சுற்றுச்சூழல் பாதுகாப்பில் உற்சாசகம் நிறைந்த ஜப்பானிய தொழில் முனைவோர்
cri
கடந்த சில ஆண்டுகளாக, சீன குடும்பங்கள் கார்களை வாங்கும் வேகம், மேன்மேலும் விரைவாக இருக்கிறது. ஜப்பானின் TOYOTA குழுமம், கார்களில் மிக பெரிய சந்தையை வகித்து வருகிறது. மோட்டர் உதிரிப்பாகத்தை உற்பத்தி செய்கின்ற தொழில் நிறுவனமான, ஜப்பானின் Aisin மோட்டர் உதிரிப்பாகக் குழுமம், உலகின் 500 முன்னணி தொழில் நிறுவனங்களில் ஒன்றாகும். 2005ம் ஆண்டு ஜப்பானின் Aisin மோட்டர் உதிரிப்பாகக் குழுமம், 9 கோடியே, 95 இலட்சம் அமெரிக்க டாலரை முதலீடு செய்து, சீனாவின் டாங்ஷென் நகரில் அதன் தொழில் நிறுவனத்தை நிறுவியது. இந்நிறுவனம் 2006ம் ஆண்டு உற்பத்தியை தொடங்கி, TOYOTA கார் நிறுவனத்திற்காக, இயந்திரம், மற்றும் வார்பு பகுதிகளை உற்பத்தி செய்கிறது. டாங்ஷென் புதிய தொழிற்நுட்ப வளர்ச்சி மண்டலம் 1992ம் ஆண்டின் ஏப்ரல் திங்கள் நிறுவப்பட்டது. இது ஹபெய் மாநிலத்தின் 8 முக்கிய வளர்ச்சி மண்டலங்களில் ஒன்றாகும். சிறந்த இட மேம்பாடு, அறிவியல்பூர்வமான வளர்ச்சி திட்டம் ஆகியவை, டங்ஷன் நகரின் புதிய தொழி்ல்நுட்ப வளர்ச்சி மண்டலம் விரைவாக வளர்வதற்கான காரணங்களாகும். ஏன் டங்ஷனில் இந்நிறுவனம் நிறுவப்பட்டது பற்றி விளக்கிய போது, இத்தொழில் நிறுவனத்தின் மேலாளர்Hiroshi Chonoகூறியதாவது,
டங்ஷனில் தொழில் முறை திறமைசாலிகளைத் தேர்ந்தெடுப்பது எளிதானது. இது முதல் காரணமாகும். இரண்டாவதாக, இந்நகரில், Aisin பற்ச் சக்கரத் தொழில் நிறுவனம் இருக்கிறது. இந்நிறுவனம் மூலம், இந்நகரில் மூதலீடு செய்யும் சாதகமான சூழ்நிலையை Aisin அறிந்தது. மூன்றாவதாக, டங்ஷன் அரசும், புதிய தொழில்நுட்ப வளர்ச்சி மண்டலத்தின் தலைவர்களும், தொழில்துறை வளர்ச்சியில் மிக முனைப்பாகவும் உற்ச்சாகமாகவும் கவனமாகவும் இருக்கின்றனர். அதனால், எமது தொழிற்சாலையை இங்கு நிறுவினோம் என்று அவர் கூறினார். திருHiroshi Chonoகூறியது போல், டியன்ஜின் பொருளாதார வளர்ச்சி மண்டலத்தை விட டங்ஷன் புதிய தொழில்நுட்ப வளர்ச்சி மண்டலத்தில் வெளிநாட்டு தொழில் நிறுவனங்கள் குறைவு. மூலவளங்கள் அதிகமானவை. மனித மூலவள செலவு, சுமார் 20 விழுக்காடு குறைவு. தவிர, டங்ஷன் அரசு, இங்கு நுழைந்த வெளிநாட்டு தொழில் நிறுவனங்களுக்காக பல சலுகையுடன் கூடிய நடவடிக்கைகள் மேற்கொண்டது. கடந்த இரு ஆண்டுகளில், சீன வாகன துறையின் விரைவான வளர்ச்சியுடன், Aisin மோட்டர் உதிரிப்பாகத் தொழில் நிறுவனம் வலுப்படுத்தியது. ஓர் ஆண்டுக்குள், தொழிலாளர்களின் எண்ணிக்கை 5 மடங்காக அதிகரித்தது. கடந்த ஆண்டின் அக்டோபர் திங்கள் வரை, இந்நிறுவனத்தின் விற்பனை தொகை 3 கோடி யுவானை எட்டியுள்ளது. உற்பத்தி மற்றும் செயல்பாட்டை வளர்க்கும் அதே வேளையில், Aisin மோட்டர் உதிரிப்பாகத் தொழில் நிறுவனம் சுற்றுச்சூழல் பாதுகாப்பை முதலில், பொருட்படுத்தவில்லை. 2007ம் ஆண்டு ஏப்ரல் 30ம் நாள், இத்தொழில் நிறுவனம் சுற்றுச்சூழல் கோட்பாட்டை வெளியிட்டது. அக்கோட்பாட்டை வகுத்த நோக்கம் பற்றி குறிப்பிடுகையில், Hiroshi Chonoகூறியதாவது,
உற்பத்தி செய்கின்ற அதே வேளையில் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது என்பது, எங்கள் நிறுவனத்தின் அடிப்படை கொள்கையாகும். எனவே இந்த அடிப்படையில், நாங்கள் இந்த சுற்றுச்சூழல் கோட்பாட்டை வகுத்தோம் என்றார் அவர். அந்தக் கோட்பாட்டைத் தவிர, Aisin மோட்டர் உதிரிப்பாகத் தொழில் நிறுவனம், தொடரவல்ல வளர்ச்சியையும் நாடுகிறது. சமூகமும் இயற்கையும் இணக்கமாக வளர்வது என்பது, தங்கள் தொழில் நிறுவனப் பண்பாட்டில் வெளிப்படுத்தப்பட்டது. இதைப் பற்றி, Hiroshi Chonoகூறியதாவது,
எங்கள் தொழில் நிறுவனம், உற்பத்தி செய்ய வேண்டிய மூல பொருட்கள் பல, இயற்கையிலிருந்து தான் வருகின்றன. இவற்றை உற்பத்தி செய்வது என்பது, குறிப்பிட அளவில் இயற்கையை சீர்குலைக்கின்றது. உற்பத்திப் பொருட்கள் இயல்பான ஒழுங்கிற்க்கு நுழைந்த பின், சமூகம் மற்றும் தொழிலாளர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும். பிறகு, நாங்கள் இயற்கையை பாதுகாப்பதோடு, புத்தாக்கம் மூலம் இயற்கையை சீராக்கி, சீரான சுழற்சியை ஏற்படுத்த முடியும். இதுவே, சமூகத்திற்கும் இயற்கைக்குமிடை ஒருங்கிணைப்பாகும் என்று அவர் கூறினார். எரியாற்றலை சிக்கனப்படுத்தி பசுங்கூட வாயு வெளியேற்றத்தைக் குறைப்பது, சுழற்சி முறை பொருளாதாரம், தொடரவல்ல வளர்ச்சி என்பன பற்றி சீன அரசு தற்போது பிரச்சாரம் செய்கின்ற கொள்கைகளை Aisin மோட்டர் உதிரிப்பாகத் தொழில் நிறுவனம் கவனித்தது. இக்கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில் சீன அரசின் மனவுறுதியையும் வலுவான முயற்சியையும் கவனித்தது. தொடரவல்ல வளர்ச்சி என்ற கண்ணோட்டம் சர்வதேச சமூகத்தின் பொது கருத்தாக மாறியுள்ளது. ஒரு தொழில் நிறுவனத்தைப் பொருத்தவரை இது நிறஉவனத்திற்கு ஏற்றது என்று அவர் கூறினார்.
நான் 1972ம் ஆண்டில் இத்தொழி்ல் நிறுவனத்தில் சேர்ந்தேன். கடந்த 35 ஆண்டுகளில், நிறுவனத்தின் தொடரவல்ல வளர்ச்சி, தொழிலாளருக்கு எவ்வளவு முக்கியமானது என்பதை உணர்த்துள்ளேன். இந்த தொடரவல்ல வளர்ச்சி, இரு வகைகளாகும். ஒன்று, மக்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ள கூடிய உற்பத்திப் பொருட்களை தயாரிப்பது. இன்னொன்று, இயற்கை சூழ்நிலையில், இந்நிறுவனம் நிரந்தர வளர்ச்சி பாதையில் வழி நடப்பது. டங்ஷன் புதிய தொழில்நுட்ப வளர்ச்சி பிரதேசம் நாளுக்கு நாள் பக்குவம் பெறுவது மற்றும், caofeidian என்ற தொழில் நுட்ப வளர்ச்சி மண்டலம் நிறுவுப்படுவதுடன், டங்ஷனின் எதிர்காலம் எதிர்பார்க்கத்தக்கது என்று அவர் கூறினார். Aisin வாகனம், டங்ஷனுடன் இணைந்து தொடர்ந்து வளர்ச்சியின் எதிர்காலத்தை கூட்டாக உருவாக்க வேண்டுமென அவர் விருப்பம் தெரிவித்தார்.
|
|