• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-03-18 10:00:34    
சீனாவில் நூடுல்ஸ் உணவு வகை

cri

வாணி -- இன்று நூடுல்ஸ் உணவு வகை பற்றி கூறுகின்றோம்.
க்ளீட்டஸ் -- அப்படியா, சீனாவில் நூடுல்ஸ் வகைகள் அதிகம் என்று கேள்விப்பட்டேன். நீங்கள் முதலில் இவற்றைப் பற்றி நேயர்களுக்கு விளக்கம் செய்யலாமா?
வாணி -- கண்டிப்பாக. சீனாவின் வடக்கு பகுதியில் மக்கள் கோதுமை உணவு வகைகளை மிகவும் விரும்புகின்றார்கள். எடுத்துக்காட்டாக, BAO ZI, MAN TOU, இவை கோதுமை மாவையும் நீரையும் சேர்க்கப்பட்டு நொதிக்கப்பட்ட பின், ஆவியில் வெப்ப மூட்டுவதன் மூலம் தயாரிக்கப்படுகின்றன. இவ்விரண்டுக்கும் வித்தியாசம், BAO ZI என்பதில் உள்ளே சில பொருட்கள் வைக்கப்படும். மேலும், BING உள்ளது. இது PIE போனது.


க்ளீ்ட்டஸ் -- நீங்கள் JIAO ZI என்ற உணவு வகை பற்றி சொல்லவில்லையே.
வாணி -- நான் சொல்வேன். JIAO ZI என்ற உணவு வகையைச் சீன மக்கள் மிகவும் விரும்புகின்றார்கள். குறிப்பாக, புத்தாண்டை வரவேற்கும் போது, குடும்பத்தினர் அனைவரும் ஒன்று கூடி, jiao zi ஐ தயாரித்து, சாப்பிட்டு மகிழ்வது வழக்கமாகும். மேலும், நூடுல்ஸ் சீன உணவு வகைகளில் முக்கிய இடம் வகிக்கின்றது. வெவ்வேறான இடங்களில் வெவ்வேறான தயாரிப்பு முறைகள் உள்ளன.
க்ளீட்டஸ் -- இந்தியாவிலுள்ள சீன உணவகத்தில் FRIED நூடுல்ஸ் உள்ளது. மிகவும் வரவேற்கப்பட உணவு வகை இதுவாகும்.
வாணி -- ஆமாம். இன்று நாங்கள் மற்றொரு வகை நூடுல்ஸின் தயாரிப்பு பற்றி எடுத்து கூறுகின்றோம். இதன் சீன பெயர் SUAN LA MIAN. அதாவது புள்ளிப்பு மற்றும் கார்ப்பு நூடுல்ஸ்.


க்ளீட்டஸ் -- வாணி, நீங்கள் தேவையான பொருட்கள் பற்றி தெரிவிக்கவும்.
வாணி -- நான் சொல்வேன்.
நூடுல்ஸ் 250 கிராம்
பன்றி இறைச்சித் துண்டு 160 கிராம், இதை விரும்பாத நேயர்கள் இதை சேர்க்க தேவையில்லை
சீன முட்டைக்கோசு 50 கிராம்
மிளகு ஒரு தேக்கரண்டி
உணவு எண்ணெய் 3 தேக்கரண்டி
பச்சை மிளகாய் 2
காடி 2 தேக்கரண்டி
உப்பு போதிய அளவு
பூண்டு சிறிதளவு

வாணி -- சரி, செய்முறையை எடுத்து கூறுகின்றோம்.
க்ளீட்டஸ் -- முதலில்,பூண்டை சிறிய துண்டுகளாக நறுக்கவும், வாணலியை அடுப்பின் மீது வைத்து, இதில் உணவு எண்ணெயை ஊற்றவும். சில வினாடிகளுக்குப் பின், மிளகை இதில் வைத்து, வதக்கவும். மணம் வந்த பிறகு, மிளகைவாணலியிலிருந்து வெளியே எடுக்கலாம். பூண்டு துண்டுகளை வாணலியில் வைத்து, வதக்கவும். உடனடியாக இறைச்சித் துண்டுகளை இதில் சேர்க்கலாம். நன்றாக வதக்க வேண்டும்.


வாணி -- முட்டை கோசை அரிந்து வைக்க வேண்டும். மிளகாய்களை பொடி பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும். இவை எல்லாம், வாணலியில் கொட்டி, வதக்கவும். பிறகு, ஒரு லிட்டர் தண்ணீரை இதில் ஊற்றி வேகவிடுங்கள். 10 நிமிடங்களுக்குப் பின், ஒரு தேக்கரண்டி காடி, 2 தேக்கரண்டி மிளகாய் எண்ணெய், சிறிதளவு உப்பு ஆகியவற்றை இதில் ஊற்றலாம். இது தான் நூடுல்ஸின் சூப்பாகும்.
க்ளீட்டஸ் -- வேறு ஒரு வாணலியில், தண்ணீரை ஊற்றி, சிறிதளவு உப்பை போடவும். நீர் கொதித்த பிறகு, இதில் நூடுல்ஸை போடலாம். நூடுல்ஸை நன்றாக வேகவிடுங்கள்.


வாணி -- நூடுல்ஸை இந்த வாணலியிலிருந்து சூப்பு இடம்பெறும் வாணலிக்கு இடம் மாற்றலாம். சுவையான புளிப்பு மற்றும் கார்ப்பு நூடுல்ஸ் தயார்.
வாணி -- சில குறிப்புகள். நூடுல்ஸை மிதமான சூட்டில் வேகவிடுவது நல்லது. மேலும், தண்ணீரில் சிறிதளவு உப்பை சேர்த்தால், நூடுல்ஸ் ஒட்டிக்கொள்ளாது.
க்ளீட்டஸ் -- வாணி, அடுத்த நிகழ்ச்சிகளில், நூடுல்ஸ் பற்றிய வேறுபட்ட தயாரிப்பு முறைகளை பற்றி எடுத்து கூறலாம் என்று நினைக்கின்றேன்.
வாணி -- ஆமாம். அதிக தயாரிப்பு முறைகள் உள்ளன.


க்ளீட்டஸ் -- சரி, அடுத்த முறை எந்த வகை உணவு பற்றி கூறுவோம்?
வாணி -- அடுத்த முறை, பால், பழம், மக்காச்சோளம் ஆகியவை இடம்பெறும் ஒரு இனிப்பான உணவு வகை பற்றி கூறுவோம். ஆர்வம் கொண்ட நேயர்கள் மாம்பழம், peach, முலாம்பழம் போன்ற பல்வகை பழங்களை முன்கூட்டியே தயாரிக்கலாம். தேன் இருந்தால் நல்லது.