• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-03-18 09:52:15    
வேலை வாய்ப்பு அதிகரிப்பைப் பாராட்டும் கருத்துக்கள்

cri

தமிழன்பன் இன்றைய நிகழ்ச்சியின் முதலாவதாக ஈரோடு வே. ராஜேஸ்வரியின் கடிதம். செய்தி தொகுப்பு நிகழ்ச்சி கேட்டேன். கன்புசியஸ் கழகம் வெளிநாடுகளில் மேற்கொள்ளும் பண்பாட்டு பரவல் பணி மகத்தானது. தேசிய இனக்குடும்பம் நிகழ்ச்சியில் சீன சிறுபான்மை இனங்கள் பற்றியும், அவர்களின் பாரம்பரிய வாழ்க்கை முறை, தொழில், ஆண்டு வருமான அதிகரிப்பு போன்ற அரிய கருத்துக்களை முழுமையாக அறிய முடிந்தது. சீனப்பண்பாடு நிகழ்ச்சியில் ஃபெங்சுவே பற்றி அதிகமாக அறிந்து கொண்டேன் ஆர் சிவகுமார், சேந்தமங்கலம் கார்த்திக், அவர்களும் ஃபெங்சுவே நிகழ்ச்சியை பாராட்டி கடிதம் எழுதியிருக்கிறார்கள்.


கலை அடுத்து கடையாலுருட்டி எம் பிச்சை மணி எழுதிய கடிதம். சீனமக்கள் வேலைவாய்ப்பையும் மறுவேலைவாய்ப்பையும் பெற்றுக்கொள்ள அரசுசாரா நிறுவனங்கள் உதவி செய்து வருவதை செய்திகள் மூலம் அறிந்தேன். வேலைவாய்ப்பு என்பது வாழ்வு கொடுப்பதற்கு சமமானது. அத்தகைய பணிகளை அரசோடு சேர்ந்து அரசுசாரா நிறுவனங்களும் மேற்கொண்டுள்ளது மக்களுக்கு அதிக நன்மையளிக்கும்.
தமிழன்பன் அடுத்தாக சீன வரலாற்று சுவடுகள் பற்றி ஊட்டி எஸ். கே. சுரேந்திரன் எழுதிய கடிதம். வட கொரிய மக்களுக்கு உதவும் வகையில் சீன மக்கள் படை அவர்களோடு சேர்ந்து போரிட்டதை அறிந்து நெகிழ்ந்தேன். அண்டை நாடுகளும் அடிமை தழையை அகற்றி சுதந்திரம் பெற உதவிய சீனர்களின் விடுதலை மனப்பாங்கை போற்றியே ஆக வேண்டும். பருவகாலங்களை பெயராக கொண்டுள்ள சீன மக்களின் எண்ணிக்கைகள் வரை கொடுக்கப்பட்ட மலர்சோலை நிகழ்ச்சி சுவாரசியமான தகவல்களை வழங்கியது சிறப்பாக அமைந்திருந்தது.

கலை அடுத்து கரூர் மாவட்ட ஆர். செல்லமுத்துவின் கடிதம். சீன சமூக வாழ்வு நிகழ்ச்சியினை தொடர்ந்து கவனித்து வருகிறேன். அதில் கொடுக்கப்படுகின்ற சீன சமூகத்தை பற்றி தரவுகள் அனைத்தும் பாராட்டும் விதமாக உள்ளது. சிறந்த நேயர்களாக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளோருக்கு எனது மனம் கனிந்த வாழ்த்துக்கள். நேயர் நேரம் நிகழ்ச்சியில் நேரடியாக பங்கு கொள்ளும் நேயர்கள் பலதரப்பட்டவர்களாய் இருக்க வேண்டும் என விருப்பப்படுகிறேன்.
தமிழன்பன் நேயர் நேரத்தின் போது ஏதாவது நிகழ்ச்சிகள் பற்றிய விமர்சனங்களை நேரடியாக பதிவு செய்ய விருப்பம் தெரிவிக்கின்ற நேயர்கள் அனைவரும் வாய்ப்பு கொடுக்கப்படுகிறார்கள். எனவே அப்படி விரும்பும் நேயர்கள் எங்களுக்கு தெரிவித்தால் ஆவன செய்வோம் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம். அடுத்ததாக காத்தான்குடியிலிருந்து மு. இ. சுஹா அனுப்பியுள்ள கடிதம். சீன வானொலியின் நிகழ்ச்சிகள் கேட்பது மகிழ்ச்சி அளிக்கும் விதமாக அமைந்திருந்தது. என்னுடைய வகுப்பு நண்பர்கள் அனைவரிடமும் சீன வானொலியை அறிமுகம் செய்துள்ளேன். அவர்களும் அதனை கேட்க தொடங்கியுள்ளனர். மட்டகளப்பு சஜீதாவும் நிகழ்ச்சிகள் பற்றிய பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.


மின்னஞ்சல் பகுதி
மார்ச் 3ஆம் நாள் தொடங்கப்பட்டு நடைபெற்றுக் கொண்டிருக்கும் 11வது சீனத் தேசிய மக்கள் பேரவையின் ஆண்டு கூட்டத்தொடர் மற்றும் சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 11வது தேசிய கமிட்டியின் முதலாவது ஆண்டு கூட்டத் தொடர்களில் தாங்கள் காட்டும் முக்கிய கவனத்தை பல நேயர் நண்பர்கள் இந்நாட்களில் தங்கள் மின்னஞ்சல் வழியாக எடுத்து கூறினர். செய்திகள், செய்தி தொகுப்புகள், இவ்விருக்கூட்டங்களில் கலந்து கொள்ளும் பிரதிநிதிகளின் கருத்துக்கள் மற்றும் பல்வேறு விளக்கங்கள் ஆகியவற்றை கேட்டு சீனாவின் இவ்விரு அதிவுயர் அமைப்புகளை பாராட்டியும், நம்பிக்கை தெரிவிக்கு