu காட்சிகள், அவரது மனத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தின.


"உண்மையான சீனப் பண்பாட்டை அறிந்து கொள்ளவும், உண்மையான சீன Kong fuவைக் கற்றுக் கொள்ளவும் விரும்பினேன். என்றைக்காவது சீனாவுக்கு வர வேண்டும் என்பது எனது கனவு" என்றார் அவர்.
2002ஆம் ஆண்டில், SHAN XI ஆசிரியர் பயிற்சி பல்கலைக்கழகத்திலிருந்து வந்த அழைப்பு கடிதத்தினால், சீனா பற்றிய CHEN AI LONGகின் கனவு நனவாக்கப்பட்டது. பேச்சு மொழி ஆங்கிலம் கற்றுக் கொடுக்கும் ஆசிரியராக, அவர் சீனாவுக்கு வந்தார்.
தொடக்கக் காலத்தில், சீனாவிலான வாழ்க்கைக்கு அவர் பழக முடியவில்லை. சீனாவில் இருந்த முதல் வாரத்தில், அவர் நோய்வாய்ப்பட்டார். சீனாவில் தங்கியிருக்கும் விருப்பத்தைக் கைவிட திட்டமிட்ட போது, அவரது சீன நண்பர்கள் அனைவரும் முன்முயற்சியுடன் அவருடன் தொடர்பு கொண்டு, அவரது வாழ்க்கையில் கவனம் செலுத்தினர். இது CHEN AI LONGகிற்கு பெரும் நம்பிக்கையைக் கொண்டு வந்தது. உள்ளூர் சமூகத்தில் மேலும் செவ்வனே பங்கெடுக்க, அவர் சீன மொழியைக் கற்றுக் கொள்ளத் துவங்கினார்.
தனது கனவை நனவாக்கும் பொருட்டு, அவர் ஓய்வு நேரத்தில் ஆசிரியரிடம் Kong Fuவைக் கற்றுக் கொள்ளத் தொடங்கினார். சீனாவின் பல நகரங்களில் அவர் தங்கி இருந்தார். Kong Fuவைக் கற்றுக் கொண்ட போக்கில், தனது உள்ளார்ந்த ஆற்றலைக் கண்டுபிடித்ததோடு, சீன Kong Fuவின் சாராம்சத்தையும் படிப்படியாக அறிந்து கொண்டுள்ளார். அவர் கூறியதாவது—


"Kong Fuவைக் கற்றுக் கொண்டால், உளத்தில் நிம்மதி ஏற்படும். பிறரைத் தோற்கடிப்பதற்குப் பதிலாக, சொந்தத்தில் பாசமுள்ள அனைவரையும் பாதுகாப்பது தான், Kong Fuவைக் கற்றுக் கொள்ள வேண்டிய நோக்கமாகும். இதன் மூலம், மேலும் விறுவிறுப்பாகவும் முனைப்புடனும் உற்சாகத்துடனும் நீங்கள் இருப்பீர்கள். எனது கருத்திலான Kong Fuவின் சாராம்சம் இதுதான். டிராகன் வெளிப்படுத்தும் எழுச்சியாகவும் இது திகழ்கிறது என நான் கருதுகின்றேன்" என்றார் அவர்.
காலம் செல்லச் செல்ல, சீனாவில் CHEN AI LONGகின் வேலையும் வாழ்க்கையும் மென்மேலும் தடையின்றி நடைபெற்று வருகின்றன. 2006ஆம் ஆண்டு பெய்ஜிங் தொலைக்காட்சி நிலையம் நடத்திய வெளிநாட்டவரின் சீனத் தேசிய கலை போட்டியில், பதுங்கும் புலி ஒளிந்த டிராகன் என்ற Kong Fu சிறு நிகழ்ச்சியை அவர் அரங்கேற்றி, பல்சுவை நிகழ்ச்சி பிரிவின் 3வது பரிசை பெற்றார். அதற்குப் பிறகு, சீன தொலைக்காட்சி ரசிகர்களின் கவனத்தை அவர் ஈர்த்து வருகிறார். அவரது அரங்கேற்றத்தைக் கண்டு களித்த ஒருவர் கூறியதாவது—
"CHEN AI LONGகின் அரங்கேற்றத்தைக் கண்டால், மனம் உருகுவோம் என உணர்கின்றேன். வெளிநாட்டவர் சீனாவின் Kong Fu மற்றும் சீனப் பண்பாடு மீதான ஒருவரின் பாசத்திலிருந்து இத்தகைய உணர்வு வருகிறது" என்றார் அவர்.


கலைத் திறனை வெளிப்படுத்துவது, வெளிநாட்டில் வாழும் CHEN AI LONGகிற்கு பேரூக்கம் தரும் என்பதில் ஐயமில்லை. கடந்த இரு ஆண்டுகளில், தங்களது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள சீனாவின் பல செய்தி ஊடகங்கள் அடுத்தடுத்து அவருக்கு அழைப்புகளை விடுத்துள்ளன. தற்போது CHEN AI LONGகின் கால அட்டவணையில் ஏற்பாடுகள் நிறைந்து காணப்படுகின்றன. இது குறித்து அவர் கூறியதாவது—
"தற்போதைய வாழ்க்கை முறையை நான் விரும்புகின்றேன். சுறுசுறுப்பாக இருந்த போதிலும், உற்சாகமும் வேடிக்கைகளும் வாழ்க்கையில் நிறைந்து காணப்படுகின்றன. இது ஆர்வத்தை எழுப்பி வியப்பைக் கொண்டு வரலாம். ஏனென்றால், ஒரு விடயத்தை நிறைவேற்றிய பின், அடுத்ததாக என்ன நிகழும் என்பதை எதிர்பார்ப்பீர்கள். வாழ்க்கை முக்கியத்துவம் வாய்ந்தது என உணர்வீர்கள்" என்றார் அவர்.
சீனாவும் இந்தியாவும் நட்பார்ந்த அண்டை நாடுகளாகும் என்று CHEN AI LONG கூறினார். சுமார் 60 ஆண்டுகளுக்கு முன், இந்திய அறுவை சிகிச்சை மருத்துவர் கோட்னிஸ், ஜப்பானிய ஆக்கிரமிப்பு எதிர்ப்புப் போரில் சீனாவுக்கு ஆதரவாய், சீனாவுக்கு உதவியளிக்கும் இந்திய மருத்துவச் சிகிச்சைக் குழுவில் சேர்ந்து சீனாவுக்கு வந்தார். இன்றுவரை, இருநாட்டு மக்களின் மனதில் கோட்னிஸ் இன்னமும் வீரராக திகழ்கிறார். கோட்னிஸ் போன்று தனது ஆற்றலை வெளிக்கொணர்ந்து, இந்திய-சீன மக்களுக்கிடை நட்புறவை முன்னேற்றக் கூடிய செயலில் தன்னால் இயன்ற அளவில் ஈடுபட வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்தார்.

"இருநாடுகளுக்கிடையில் பண்பாடு, கலை மற்றும் அறிவியல் தொழில் நுட்பப் பரிமாற்றத்தில் ஈடுபட, எதிர்காலத்தில் நிறுவனம் ஒன்றைத் தொடங்க விரும்புகின்றேன். சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பாலமாக மாறவும், இருநாடுகளின் நட்புறவுக்கு பங்காற்றவும், இந்திய மக்கள் சீனா பற்றி மேலும் அதிகமாக அறிந்துக் கொள்ளச் செய்யவும் விரும்புகின்றேன்" என்றார் அவர்.
பல ஆண்டுகளாக சீனாவில் வாழ்ந்து வரும் CHEN AI LONG, பல இடங்களுக்குச் சென்று, சீன நண்பர்கள் பலருடன் பழகியுள்ளார். சீனாவில் பெற்றுள்ள அனுபவங்களால் தனது வாழ்வு ஒளிமயமாகியது. சீனாவில் வாழ்வது தாய்நாட்டில் இருப்பதைப் போல் மகிழ்ச்சியானது என்று அவர் கூறினார்.
இப்பொழுது, CHEN AI LONG போன்ற அந்நிய நண்பர்கள் அனைவரும் சீனாவில் இன்பமான நாட்களைக் கழிக்க வேண்டும் என மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றோம்.