• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-03-14 09:23:13    
குவெய் இன நடன நிகழ்ச்சி மற்றும் அலங்கார ஆடை அணிவகுப்பு

cri
Ning Xia குவெய் இனத் தன்னாட்சிப் பிரதேசம், சீனாவில் முஸ்லிம்கள் மிக அதிகமாக குழுமி வாழும் இடமாகும். வரலாற்றுப்போக்கில், இப்பிரதேசத்தில், தனித்தன்மை வாய்ந்த ஆடைப் பண்பாடும், நடனக் கலையும் உருவாகியுள்ளன. இன்றைய நிகழ்ச்சியில், இத்தன்னாட்சிப் பிரதேசத்தின் குவெய் இன நடனங்கள் மற்றும் ஆடைகளின் புதுமை மற்றும் வளர்ச்சி பற்றி கூறுகின்றோம்.


Ning Xiaவில் வாழும் குவெய் இன மக்களின் ஆடைகள் மற்றும் அலங்காரப் பொருட்களில், தொப்பி மிகவும் தனித்தன்மை வாய்ந்தது. எடுத்துக்காட்டாக, குவெய் இன ஆடவர், சிறிய வெள்ளை தொப்பி அணிகின்றனர். குவெய் இன பெண்கள் வட்டமான வெள்ளை தொப்பி அணிகின்றனர். குவெய் இன ஆடைகள் எளிமையாகவும், சுத்தமாகவும், அழகாகவும் உள்ளன. இவ்வாடைகளி்ல், வெள்ளை, பச்சை, கறுப்பு நிறங்களுடைய ஆடைகள், பெரும்பாலானவை. தனித்தன்மை வாய்ந்த குவெய் இன நடனங்களில் வலிமையும் மென்மையும் காணப்படுகின்றன. கடந்த சில ஆண்டுகளில், Ning Xia குவெய் இன தன்னாட்சி பிரதேச அரசு, இப்பிரதேசத்தின் குவெய் இனத் தனித்தன்மைக்கிணங்க, நடவடிக்கைகளை மேற்கொண்டு, குவெய் இன நடனங்களையும், ஆடைப் பண்பாட்டையும் பாதுகாத்து, வளர்த்துள்ளது. புத்தாக்கம் மூலம், குவெய் இன நடனம் மற்றும் ஆடை பண்பாட்டை உயர் நிலைக்கு வளரச்செய்ய வேண்டும் என்று தன்னாட்சிப் பிரதேச அரசு விரும்புகின்றது.
அண்மையில், இத்தன்னாட்சிப் பிரதேசத்தின் தலைநகரான Yin Chuanவில், 2007 சீன Ning Xia முதலாவது குவெய் இன நடன நிகழ்ச்சி மற்றும் அலங்கார ஆடை அணிவகுப்பு நடைபெற்றது. அழைப்பின் பேரில், குவெய் இன நடனப் படைப்பு மற்றும் ஆடை பண்பாட்டு ஆய்வில் ஈடுபடும் நிபுணர்கள் மற்றும் அறிஞர்கள் இந்நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, குவெய் இன பண்பாட்டின் புத்தாக்கம் மற்றும் வளர்ச்சி பற்றி ஆலோசனைகளை முன்வைத்தனர். இந்நிகழ்ச்சிகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டன. நாட்டின் பல்வேறு இடங்களிலும் உள்ள நடனம் மற்றும் ஆடை துறைகளின் நிபுணர்கள் மற்றும் அறிஞர்கள், குவெய் இன நடனங்கள் மற்றும் ஆடைகளின் எதிர்காலத்தின் மீது முழு நம்பிக்கை கொண்டுள்ளனர். சீன நடனக் கலைஞர்கள் சங்கத்தின் நிரந்தரத் துணை தலைவர் Feng Shuang Bai இந்நிகழ்ச்சிகள் பற்றி கூறியதாவது:


"முதலாவது குவெய் இன நடன நிகழ்ச்சி மற்றும் அலங்கார ஆடை அணிவகுப்பு, மைல்கல் போன்ற பங்கு வாய்ந்ததாக அமையும் என்று கருதுகின்றேன். குவெய் இனக் கலை மற்றும் பண்பாடு புதிய உயர் நிலையில் வளர்ந்துள்ளதை இது கோடிட்டுக்காட்டுகின்றது. குவெய் இனப் பண்பாடு மற்றும் கலை, குறிப்பாக குவெய் இன நடனம், இன்று முதல் மேலதிக முன்னேற்றம் அடையும். இதனால், என் மனதில் அதிக எதிர்பார்ப்பு நிரம்புகின்றது" என்றார், அவர்.
குவெய் இன நடனம் மற்றும் அலங்கார ஆடை அணிவகுப்பு நிகழ்ச்சிகள், இவ்விரு துறைகளிலான ஆய்வு, வளர்ச்சி மற்றும் புத்தாக்கத்தை விரைவுபடுத்துவதற்கானது. மற்ற பிரதேசங்களில் குவெய் இன நடனப் படைப்பாளர்களுக்கும் ஆடை வடிவமைப்பாளர்களுக்கும் பரஸ்பரம் கற்றுக்கொண்டு, அனுபவங்களைப் பரிமாறிக் கொள்ளும் வாய்ப்பை இந்நிகழ்ச்சிகள் வழங்கியுள்ளன. சீன சிறுபான்மை தேசிய இன ஆடை மற்றும் அலங்கார ஆடை சங்கத்தின் designer Ma Shu Min அம்மையார் கூறியதாவது:


"Ning Xia தன்னாட்சி பிரதேசத்தின் தேசிய இன விவகாரக் குழுவும், இப்பிரதேசத்தின் இலக்கியச் சம்மேளனமும் இந்நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தன. நெடுநோக்கு முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கை இதுவாகும். குவெய் இன ஆடை வடிவமைப்பாளர்களுக்கு தத்தமது திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்பை இது வழங்கியுள்ளது" என்றார், அவர்.
இந்நிகழ்ச்சிகளுக்காக, நாடு முழுவதிலும் 57 குவெய் இன நடன படைப்புகளும், 502 ஜோடி குவெய் இன ஆடைகளும் திரட்டப்பட்டன. பூர்வாங்க மற்றும் மறு பரிசீலனைக்கு பின், 21 குவெய் இன நடனங்களும், 238 ஜோடி குவெய் இன ஆடைகளும் காட்சிக்கு வைக்கப்பட்டன. நிகழ்ச்சியில், இந்த 21 நடனங்கள், இசை நாடகங்களைப் போல், பார்வையாளர்களுக்கும் தேர்வாளர்களுக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தின. நடனங்களில், குவெய் இன மக்களின் மத நம்பிக்கை மற்றும் வாழ்க்கை நிலை பிரதிபலிக்கப்பட்டது. வெவ்வேறான கோணங்களிலிருந்து குவெய் இன மக்களின் மன உணர்வுகள் வெளிப்படுத்தப்படுகின்றன. இந்நிகழ்ச்சி மூலம் இவ்வின நடனங்கள் உயர் தர நிலையில் இருக்கின்றன என்பதை அறிய முடிகிறது என்று சீன நடனக் கலைஞர்கள் சங்கத்தின் துணை தலைவர் Li Yu Shan கருத்து தெரிவித்தார்.
தென் மேற்கு சீனாவின் யுன்னான் மாநில ஆசிரிய பயிற்சி பல்கலைக்கழகத்தின் கலை கல்லூரியால் படைக்கப்பட்ட "புனித வாழ்த்துக்கள்" என்னும் நடன நிகழ்ச்சி முதல் பரிசு பெற்றது. இந்நடனம், குவெய் இன குழந்தை பிறப்பு காட்சியை கண்முன் கொண்டுவந்தது. குவெய் இன மக்கள், அமைதியை நேசித்து, உற்சாகமாக இருக்கும் எழுச்சியை இந்நடனம் வெளிப்படுத்துகின்றது. யி இனம் உள்ளிட்ட தேசிய இனங்களின் நடனங்களின் தனித்தன்மையை இந்நடனம் உள்வாங்கி, பயன்படுத்துவதால், குவெய் இன தனித்தன்மையுடன், மக்களுக்கு புதிய உணர்வு தருகின்றது. இந்நடனப் படைப்பாளர் Ma Wen Jing அம்மையார், அதன் படைப்பு பற்றி தமது கருத்தை விவரித்தார். அவர் கூறியதாவது:

 
"குழந்தை பிறப்பு, குவெய் இனத்துக்கு சூரியன் ஒளி தந்துள்ளதற்கு இணையானது. எங்கள் இன முஸ்லிம்களைப் பொறுத்த வரை மகிழ்ச்சி தரும் விழா இதுவாகும். புதிய உயிருக்கான பாராட்டு பாடல் ஒன்று வருகின்றது. குவெய் இனத்தை இந்நடனம் பாராட்டுகின்றது. இத்தேசிய இனத்தவர், அமைதியை நேசித்து, ஒருவருக்கொருவர் இணக்கமாக சகவாழ்வு நடத்துகின்றனர்" என்றார், அவர். அணிவகுப்பில், குவெய் இன ஆடைகளின் பாணி, உருவம், நிறம் ஆகியவை தேர்வாளர்களின் பாராட்டை பெற்றுள்ளன. சீன ஆடை சங்கத்தின் உறுப்பினர் Yu Dan அம்மையார் கூறியதாவது:

 
"இவ்வணிவகுப்பில் காட்சிக்கு வைக்கப்பட்ட ஆடைகளை பார்க்கின்ற போது, குவெய் இனப் பண்பாட்டின் உள்ளடக்கத்தை நன்றாக புரிந்து கொண்டுள்ளனர். இந்த பண்பாட்டு உள்ளடக்கத்தை அடிப்படையாகக் கொண்டு, அவர்கள் ஆடைகளை வடிவமைத்திருந்தனர்" என்றார், அவர்.
இது வரை, சீனா முழுவதிலும் குவெய் இன மக்கள் தொகை, ஒரு கோடியைத் தாண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், குவெய் இன ஆடைகளின் சந்தைக்கு ஒளிமயமான எதிர்காலம் உள்ளது. குவெய் இன தொழில்முறை, பண்பாட்டு மற்றும் சாதாரண ஆடைகள் வடிவமைக்கப்படும் என்று இந்நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தவர்கள் எதிர்பார்கின்றனர். இதன் மூலம் பல குவெய் இன மக்கள், வசதியான, அழகான, தனித்தன்மை மிக்க ஆடைகளை அணியலாம்.