• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-03-17 17:42:01    
திபெத் அரசின் நடவடிக்கை

cri
திபெத்தின் நிதானத்தை சீர்குலைக்க மேற்கொள்ளப்படும் எந்த பிரிவினைவாத முயற்சிகளும் மக்களின் ஆதரவை பெறாது, தோல்வியே அடையும் என்று திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் தலைவர் சியன்பா புன்சோக் கூறியுள்ளார். இன்று பெய்சிங்கில் லாசாவிலான வன்முறை பற்றி செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு கூறினார். தலாய் லாமாவின் ஆதரவாளர்கள் மேற்கொண்ட சூழ்ச்சியின் விளைவே லாசாவில் நிகழ்ந்த கலவரம் என்றும் இது குறித்து திபெத்தின் அனைத்து இன மக்களும் வெளிப்படையான கோபத்தையும் கண்டனத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர் என்றும் சியன்பா புன்சோக் கூறியுள்ளார். தீயை அணைக்கவும், காயமடைந்தோரை மருத்துவமனையில் சேர்க்கவும் பொது பாதுகாப்பு மற்றும் படைப்பிரிவினரையும் தன்னாட்சி பிரதேச அரசு ஒருங்கிணைத்துள்ளது. பள்ளிகள், வங்கிகள் மற்றும் அரசு நிறுவனங்களுக்கான பாதுகாப்பை அரசு அதிகரித்துள்ளதாகவும், எத்தகைய வன்முறை நடவடிக்கைகளும் சீனச் சட்டங்களின் படி ஒடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். தாங்கள் மேற்கொண்ட அனைத்து நடவடிக்கைகளும் சமூக நிதானத்தை நிலைநிறுத்தி, நாட்டின் சட்டம் மற்றும் விதிகளையும், திபெத் மக்களின் உரிமை மற்றும் நலன்களையும் பாதுகாக்கும் நோக்கிலேயே மேற்கொள்ளப்பட்டதாக குறிப்பிட்ட சியன்பா புன்சோக் தற்போது லாசாவில் அமைதியும், சமூக ஒழுங்கும் மீட்கப்பட்டுள்ளதாக கூறினார்.