• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-03-18 09:43:22    
திபெத்தின் வளர்ச்சி தடுக்கப்பட முடியாதது

cri
திபெத்தின் வளர்ச்சி எந்த சக்தியாலும் தடுக்கப்பட முடியாதது, தாய்நாட்டைப் பிளவுப்படுத்தும் சூழ்ச்சிகள் அனைத்தும், திபெத் உடன்பிறப்புக்கள் உள்ளிட்ட அனைத்து சீன மக்களின் உறுதியான எதிர்ப்பைச் சந்திப்பது உறுதி என்று சீன வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் லியு சியேன் சௌ நேற்று பெய்ஜிங்கில் தெரிவித்தார்.
அண்மையில் லாசா நகரில் நிகழ்ந்த வன்முறை குற்றச்செயல், வெளிநாடுகளிலுள்ள தாலாய் லாமா குழுவும், உள்நாட்டிலுள்ள திபெத் சுதந்திர பிரிவினைவாதிகளும் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்யப்பட்டதாகும். அது அமைதி பேரணி அல்ல. வன்முறை குற்றச்செயலாகும். சமூக நிதானத்தையும் பல்வேறு தேசிய இன மக்களின் அடிப்படை நலன்களையும் பேணிக்காக்கும் வகையில், திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் தொடர்புடைய வாரியங்கள் சட்ட படி அதனைக் கையாண்டுள்ளது என்றார் அவர்.
தலாய் லாமா குழுவின் பிரிவினை தன்மையையும், கூறப்படுகின்ற தமது அமைதி மற்றும் வன்முறையற்ற செயலின் போலித்தனமான தன்மையை இச்சம்பவம் மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது. தொடர்புடைய நாடுகள் உண்மைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று சீனா விரும்புவதாக லியு சியேன் சௌ தெரிவித்தார்.