தற்போது சீனாவின் திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் தலைநகரான லாசாவில் நிலைமை அமைதியாகி சமூக ஒழுங்கும் நிதானமாகியுள்ளது என்று சீனத் திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் தலைவர் சியான்பா பின்சோ கூறியுள்ளார். இன்று பெய்சிங்கில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் இவ்வாறு கூறினார். 14ம் நாள் லாசா வில் நிகழ்ந்த கடுமையான வன்செயல்களால் 210க்கும் அதிகமான கடைகளும் வீடுகளும் தீயால் கருகின. 50க்கும் அதிகமான வாகனங்கள் நொறுக்கப்பட்டன. 13 பேர் உயிரிழந்தனர். அங்குள்ள மக்களின் உயிருக்கும் சொத்துக்கும் மாபெரும் இழப்பு ஏற்பட்டது. சமூக ஒழுங்கும் கடுமையாக சீர்குலைக்கப்பட்டது.
|