சீனாவின் லாஹூ இனம், முக்கியமாக யுன்னான் மாநிலத்தின் முதலிய மாவட்டங்களில் வாழ்கின்றனர். இதன் மக்கள் தொகை, 4 இலட்சத்து 11 ஆயிரமாகும். வரலாற்றில் லாஹூ இனம், புலியை வேட்டை செய்யும் இனமாக அழைக்கப்பட்டது.

லஹூ இனத்துக்கு சொந்த மொழி உண்டு. இது, சீன-திபெத் மொழி குடும்பத்தின் திபெத்-மியம்மார் கிளையைச் சேர்ந்தது. ஹன் இனத்துடனும், தை இனத்துடனும் நெருக்கமாக பழகுவதால், லாஹூ இன மக்கள் பெரும்பாலோர் சீன மொழியையும் தை இன மொழியையும் பயன்படுத்த முடியும். இந்த இனத்தின் இலக்கியம் மிக செழுமையானது.
லாஹூ இன மக்கள், தானியத்தை விட, கரும்பு, தேயிலை, காப்பி, ரப்பர் ஆகியவற்றை அதிகமாக பயிரி்டுகின்றனர். இரும்பு உருக்குவது, வேளாண்மை பயன்பாட்டு இயந்திரங்கள், சுரங்கத்தை எட்டுவது முதலிய துறைகளை நிறுவியுள்ளனர். அவற்றில், lancangயிலான ஈய சுரங்கம் புகழ் பெற்ற பெரிய தொழில் நிறுவனமாகும்.

லாஹூ இன மக்கள், புத்த மதத்தில் நம்பிக்கை கொண்டவர்கள். சிலர் கிறிஸ்தவர்கள். வசந்த விழா, தீப விழா, நிலா விழா முதலியவை, லாஹூ இனத்தின் பாரம்பரிய விழாக்களாகும். அவற்றில் மிக விமாரிசையானது, லாஹூ புத்தாண்டாகும்.
இலையுதிர்கால முதல், லாஹூ இன ஆண்கள், மலையில் வேட்டை செய்து உணவுப்பொருட்களை ஆயத்தப்படுத்தினர். முன்பு, விழாவின் போது, லாஹூ இன குடும்பங்கள் புத்தத்தையும் மூதாதையாரையும் வழிபாடு செய்கின்றனர். பல்வேறு வழிபாட்டில், குளித்து துப்புரவான ஆடை அணித்து, வழிபாட்டு நிகழ்ச்சியில் மீன்னை சாப்பிட்ட பின், இவ்வுணவுப்பொருட்கள் பங்களிக்கப்பட்டன. இதனால் ஒவ்வொரு குடும்பங்கள் பெரும் வரங்களைப் பெற முடியும்.

|