அண்மையில், சீனாவின் திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் தலைநகர் லாசாவில், ஒரு சிலர் மக்களின் சொத்துக்கள் மற்றும் உயிர் பாதுகாப்புக்கு வேண்டுமென அழிவு செய்து, சமூக ஒழுங்கைச் சீர்குலைத்தனர். தலாய் லாமா குழு இச்சம்பவத்தை சதி செய்தது என்பதை பல சான்றுகள் நிரூபித்துள்ளன. திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் பொறுப்பாளர் ஒருவர் நேற்று இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து, திபெத்திலுள்ள பல்வேறு சிறுபான்மை இன மக்கள் பேராத்திரமடைந்து இச்சம்பவத்தைக் கடுமையாகக் கண்டித்தனர்.
திபெத் சமூகத்தின் நிதானத்தையும், அங்குள்ள மக்களின் உயிர் மற்றும் சொத்துப் பாதுகாப்பையும் பேணிக்காக்கும் திறன் நடுவன் அரசுக்கு உண்டு என்று இப்பொறுப்பாளர் சுட்டிக்காட்டினார். திபெத்தின் அமைதியையும் இணக்கத்தையும் பாதிக்கும் நோக்கம் கொண்ட ஒரு சிலரின சூழ்ச்சி மக்களிடமிருந்து ஆதரவு பெற முடியாது. தோல்வி அடைவது உறுதி என்றும் அவர் கூறினார்.
|