• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-03-18 11:28:48    
லாசாவில் சமூக ஒழுங்கு மீட்பு

cri
அண்மையில், சீனத் திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் தலைநகரான லாசாவில், வன்முறை குற்றச் சம்பவம் நிகழ்ந்தது. இதனால் உள்ளூர் சமூக ஒழுங்கு கடுமையாக சீர்குலைக்கப்பட்டது. வெளிநாடுகளிலுள்ள தாலாய் லாமா குழுவும், உள்நாட்டிலுள்ள திபெத் சுதந்திர பிரிவினை சக்தியும் ஒன்றிணைந்து இச்சம்பவத்தை ஏற்பாடு செய்தன என்று திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் தலைவர் சியன்பா புன்சோக் கூறியுள்ளார். தற்போது, லாசாவின் நிலைமை நிதானமாகியுள்ளது. சமூக ஒழுங்கு மீட்கபட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

நேற்று சீன அரசவையின் செய்தி அலுவலகம் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில், சியன்பா புன்சோக் இந்த வன்முறை சம்பவம் பற்றிய நிலைமையை எடுத்து கூறினார்.

14ம் நாள் காலை, Ramoche கோயிலுக்கு அருகில், சில துறவிகள் தங்கள் வேலையில் ஈடுபட்டிருந்த காவற்துறையினரைத் தாக்கினர். பிறகு, சில தீவிரவாதிகள், சாலையில் ஒன்று கூடி, நாட்டைப் பிளவுப்படுத்துவது பற்றிய முழக்கம் இட்டனர். அதேவேளையில், அவர்கள், உடமைகளையும் கடைகளையும் தீயிட்டு கொழுத்துவது உள்ளிட்ட அழிவு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டனர். நிலைமை விரைவில் மோசமாகியது. லாசா நகரின் முக்கிய சாலைகளிலுள்ள கடைகள், பள்ளிகள், மருத்துவமனைகள், வங்கிகள், மின்னாற்றல் மற்றும் செய்தி தொடர்பு வசதிகள், செய்தி ஊடகங்கள், அரசு வாரியங்கள் முதலியவற்றின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் தொடுத்து, வாகனங்களை தீக்கிரையாக்கி, அப்பாவி மக்களை அடித்து துன்புறுத்தினர்.

திபெத் தன்னாட்சி பிரதேச அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு, சட்டத்தின் படி வன்முறை குற்ற நடவடிக்கைகளை ஒடுக்கியது. சியன்பா புன்சோக் கூறியதாவது

தொடர்புடைய வாரியங்கள், தீயை அணைப்பது, காயமடைந்தவர்களைக் காப்பாற்றுவது முதலிய பணிகளில் ஈடுபட்டதோடு, பள்ளிகள், மருத்துவமனைகள், வங்கிகள், அரசு வாரிங்கள் முதலியவற்றுக்கான பாதுகாப்பை வலுப்படுத்தி, சட்டத்தின் படி, வன்முறை குற்ற நடவடிக்கைகளை ஒடுக்கியுள்ளன. சமூக நிதானத்தையும், நாட்டின் சட்ட அமைப்பையும், திபெத்தில் பல்வேறு தேசிய இன மக்களின் அடிப்படி நலன்களையும் பேணிக்காக்கும் பொருட்டு, நாம் இந்நடவடிக்கை மேற்கொண்டோம். தற்போது, லாசா நகரில் அமைதி மீட்கப்பட்டுள்ளது. சமூக ஒழுங்கு நிதானமாக உள்ளது என்றார் அவர்.

வன்முறை சம்பவத்தில், மொத்தம் 210 வீடுகள் மற்றும் கடைகள் நாசமாக்கப்பட்டன. 56 வாகனங்கள் தீயிட்டு கொழுத்தப்பட்டன. 13 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். தீவிரவாதிகள் மிகவும் கொடிய நடவடிக்கைகளை மேற்கொண்டனர் என்று சியன்பா புன்சோக் கூறினார். எடுத்துக்காட்டாக, அப்பாவி மக்களில் ஒருவரை பெட்ரோலியம் ஊற்றி கொழுத்தியுள்ளனர். உலகில், எந்த ஒரு ஜனநாயக சட்ட நாட்டிலும் இத்தகைய வன்முறை செயல்கள் நிகழ அனுமதிப்பதில்லை என்று அவர் கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது

தலாய் லாமா குழு கொடூரமாகத் திட்டமிட்டு, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு திபெத் சுதந்திர பிரிவினை சக்திகள் ஒன்றிணைந்து இச்சம்பவத்தை ஏற்பாடு செய்துள்ளன. பெய்ஜிங்கில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நடைபெறவுள்ள இந்த முக்கிய தருணத்தில், அமைதியைச் சீர்க்குலைக்கும் நோக்கில் சீரற்ற நிலைமையை உருவாக்குவது தான் இதன் நோக்கமாகும் என்றார் அவர்.

வன்முறை குற்றச் சம்பவத்தை ஒடுக்கிய போது, தொடர்புடைய வாரியங்கள் பொறுப்பு ஏற்கும் மனப்பாங்குடன், சட்டத்தின் படி செயல்பட்டன. நிலைமையை தணிவு செய்து ஒழுங்கை மீட்கும் முழு போக்கில், ஆட்கொல்லி ஆயுதங்கள் எதுவும் பயன்படுத்தப்படவில்லை என்று சியன்பா புன்சோக் கூறினார்.

கடந்த பல பத்து ஆண்டுகளாக, திபெத்தின் வளர்ச்சியில் சீன நடுவண் அரசு மிகவும் கவனம் செலுத்தி, பல்வேறு நடவடிக்கைகள் மூலம் உள்ளூர் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தியுள்ளது. திபெத்தின் நிதானத்தை சீர்குலைத்து, பிரிவினை நடவடிக்கையில் ஈடுபடும் முயற்சிகள் அனைத்தும் தோல்வி அடைவது உறுதி என்று அவர் கூறினார்.