• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-03-18 10:33:19    
பேரரசியின் ச்சியான் கல்லறை (ஆ)

cri

தாங் வம்சகாலத்தின் பேரரசர் லீ ச்சீ, மணரமடைந்த பின், பல்வேறு நாடுகளின் தலைவர்களும் தூதர்களும், தாங் வம்சகாலத்தின் தலைநகர் ச்சியாங் ஆன் நகருக்கு வந்து, அஞ்சலி செலுத்தினர். அத்துடன், ச்சியான் கல்லறைக்குச் சென்று, ஈமச் சடங்கில் கலந்து கொண்டனர். முன் கண்டிராத இக்காட்சியை நினைவப்படுவதற்காக, சிற்பக்கலைஞர்கள் இந்தத் தலைவர்கள் மற்றும் தூதர்களின் தோற்றத்தின்படி

சிற்பங்களைச் செதுக்க வேண்டும் என்று பேரரசி வூ ச்சே தியான் கட்டளை பிறப்பித்தார். இது, 61 தூதர்கள் சிற்பங்கள் என அழைக்கப்படுகிறது. 61 தூதர்கள் சிற்பங்கள், பாதையின் இரு பக்கங்களில் நிற்கின்றன. தற்போது, அவற்றின் தலை பகுதிகள், சீர்குலைக்கப்பட்டன. அதற்கான காரணம் இது வரை கண்டுவிடிக்கப்படவில்லை.

பேரரசர் லீ ச்சீ மற்றும் அவரது மனைவியும் பேரரசியுமான வூ ச்சே தியானும் ஒரே கல்லறையில்,

புதைக்கப்பட்டனர். வரலாற்றில், இது, முன்கண்டிராதது. இது வரை, இந்தக் கல்லறை, கொளையடிக்கப்படவில்லை. சி ஆன் நகர், 10 வம்சகாலங்களின் தலைநகராக நியமிக்கப்பட்டது. அதனால், பேரரசிகளின் கல்லறைகள் பல, இங்கு இருக்கின்றன. அவற்றில் பல, களவு போய்விட்டன. ஆனால், இந்த ச்சியான் கல்லறை மட்டும், கொள்ளையடிக்கப்படவில்லை. 1966 முதல் 1971ம் ஆண்டு வரை, சீனாவின் தொல்லியல் அறிஞர்கள், பல முறையாக இங்கு சென்று, அதற்கான காரணத்தை ஆராய்ந்தனர். அவர்களின் ஆராய்ச்சியின்படி, அது மிகவும்

நிலையாக இருக்கிறது என்பதை அதற்குக் காரணமாக கொண்டனர். கல்லறைப் பாதையின் வாயிலிலிருந்து, சமாதி வாயில் வரையான தூரம், 631 மீட்டராகும். அது, 3.9 மீட்டர் அகலமாக இருக்கிறது. 39 படிகள் இருக்கின்றன. அவை எல்லாம், கற்களால் கட்டியமைக்கப்பட்டுள்ளன. கற்கள் அனைத்தும், இரும்பு பிடியால் நிலைநாட்டப்பட்டுள்ளன. வரலாற்றும் பதிவேடுகளில் இயற்றப்பட்டமும், இந்த நிலைமையும் ஒத்தானதாகும். ஆகவே, இக்கல்லறை, உண்மையாகவே எளிதாக திறக்கப்பட முடியாதது.