ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் காற்று தரம்
cri
பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை நடத்துவதில் துணை புரியும் நகரான he bei மாநிலத்தின் qin huang dao நகரம், பல நடவடிக்கைகளை மேற்கொண்டு, பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் காற்று தரத்தை உத்தரவாதம் செய்யும். மாசுபாடு கட்டுபடுத்தப்பட வேண்டிய முக்கிய பிரதேசங்கள், தொழிற்துறைகள் ஆகியவற்றை qin huang dao அரசு நிர்ணயித்துள்ளது. இப்போட்டிக்கு முன்பான காலம் மற்றும் போட்டிக் காலத்துக்கான 20 காற்று மாசுபாடு கட்டுப்பாட்டு திட்டங்களை வெளியிட்டது. இப்போட்டி காலத்தில் காற்று தரம் பற்றிய கண்காணிப்பு அறிவிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை அறிவிப்பு அமைப்பு முறையை இந்நகர அரசு வகுத்துள்ளது.
சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 11வது தேசிய கமிட்டியின் முதலாவது கூட்டத்தொடரின் துவக்க விழாவில் கலந்துகொண்ட சீனாவிலுள்ள வெளிநாட்டு தூதர்கள், வரவிருக்கும் 2008ம் ஆண்டு பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டி பற்றி எதிர்பார்ப்புக்களை தெரிவித்தனர். இவ்வாண்டு ஆகஸ்டு திங்கள் பெய்சிங்கில் நடைபெறும் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியைத் ஆவலுடன் எதிர்பார்ப்பதாகவும், சீனா இப்போட்டியை வெற்றிகரமாக நடத்தும் என்றும் சீனாவிலுள்ள தான்சானியத் தூதர் Mapuri தெரிவித்தார்.
சீனாவையும் உலகத்தையும் பொறுத்த வரை, பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டி நடத்துவது என்பது மாபெரும் நிகழ்ச்சியாகும். இப்போட்டியைத் தாம் எதிர்பார்ப்பதாக சீனாவிலுள்ள பிலிப்பைன் தூதர் Novicio தெரிவித்தார். விளையாட்டை அரசியல் மயமாக்குவதை ஸ்விட்சர்லாந்து எதிர்த்து வருகின்றது என்று சீனாவிலுள்ள ஸ்வட்சர்லாந்து தூதர் Burri தெரிவித்தார். பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கு தாம் கட்டாய ஆதரவு அளிப்பதாக சீனாவிலுள்ள ஆப்கான் தூதர் Mirwais கூறினார்.
2008ம் ஆண்டு பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் துவக்க விழாவில் மழை பெய்யும் சாத்தியக் கூறு 10 விழுக்காட்டுக்குள் இருக்கலாம் என்று சீன வானிலை ஆணையத்தின் தலைவர் Zheng Guoguang இன்று கூறினார். ஆகஸ்டு 8ம் நாள் துவக்க விழா சிறந்த வாநிலையில் நடைபெற அவர் விருப்பம் தெரிவித்தார். ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் போது, சீனம், ஆங்கிலம், பிரென்சு ஆகிய மூன்று மொழிகளில் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை பல்வேறு விளையாட்டுத்திடல்கள் மற்றும் அரங்குகளுக்கான வானிலை நிலைமை வெளியிடப்படும்.
|
|