• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-03-13 10:42:53    
தியாகமே வாழ்வாய்

cri
தியாகமே வாழ்வாய்
பணம் பந்திலே குணம் குப்பையிலே என்பார்கள். நற்குணங்கள் போற்றப்படுவதில்லை. செல்வ செழிப்பு தான் பேசப்படுகின்றன என்பார்கள். ஆனால் நற்குணங்கள் நிறைந்த வாழ்வு தான் வெல்லும். தியாகம் மிகுந்தது தான் வாழ்வு என்பதனை Xie Yanxin எண்பித்துள்ளார். 30 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்த அவரது மனைவியிடம் அவருடைய தாய், தந்தை மற்றும் உளவியல் ரீதியல் சவாலுடைய சகோதரரையும் கவனித்து கொள்வதாக வாக்குறுதி அளித்துள்ளார். அதற்காக தனது மகளை அவருடைய பெற்றோர் வீட்டிற்கு அனுப்பி வளர்க்கப்பட ஏற்பாடு செய்தார். Liu என்ற தனது குடும்ப பெயரை மாற்றிவிட்டு தனது மனைவியின் குடும்ப பெயரான Xie வை தனது பெயராக்கி கொண்டார். 1979 ஆம் ஆண்டு அவரது மாமனார் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு முடமானபோது அவருக்கு உணவுட்டி, உடம்பை பிடித்து விட்டு, நாளும் சுத்தமாக கழுவி வந்துள்ளார். 100 மேற்பட்ட கதை புத்தகங்களை உள்ளுர் நூலகத்திலிருந்து எடுத்து வந்து இரவு தனது மாமனாருக்கு வாசித்துகாட்டி மகிழ்ச்சியுட்டியுள்ளர். உளவியல் நீதியில் உடல் சவால் கொண்ட அவரது மைத்துனரும் அனைத்திற்கும் அவரையே சார்ந்திருந்தார்.
வேலையில்லாமல் இருந்த போது சந்தையில் வீசியெறியப்பட்ட காய்கறிகளை எடுத்து வந்து அதனை ஊறுகாய் போன்று தாயார் செய்து கொடாமல் பாதுகாத்து காலம் தள்ள வேண்டிய நிலை கூட ஏற்பட்டுள்ளது. 1983 யில் உள்ளுர் நிலக்கரி சுரங்கத்தில் வேலை கிடைத்ததும் பெற்ற முதல் மாத வருமானமான 400 யுவானில் மாமனார் அவருக்கு விருப்பமான உள்ளுர் இசைகளை கேட்க வேண்டுமென்று வானொலி வாங்கி கொடுத்துள்ளார். மனைவி இறந்து 10 ஆண்டுகள் ஆனபோதும் தனது பொறுப்புகளிலிருந்து தவறாமல் இருக்க மறுமணத்தை கூட மறுத்துள்ளார். தனது முதல் மனைவியின் குடும்பத்தை கவனிக்கும் பொறுப்பை ஏற்பதாக வாக்களித்த பின்பு தான் தனது குடும்ப வாழ்க்கையை தொடங்கினார். சீன நடுவண் தொலைகாட்சி நிறுவனம் 2001 ஆண்டு தொடங்கிய சீனாவை நெகிழ வைத்த மக்கள் பட்டியலில் முதல் 10 இடங்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்ட Xie Yanxin மனிதநேய பண்பாட்டாளர் என்ற விருதை பெற்றுள்ளார். கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற இத்தனை தியாகங்களா? நிச்சயமாக போற்றப்பட தான் வேண்டும்.
ஏழு வயது கணினி நிபுணர்
இது கணினி உலகம். என்ன தான் படித்திருந்தாலும் அந்த தகுதியோடு கணினி தெரியுமா? என்று ஆய்ந்து பணிக்கமர்த்தும் காலம் இது. கல்லூரி காலங்களில் கூட கணினி பாடங்களை கற்றுக்கொள்வதற்கு முட்டி மோதும் இளைஞர்களையும், இளம் பெண்களையும் பார்த்திருப்போம். ஏழு வயதில் சிறுவன் கணினியில் பலவற்றை அறிந்திருக்கிறான் என்றால் நம்ப முடிகிறதா? Guangxi தன்னாட்சி பிரதேசத்திலுள்ள நான்னிங்கில் Niu Zai என்ற ஏழு வயது சிறுவன் கணினி அறிவில் தேறியவராக உருவாகி வருகிறார். இப்பிரதேசத்தின் கணினி கலைஞனான இச்சிறுவன் மூன்று வயதாக இருந்தபோதே வின்டோஸ் 98, வின்டோஸ் XP போன்ற மென்பொருள்களை கணினியில் பதிப்பது எப்படி என தெரிந்திருந்தார். Dos முறையை பயன்படுத்தி கணினி விளையாட்டுக்களை பதிவிறக்கம் செய்ய நான்காம் வயதில் அறிந்திருந்தார். ஆறு வயதானபோது கணினிகளை சரி செய்வதற்கு உதவ தொடங்கிவிட்டார். இப்போது மென்பொருட்களை உருவாக்க உதவும் கணினி பாடமுறைகளில் ஒன்றான, தற்போது கல்லூரி பயிற்சி பாடமாக இருக்கின்ற VB 6 என்ற மென்பொருளில் பயிற்சி பெற்றுக் கொண்டிருக்கிறார். ஏழு வயதிலேயே இவ்வளவு கணினி அறிவு பெற்றிருக்கும் அவரது பெற்றோர் கணினி பொறியியலாளர்கள் என்று எண்ணிவிட வேண்டாம். Niu Zai யின் பெற்றோர் கணினி மிக சிறிதளவே அறிந்த துவக்கப்பள்ளி ஆசிரியர்கள் தான். கணினி தொழில் நுட்ப கலைஞராக உள்ள தனது மாமாவிடமிருந்து தான் Niu Zai இவையனைத்தையும் கற்றுக்கொண்டிருக்கிறார். கணினி துறைக்கு எதிர்காலத்தில் சிறந்ததொரு பங்களிப்பை இச்சிறுவன் வழங்குவான் என்று நம்பலாம்
மக்கள் பணிக்காய்


மக்கள் பணி செய்வதற்காக வட மலேசியாவில் 89 வயதான பாட்டி ஒருவர் குயலா டெரங்கனு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விண்ணப்பித்துள்ளதாக உள்ளுர் செய்திதாள்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மலேசியாவின் மிக அதிக வயதான தேர்தல் வேட்பாளராக இருக்கும் மெய்மம் யுசெஃப் அம்மையாருக்கு 19 பேரக்குழந்தைகள் உள்ளனர். அவர் தனது மிதிவண்டியில் சென்று குயலா டெரங்கனு பகுதியில் பிரச்சாரம் செய்து வாக்கு சேமித்து வருகிறார். Gong Gemia கிராமத்தில் ஆடை வியாபாரியான மெய்மம் அம்மையார் தனது விளம்பரத்திற்கான சுவரொட்டிகளையும், துண்டு விளம்பரக் குறிப்புகளையும் அவரே தயாரிக்கிறார். தனது கட்சியின் பெயரை மட்டுமே பயன்படுத்தும் அவர், இச்செயல்கள் அனைத்தையும் தானே செய்வதன் மூலம் தற்கால அரசியல் நிலைமைக்கு சவால் விடும் விதமாக செயல்பட்டு வருகிறார். அரசியலுக்கு புதியவராக இருந்தாலும், குயலா டெரங்கனு தொகுதியை முற்றிலுமாக சீரமைக்க விரும்புகிறார். கண்டிப்பாக தான் வெற்றி பெற போவதாகவும் நம்புகிறார். வயது அனுபவமும், சமூக அக்கறையும் மக்கள் பிரதிநிதியாக நிலைப்பாடான செயல்பாடுகளை செய்ய முடியும் என்று அவர் நம்புகிறார் போலும். வயது முதிர்ந்தாலும் தற்கால அரசியல் நிலைக்கு சவால்விடும் இவரது விளம்பர களப்பணி பல்வேறு தாக்கங்களை எதிர்காலத்தில் கொண்டுவரும் என்பதில் ஐயமில்லை.