• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-03-14 09:29:25    
உலக உள்அரங்கு தடகள போட்டி

cri
2008ம் ஆண்டு உலக உள்ளரங்கு தடகள போட்டி 7ம் நாள் ஸ்பெயினின் தென் பகுதியுள்ள Valencia நகரில் நடைபெற்றது.
2008ம் ஆண்டு பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கு முன், உலக தடகள துறையிலான முக்கிய போட்டி இதுவாகும். 109 நாடுகளையும் பிரதேசங்களையும் சேர்ந்த சுமார் 600 வீரர்கள் இப்போட்டியில் கலந்துகொண்டுள்ளனர். சீன தடகள அணி சார்பாக அனுப்பப்பட்ட சீனப் புகழ் பெற்ற வீரர் லீயு சியங் உள்ளிட்ட 11 சீன வீரர்கள் இப்போட்டியில் கலந்துகொண்டனர்.

9ம் நாள் நடைபெற்ற 2008ம் ஆண்டு உலக உள்அரங்கு ஆடவர் 60 மீட்டர் தடைகள போட்டியில், ஆடவர் 110 மீட்டர் தடைகள போட்டியின் உலக சாதனையாளரும், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் சாம்பியன் பட்டம் பெற்ற சீனப் புகழ் பெற்ற வீரருமான லீயு சியங் 7.46 வினாடிகள் என்ற பதிவில், இப்போட்டியின் சாம்பியன் பட்டத்தைப் பெற்றுள்ளார். 12வது உலக உள்ளரங்கு தடகள போட்டி 9ம் நாள் முடிவடைந்தது.
சர்வதேச ஒலிம்பிக் அமைப்புக் குழு, 2008ம் ஆண்டு "மகளிரும் விளையாட்டும்"

என்ற விருது பெற்றுள்ளவர்களின் பெயர்ப் பட்டியலை 8ம் நாள் வெளியிட்டது. உலக சாம்பியன் பட்டம் பெற்றுள்ள சீன முன்னாள் மகளிர் பூப்பந்து வீரர் Li Lingwei ஆசிய விருதைப் பெற்றுள்ளார். ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை நடத்துவது, சீன பொருளாதார நீண்ட கால வளர்ச்சிக்கு துணை புரியும் என்று 11வது சீன தேசிய மக்கள் பேரவையின் முதல் கூட்டத்தொடர் மற்றும் சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 11வது தேசிய கமிட்டியின் முதல் கூட்டத்தொடரில் கலந்து கொண்டுள்ள பிரதிநிதிகளும் உறுப்பினர்களும் கருத்து தெரிவித்தனர்.

சீன பொருளாதாரம் பலமான ஆற்றல் வாய்ந்தது. ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான அடிப்படை வசதி ஆக்கப்பணிகள், பொருளாதாரத்தை முன்னேற்றும் என்று சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் உறுப்பினர் yu min hong கருத்து தெரிவித்தார்.
ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை நடத்துவது என்பது சீனா மேம்படுத்தி வளர்க்கும் வாய்ப்பாகும். வெளிநாடுகளுக்கு சீனாவை அறியும் போக்காகும் என்று சீன

தேசிய மக்கள் பேரவையின் பிரதிநிதி yan ao shuang தெரிவி்த்தார்.
சேவை துறைக்கு உயர் வரையறையாக ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி திகழ்கின்றது. இது சீனாவின் சேவைத் துறை வளர்ச்சியை வலுப்படுத்தும் என்று சீன தேசிய மக்கள் பேரவையின் பிரதிநிதி xu ming zheng கூறினார்.