திபெத்துக்கான நடுவண் அரசின் ஆதரவு
cri
தலாய் லாமா குழு லாசாவில் அழிவு நடவடிக்கைகளை திட்டமிட்டு, வேண்டுமென்றே தூண்டிவிட்டதைப் பல சான்றுகள் கோடிட்டுக்காட்டுகி்ன்றன என்று சீனத் தலைமை அமைச்சர் வென் சியா பாவ் இன்று பெய்ஜிங்கில் கூறினார். சுதந்திரத்தை நாடுவதற்குப் பதிலாக அமைதி பேச்சுவார்த்தை மேற்கொள்வது போதும் என்ற தலாய் லாமா குழுவின் கூற்று பொய்யாகும் என்பதை இந்த சம்பவம் காட்டுகின்றது. திபெத்தின் அமைதி மற்றும் நிதான சமூக ஒழுங்கைப் பேணிக்காக்கும் ஆற்றல் சீன அரசுக்கு உண்டும் என்று வென் சியாபாவ் கூறினார். அது மட்டுமல்ல, திபெத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் சமூக முன்னேற்றத்துக்கும் அரசு தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
|
|