• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-03-18 15:52:19    
நிங் சியா ஹுய் இன தன்னாட்சி பிரதேசத்தில் நீர்வளத்தைச் சிக்கனப்படுத்தும் நடவடிக்கை

cri
நிங் சியா ஹுய் இனத் தன்னாட்சிப் பிரதேசம் சீனாவின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ளது. இதன் நடுப்பகுதி பாலைவனப் பிரதேசத்துக்கு அருகில் உள்ளது. மழைப் பொழிவு குறைவு. காலநிலை வறட்சியாக இருக்கின்றது. TONG XIN மாவட்டம் நிங் சியாவின் நடுப்பகுதியிலுள்ள வறண்ட பிரதேசத்தின் மையத்தில் அமைந்துள்ளது. நீர்வளம் மிகவும் குறைவாக இருக்கின்றது. உயிரின வாழ்க்கை சூழல் மோசமாக இருக்கின்றது. குறிப்பாக, கடந்த சில ஆண்டுகளில், இம்மாவட்டத்தில் தொடர்ந்து 4 ஆண்டுகளாக வரலாற்றில் கண்டிராத மாபெரும் வறட்சி நிகழ்ந்தது. ஆண்டுக்கு மழை பொழிவின் அளவு சராசரியாக 120 மில்லி மீட்டர் மட்டுமே ஆகும்.

இந்நிலைமையைச் சமாளிக்க, வேளாண் துறையில் உயர் பயன் தரும் நீர் வளச் சிக்கன நடவடிக்கையை உள்ளூர் அரசு மேற்கொண்டு, சில எளிதான அறிவியல் தொழில் நுட்ப வழிமுறைகளைப் பயன்படுத்தி, வறட்சியால் ஏற்பட்ட பாதிப்பைக் குறைக்கப் பாடுபடுகின்றது.

முதலில், வேளாண் துறையில் நீரின் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும். நீர் ஏற்றிச்செல்லப்படும் வழியில் இதன் இழப்பை முதலில் தவிர்க்க வேண்டும். முக்கிய நீர் விநியோக வலைப்பின்னலில் கிளைக் குழாய்களையும் நீர் கட்டுப்பாட்டு வசதிகளையும் உள்ளூர் அரசு அமைத்துள்ளது. இதனால், நீர் விவசாயிகளின் வயல்களுக்கு நேரடியாக ஓடிசெல்லலாம்.

இம்மாவட்டத்தின் LI QIN என்னும் விவசாயி ஒரு ஹெக்டர் நிலப்பரப்பில் உருளைக்கிழங்கை பயிரிட்டுள்ளார். வயலில் நீர் நேரடியாக கிடைப்பது மிகவும் வசதியாக இருக்கின்றது என்று அவர் கூறினார். அவர் கூறியதாவது

நேரடியாக வந்து சேரும் நீரை எனது வயலில் பயன்படுத்த முடிகின்றது. கவலைப்படத் தேவையில்லை என்றார் அவர்.

மேலும், நீர் வளத்தை எப்படி செவ்வனே பயன்படுத்துவது என்பதும் மிக முக்கியமானது. பாரம்பரிய வறட்சி வேளாண் உற்பத்தி தொழில் நுட்பத்தையும் நீரைச் சிக்கனப்படுத்தும் நவீன வேளாண் தொழில் நுட்பத்தையும் இணைத்து, உருளைக்கிழங்கு, தர்பூசணி முதலியவற்றை முக்கியமாகக் கொண்ட வேளாண் பயிர்களை TONG XIN மாவட்டம் வளர்க்கின்றது. விளை நிலத்தின் பயன்பாடு அதிகரிக்கப்படும் அதேவேளையில், உற்பத்தி அளவும் உயர்ந்துள்ளது. பல விவசாயிகள் வறுமை நிலையிலிருந்து விலகியுள்ளனர். இம்மாவட்டத்தின் வறட்சி தடுப்பு அலுவலகத்தின் தலைவர் MA SHAN கூறியதாவது

இவ்வாண்டின் வறட்சி தடுப்பு பணியை கடந்த ஆண்டுடன் ஒப்பிடலாம். கடந்த ஆண்டு, மனிதர் மற்றும் கால்நடைகளின் குடி நீர் பிரச்சினை மட்டும் தீர்க்கப்படது. இவ்வாண்டு, இது மட்டுமல்லாது, உருளைக்கிழங்கு, தர்பூசணி முதலிய சிறப்பு வேளாண் பயிர்களின் வளர்ச்சியை ஆதரிக்கும் வகையில், இவற்றுக்கான நீர் விநியோகமும் அதிகரிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

சிறப்பு வேளாண் தொழில்களை வளர்ப்பதன் மூலம், 2010ம் ஆண்டுக்குள், TONG XIN மாவட்டத்தில் விவசாயிகளின் நபர்வாரி வருமானம் ஆண்டுக்கு 1000 யுவானைத் தாண்டும் இலக்கை நிறைவேற்ற வேண்டும் என்று இம்மாவட்ட அரசு திட்டமிட்டுள்ளது.

தவிர, நீரைச் சிக்கனப்படுத்தும் பல எளிதான வசதியான சாதனங்களை நிங் சியா ஹுய் இனத் தன்னாட்சி பிரதேசத்தின் அறிவியல் தொழில் நுட்பப் பணியாளர்கள் ஆராய்ந்து தயாரித்துள்ளனர். எடுத்துக்காட்டாக, செல்லிட உயர் அழுத்த நீர் ஊற்றியை, நிங் சியா வேளாண் மற்றும் காடு வளர்ப்பு அறிவியல் கழகம் ஆராய்ந்து தயாரித்துள்ளது. இந்த சாதனம் மூலம், நிலத்தின் கீழ் 10 சென்டி மீட்டர் ஆழமான இடத்துக்கு நீரை நேரடியாக வழங்கலாம். இதன் நீர் பயன்பாட்டு அளவு, பாரம்பரிய செயற்கை நீர்ப்பாசன முறையின் 25 விழுக்காடாகவும், வாகன நீர்ப்பாசன முறையின் 8.3 விழுக்காடாகவும் உள்ளது. நீரை சிக்கனப்படுத்தும் பயன் அதிகம்.

இந்த புதிய சாதனத்தின் தயாரிப்பு கட்டணம் 300 யுவான் மட்டும் என்று நிங் சியா ஹுய் வேளாண் மற்றும் காடு வளர்ப்பு அறிவியல் கழகத்தின் வறட்சி தடுப்பு ஆய்வகத்தின் துணைத் தலைவர் WANG FENG கூறினார். நீரைச் சிக்கனப்படுத்தும் பயன் அதிகம். மட்டுமல்ல எடையும் குறைவு. மண் மற்றும் நிலத்தின் நிலைமைக்கு ஏற்ற தன்மை வலுவானது. குடும்பப் பயன்பாட்டுக்கு வசதியாக உள்ளது என்று அவர் எடுத்து கூறினார்.

கடந்த ஆண்டு, TONG XIN மாவட்டத்தில் மழை பெய்யவில்லை. ஆனால், செல்லிட உயர் அழுத்த நீர் ஊற்றியை 3 முறை பயன்படுத்தியதால், ஹெக்டருக்கு தர் பூசணியின் உற்பத்தி அளவு 30 டன்னைத் தாண்டி, 2005ம் ஆண்டு இருந்ததை விட சுமார் 30 விழுக்காடு அதிகரித்தது.

தற்போது, TONG XIN மாவட்டத்தில் பல விவசாயிகள் இச் சாதனங்களைப் பயன்படுத்துகின்றனர். விவசாயி LUO ZHONG LONG கூறியதாவது

இச்சாதனம் மூலம், நீரை பயிரின் வேர்ப் பகுதிக்கு நேரடியாகச் கொண்டு சேர்க்கலாம். போதுவான நீர் இருந்தால், பயிர்கள் சீராக வளர்கின்றன. நல்ல விளைச்சல் கிடைத்தால் உணவு மற்றும் உடை பிரச்சினை தீர்க்கப்படும் என்றார் அவர்.

TONG XIN மாவட்டம் தவிர, நிங் சியா ஹுய் இனத் தன்னாட்சிப் பிரதேசத்தின் நடுப்பகுதியிலுள்ள வேறு பல மாவட்டங்கள், நீரைச் சிக்கனப்படுத்தி உயர் பயன் தரும் வேளாண் பயிர்த் தொழிலை வளர்க்கப் பாடுபடுகின்றன. உள்ளூர் இயற்கை சூழலுக்கு ஏற்ற இந்த நடவடிக்கை தெளிவான ஒட்டுமொத்த பயன் பெற்றுள்ளது என்பதை உண்மைகள் நிரூபித்துள்ளன.