• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-03-12 10:13:21    
இளவரசனின் பேரன்

cri
முன்பொரு காலத்தில் தான் என்ற ஒரு அறிஞர் வாழ்ந்து வந்தார். கல்வியறிவி சிறந்த தானுக்கு பெரும் கவலையாக இருந்ததும், அவரிடம் மற்றவர் குறையாய் கண்டதும் ஒன்றைத்தான், 40 வயதான போதும் திருமணமாகாமல் இருந்தார் அவர். ஒரு நாள் இரவு அவர் பாடல் திரட்டு என்ற புத்தகத்தை வாசித்துக் கொண்டிருந்தார். அப்போது 16 வயது மதிக்கத்தக்க ஒரு அழகிய இளம்பெண் அவர் வீட்டுக்கு வந்தாள். அவளது எழிலான தோற்றமும், உடல் வனப்பும் பூமியில் அவளை போல் வேறொரு அழகி இல்லை என்பதை பறைசாற்றுவதாக இருந்தன. அந்த அழகிய இளம்பெண் அறிஞர் தானை பார்த்து "நான் உங்களை மணமுடிக்க தயார், உங்களுக்கு விருப்பமென்றால்" என்று கூற, வியந்து நின்ற தான் ஆச்சரியமும் மகிழ்ச்சியும் பொங்க, அவளை மணமுடிக்க சம்மதம் என்றார். ஆனால் அழகி "உங்களை மணமுடிக்க தயார் ஆனால் ஒரு நிபந்தனை" என்றாள். தான் என்ன அது என்று கேட்க, "நான் சாதாரண ஒரு பெண் அல்ல. நீங்கள் மூன்று ஆண்டுகளுக்கு என்னை இரவில் விளக்கொளியில் பார்க்கக்கூடாது. இதுவே திருமணத்திற்கான நிபந்தனை" என்றாள்.
தான் அவளது நிபந்தனையை ஏற்றுக்கொண்டார். இருவரும் திருமணம் முடித்து மகிழ்ச்சியாக வாழ்ந்து ஒரு அழகான ஆண் குழந்தையை பெற்றனர். இப்படியே இரண்டு ஆண்டுகள் கழிந்த நிலையில், அறிஞருக்கு உறுத்தலாய் இருந்த ஒன்றை, அறிய ஆவலாய் இருந்த ஒன்றை மேலும் விட்டுவைக்க மனமில்லை. ஆம், ஏன் தன் மனைவி இருளில், விளக்கொளியில் தன்னை பார்க்கக்கூடாது என்று சொன்னாள் என்பதை அறியும் ஆர்வம் எல்லை மீற, ஒரு நாளிரவு மனைவி தூங்கிக்கொண்டிருந்தபோது. ஒரு விளக்கைக் கொண்டுசென்று அவளை பார்த்தார். உடலின் மேல்பகுதி, இடுப்புக்கு மேலாக பெண்ணில் உடலும், இடுப்புக்குக்கீழே வெறும் எலும்புக்கூடுமாக மனைவி படுத்திருந்ததை கண்டு மிரட்சியடைந்தார் தான்.
கண்டதை கிரகிக்கமுடியாமல் அவர் தடுமாறி நின்ற வேளையில் அவரது மனைவி கண்விழித்தாள். கண்விழித்து தன்னை விளக்கொளியில் கணவன் பார்த்துக்கொண்டிருப்பதை உணர்ந்து " கணவரே நீங்கள் வார்த்தை தவறிவிட்டீர்கள். எனக்கு தீமை செய்துவிட்டீர்கள். நான் விரைவில் விதிக்கு பணியும் மானுட உருவமாய் மாறியிருப்பேன், நீங்கள் இன்னும் ஓராண்டு காத்திருக்க பொறுக்காமல் விளக்கொளியில் என்னை பார்க்காதிருந்தால்" என்று சோகமாக கூறினாள்.
தான் உண்மை புரிந்து தனது செயலுக்காய் மன்னிப்பும் வருத்தமும் கூறினார். ஆனால் நடந்ததை மாற்ற முடியாதே என்ற சோகத்தில் கண்ணீர் மல்கியபடி தானின் மனைவி "இனி நாம் நிரந்தரமாக பிரியவேண்டும். என் மகனை நன்றாக கவனித்துக்கொள்ளுங்கள். உங்களையே நீங்கள் பராமரிக்க இயலாத அளவு ஏழ்மை வாட்டும் நிலையில், என்னுடன் வாருங்கள் நான் உங்களுக்கு ஒரு அன்பளிப்பு தருகிறேன்" என்று கூறி ஒரு பெரிய மண்டபத்துக்கு அழைத்துச் சென்றாள். அங்கே முத்துகளால் ஆன ஒரு ஆடையை தானிடம் தந்து "இதை வைத்து நீங்கள் வாழ்க்கையை நடத்தலாம்" என்று கூறி ஒரு சிறிய பகுதியை நாடாபோல அந்த ஆடையிலிருந்து கிழித்து எடுத்துக்கொண்டு அவனுக்கு விடை கொடுத்து மறைந்தாள்.
பின்னர் தான் அந்த அழகிய ஆடையை ஒரு கோடி காசுகளுக்கு சுய்யாங்கின் இளவரசனிடம் விற்றார். ஆடையை வாங்கி நன்றாக ஆராய்ந்த இளவரசன், அந்த ஆடை தனது மகளுடையது என்பதை உணர்ந்து, இந்த ஆடை இறந்து போன தன் மகளுடையது, இந்த நபர் அவளது கல்லறையை தோண்டி அதை திருடியிருக்கிறான் என்றெண்ணி, தானுக்கு எதிராக வழக்கு பதிவு செய்து, விசாரணை செய்தான். தான் நடந்தை எல்லாம் விளக்கமாக சொன்னபோதும் யாரும் நமபவில்லை. ஆனால் இறந்த தன் மகளின் கல்லறையை தோண்டியபோது, அது சேதமடையாமல் இருந்ததையும், சவப்பெட்டி வைத்தது போலவே இருந்ததையும், அதனுள்ளே, தான் கொண்டுவந்த அந்த ஆடையில் ஒரு துண்டு இருந்ததையும் இளவரசன் கண்டான். ஆக இறந்த இளவரசியே மனித உருவில் வந்து தானின் மனைவியாகி ஒரு மகனையும் ஈன்றெடுத்தாள் என்று நம்பி, தானின் மகனை தனது பேரனாக கருதி, அவனுக்கு அரண்மனையில் நல்ல பதவியும் அளித்தான். அறிஞர் தானுக்கு தனது மகள் அன்பளிப்பாய் கொடுத்த அந்த அழகான ஆடையை கொடுத்து தனது மருமகனாகவும் ஏற்றுக்கொண்டான்.