• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-03-17 09:44:00    
சிங்குவா செய்தி நிறுவனத்தின் கட்டுரை

cri
சீனத் தேசிய செய்தி நிறுவனமான சிங்குவா செய்தி நிறுவனம், நேற்று கட்டுரை ஒன்றை வெளியிட்டது. தலாய் லாமாக் குழு, திபெத் சமூகத்தின் நிதானத்தைச் சீர்குலைக்க மேற்கொள்ளும் முயற்சி தோல்வி பெறுவது உறுதி என்பது இக்கட்டுரையின் தொலைப்பாகும்.

அண்மையில், திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் தலைநகர் லாசாவில், சிலர் மக்களின் சொத்துக்கள் மற்றும் உயிர் பாதுகாப்புக்கு வேண்டுமென அழிவு செய்து, சமூக ஒழுங்கைச் சீர்குலைத்தனர். தற்போது, நிலைமை அடிப்படையில் சீராக இருக்கிறது என்று இக்கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

லாசாவில், 3 பள்ளிகள் உள்ளிட்ட 22 கட்டிடங்களை, சிலர் தீயிட்டு நாசமாக்கி, 10க்கு மேற்பட்ட காவற்துறை மற்றும் சிவில் வாகனங்களை சேதப்படுத்தினர். இதில், 10 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். 12 காவற்துறையினர் கடும் காயமுற்றனர். காயமடைந்தவர்களில் இரண்டு பேரது நிலை, ஆபத்தாக இருக்கிறது என்று பூர்வாங்க புள்ளிவிபரம் காட்டியது.

இச்சம்வலத்துக்கு வெளிநாட்டிலுள்ள தலாய் லாமாக் குழுவின் செயல்பாட்டை பல சான்றுகள் கோடிட்டுக்காட்டியுள்ளன என்று இக்கட்டுரையில் கூறப்பட்டுள்ளது. திபெத், சீனாவிலிருந்து பிரிக்கப்பட முடியாத ஒரு பகுதியாகும். இது, சர்வதேசச் சமூகத்தின் பொது கருத்தாகவுள்ளது. திபெத்தின் அமைதியையும் இணக்கத்தையும் சீர்குலைப்பது என்ற தலாய் லாமாக் குழுவின் சூழ்ச்சி மக்களிடமிருந்து ஆதரவு கிடைக்காது. இது தோல்வியடைந்தே தீரும் என்றும் இக்கட்டுரையில் சுட்டிக்காட்டப்பட்டது.