அண்மையில் திபெத்தின் தலைநகரான லாசா நகரில் நிகழ்ந்த வன்முறை சம்பவங்களைத் திபெத் தேசிய இனப் பிரமுகரும் சீனத் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் வளர்ச்சி ஆலோசனைக் குழுவின் சிறப்புத் தலைவருமான re di நேற்று பெய்சிங்கில் வன்மையாகக் கண்டித்தார்.
அண்மையில், மேலை நாடுகளின் சில அரசியல்வாதிகள் மற்றும் செய்தி ஊடகங்கள், இவ்வன்முறை சம்பவங்களைச் அமைதி பேரணிகளாகக் கூறுகின்றன. லாசா நகரில் நிகழ்ந்த மக்களின் உயிர் மற்றும் சொத்து பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் இத்தகைய வன்முறை சம்பவங்களுக்கு, உலகில் எந்த நாடுகளும் அரசுகளும் அனுமதி வழங்க முடியாது என்று re di தெரிவித்தார்.
அடிமையாக இருந்த re diக்கு இவ்வாண்டு 70 வயது. திபெத்தில் அமைதி விடுதலைக்குப் பின், சமூகப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட மாபெரும் மாற்றங்களை அவர் கண்டுள்ளார்.
|