• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-03-13 11:04:46    
தியன் தான் பூங்கா(இ)

cri

இந்த 28 தூண்களும் தென் மேற்கு சீனாவில் மிகத் தொலைவிலுள்ள யுன் நான் மாநிலத்திலிருந்து கொண்டுவரப்பட்டவை. இம்மண்டபம் 1889ஆம் ஆண்டில் இடி மின்னல்களால் சேதமடைந்த போதிலும் பின்னர் திருத்தியமைக்கப்பட்டு விட்டது.


பலிபீடத்தின் அமைப்பு முழுவதும் ஒரு கேத்திர கணித விளையாட்டாகவும் அமைந்துள்ளது. பழைய காலத்தில் ஒற்றை எண்கள்"தெய்வீகமானவை"அல்லது சூரியனுடன் தொடர்புடையவை எனக் கருதப்பட்டன. அவற்றில் ஒன்பது என்ற எண், மிகவும் வலிமை வாய்ந்தது. ஆகவே, அப்பலிபீடம், 9 அல்லது ஒன்பதன் மடங்கு கற்களால் கட்டப்பட்டுள்ளது. அதன் படித் தலங்கள் ஒவ்வொன்றும் 9 வளையங்களாக அமைந்துள்ளன.

உச்சியிலே உள்ள முதலாவது வளையம், 9 கற்களாலும் 2வது வளையம் 18 கற்களாலும் இவ்வாறு அடியிலுள்ள 9வது வளையம் 81 கற்களாலும் கட்டப்பட்டுள்ளன. அதன் மத்திய, கீழ்த் தட்டுகளும் இந்த மாதிரியிலே கட்டப்பட்டுள்ளன. இவ்வளையங்கள் படிப்படியாகப் பெரிதாகிச் சென்று, அடியிலுள்ள 27வது வளையம் 243 கற்களால் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மேற் படித்தலத்தில் நிற்கும் போது வானத்துக்கு அண்மையில் நிற்பது போன்ற உணர்வு ஏற்படுகின்றது.