சர்வதேசத்தில் தாய்நாட்டைப் பிளவுப்படுத்தும் மற்றும் பல்வேறு தேசிய இனங்களின் ஒருமைப்பாட்டைச் சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் Dalai Lama நீண்டகாலமாக ஈடுபட்டு வருகின்றார். அவர் அரசியல் நாடோடி ஆவார் என்று சீன வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் qin gang நேற்று பெய்ஜிங்கில் தெரிவித்தார்.
வரலாற்றில் திபெத், சீனாவின் ஒரு பகுதியாகும் என்று Dalai Lama ஏற்றுக்கொள்ளவில்லை. திபெத் சீனா கைப்பற்றப்பட்ட ஒரு நாடாகும் என்று அவர் கூறினார். திபெத்தை ஒரு கூட்டாட்சி ஜனநாயகத் தன்னாட்சிக் குடியரசாக நிறுவ வேண்டும் என்று Dalai Lama குழுவின் கூறப்படுகின்ற திபெத் தொலை அயல் அரசாங்கம் கூறுகின்றது.அண்மையில் லாசா நகரில் நிகழ்ந்த வன்முறை சம்பவங்கள் தலாய் லாமா குழுவின் பிரிவினைத் தன்மையையும், கூறப்படுகின்ற அவரது அமைதி மற்றும் வன்முறையற்ற செயலின் போலித் தன்மையையும் மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது என்று qin gang தெரிவித்தார்.
|