• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-03-14 09:38:33    
சுயமாக தொழில் நடத்தும் LIU LI HUAவின் வாழ்க்கை பாதை

cri
வேலை வாய்ப்பு பெறுவது என்பது, மக்கள் வாழ்க்கைக்கான அடிப்படை உரிமையாகும். வேலை வாய்ப்பு பிரச்சினையை செவ்வனே தீர்ப்பதில், பெய்ஜிங் மாநகராட்சி எப்போதும் கவனம் செலுத்தி வருகிறது. கடந்த சில ஆண்டுகளில் பெய்ஜிங் மாநகராட்சி பல நடவடிக்கைகளை மேற்கொண்டு, மறு வேலை வாய்ப்பு பெறுவதிலும் தொழில் நடத்துவதிலும் வேலையற்றோருக்கான நிதியுதவியை அதிகரித்துள்ளது. இக்கட்டுரையில், வேலையை இழந்திருந்த LIU LI HUA அம்மையாரை உங்களுக்கு அறிமுகப்படுத்துகின்றோம்.
LIU LI HUA அம்மையார் தனது கணவரை விவாகரத்து செய்த பின், தனியாக மகனுடன் இணைந்து வாழ்க்கை நடத்தி வருகிறார். மகன் வளர்ந்து வருவதால், வாழ்க்கைக்கான செலவு அதிகரித்து வருகிறது. ஆனால், வேலை இழந்த அவர் போதுமான பொருளாதார வருமானம் பெற முடியவில்லை. நிதானமற்ற வாழ்க்கையினால், இரவில் அவர் நன்றாக தூங்க முடியவில்லை. அவர் கூறியதாவது—

"1981ஆம் ஆண்டில் நான் கம்பளி நெசவு தொழிற்சாலையில் சேர்ந்தேன். 1993ஆம் ஆண்டில் இத்தொழிற்சாலையின் பொருளாதார பயன் நன்றாக இல்லாமல் இருந்ததால், மற்ற நிறுவனம் ஒன்றில் சேர்ந்தேன். 2005ஆம் ஆண்டில் முற்றிலும் வேலையை இழந்தேன். அதன் பின், எனது ஆவணம் வீதி அலுவலகத்தில் வைக்கப்பட்டது. ஏனென்றால், வயது அதிகமானதால், மறு வேலை வாய்ப்பு பெறுவதில் இன்னல்கள் அதிகம்" என்றார் அவர்.
LIIU LI HUA வாழும் BAI CAO YUAN குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த குடிமக்கள் குழு, அவரது நிலைமையை அறிந்து, அது வழங்கிய வேலையற்ற தொழிலாளருக்கான இலவச தொழில் பயிற்சித் திட்டத்தில் சேர அவருக்கு ஊக்கமூட்டியது. மலர் ஏற்பாட்டுக் கலை, கணினி பயன்பாட்டுத் தொழில் நுட்பம் உள்ளிட்ட பயிற்சிகளை அவர் முறையாக பெற்றார். இளைஞர்களைப் பொறுத்தவரை, தொழில் நுட்பம் ஒன்றை கற்றுக் கொண்டு வேலை வாய்ப்பு பெறுவதில் சிரமம் குறைவு. ஆனால், 40 வயதுக்கு மேற்பட்ட LIU LI HUA அம்மையாரைப் பொறுத்தவரை, மறு வேலை வாய்ப்பு பெறும் பாதையில் இன்னல்கள் நிறைந்து காணப்பட்டன.

இன்னல்களைச் சந்தித்த அவர் துவண்டு போய்விடவில்லை. அந்நிலைமையை மாற்றும் வாய்ப்பை அவர் முன்முயற்சியுடன் தேடி வந்தார். அப்போது, தொழில் நடத்தும் வேலையற்ற நகரவாசிகளுக்கு நிதியுதவி வழங்குவது தொடர்பான பெய்ஜிங் மாநகராட்சியின் கொள்கை, சுயமாக தொழில் நடத்தும் அவரது உற்சாகத்தை தட்டி எழுப்பியது. அவர் கூறியதாவது—
"நான் தனியாக ஒரு குழந்தையை வளர்க்கின்றேன். எனவே, தனது விருப்ப படி, தொழில் நடத்த விரும்புகின்றேன். எனது எண்ணத்தை சமூகக் காப்புறுதி அலுவலகத்திடம் கூறினேன். அவ்வலுவலக அதிகாரிகள் ஆதரவளித்து, உரிய திட்டப்பணியைத் தேட எனக்கு உதவி வழங்கினர்" என்றார் அவர்.
அரசின் ஏற்பாட்டிலான தொழில் நடத்துவதற்கான பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட பின், 50 ஆயிரம் யுவான் வட்டி இல்லா சிறு தொகை கடனை அவர் பெற்றார். மூலதனம் கிடைத்த பின், மறு வேலை வாய்ப்பு பெற்றவருக்கான வரி மற்றும் கட்டணத்தைக் குறைக்கும் அல்லது ரத்து செய்யும் கொள்கை, சமூகக் காப்பீட்டு மானியம் வழங்கும் கொள்கை ஆகியவற்றின் ஆதரவுடன், தொழில் நடத்தும்

பாதையில் LIU LI HUA அம்மையார் நடைபோட துவங்கினார். வடிவமைப்பு நிறுவனம் ஒன்றை அவர் முதலில் துவங்கினார். அண்மையில் கண்டுபிடிப்பு காப்புரிமை மூலம் முடியை உதிர செய்யும் புழுவெட்டு என்ற நோய்க்கு சிகிச்சை வழங்கும் திட்டப்பணியை அவர் ஏற்றுக் கொண்டுள்ளார்.
தற்போது, பிறரின் கண்களில், LIU LI HUA முற்றிலும் மாறியுள்ளவரைப் போல் இருக்கிறார். அவர் முழுமையான சுய நம்பிக்கை கொண்டுள்ளார். அவரது வியாபாரம் விறுவிறுப்பாகியுள்ளது. தனது வருமானம் அதிகமாக இல்லை என்றாலும், மனமார்ந்த செயல்கள் மூலம், சமூகத்துக்கு பிரதி பலன்களை வழங்க LIU LI HUA மறக்கவில்லை. அவரது நிறுவனம் 6 வேலையற்றோர்களை பணிக்கு சேர்த்துள்ளது. அவர் தன்னை வளர்த்து விட்ட சமூகத்திற்கு செய்திருக்கின்ற நன்றியாகும்.
"இந்த வேலையற்றோர்கள் எனது வயதளவில் உள்ளனர். வயதாகிய அவர்களை எந்த நிறுவனமும் சேர்க்க விரும்பவில்லை. எனது நிறுவனம் அவர்களுக்கு ஏற்றதாக உள்ளது. நாட்டின் கொள்கைக்கு நான் உளமார்ந்து நன்றி தெரிவிக்கின்றேன். தனது திறனைப் பயன்படுத்தி மற்றவருக்கு உதவியளிப்பது என்பது எனது விருப்பம்" என்றார் LIU LI HUA.