சீனத் திபெத் தன்னாட்சிப் பிரதேசத் தலைநகர் லாசா நகரின் பல்வேறு நெடுஞ்சாலைகளில் வாகன போக்குவரத்து சீராக உள்ளது. பல கடைகள் மீண்டும் திறக்கப்பட்டு, பல்கலைக்கழகம், இடைநிலைப் பள்ளி மற்றும் துவக்க பள்ளிகளில் வகுப்புகள் மீண்டும் துவங்கியுள்ளன. லாசாவில் சமூக ஒழுங்கு அடிப்படையில் இயல்பு நிலைக்கு மீட்கப்பட்டுள்ளது.
மார்ச் திங்கள் 14ம் நாள், லாசா நகரத்தில் மக்களின் சொத்துக்களை சூறையாடுவது உள்ளிட்ட சீர்குலைவு நடவடிக்கைகள் நிகழ்ந்த பின், உள்ளூர் அரசு மற்றும் தொடர்புடைய வாரியங்கள் கட்டுப்பாட்டு மனப்பான்மையுடன் செயல்பட்டு அவற்றை தணிவுப்படுத்தியுள்ளது. 17ம் நாள் முதல், திபெத் தன்னாட்சிப் பிரதேசம், லாசாவின் முக்கிய கட்சி, அரசு ஆகியவற்றின் நிறுவனங்கள் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளன.
தற்போது, லாசாவின் இருப்புப் பாதை, பயணியர் விமான சேவை, தொலை மற்றும் குறுகிய தூர பயணியர் போக்குவரத்து ஆகியவை சீராகச் செயல்படுகின்றன.
|