• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-03-19 09:54:32    
ஆவியை விற்றவன்

cri
சுங் திங்போ என்பவன் நான்யாங் என்ற இடத்தில் வாழ்ந்து வந்தான். இளைமையும், வலிமையும் பொருந்திய சுங் திங்போ ஒருநாள் இரவு நடந்து சென்றுகொண்டிருந்தபோது வழியில் ஒரு ஆவியை, அதாவது பேயை சந்தித்தான். அது ஆவியா இல்லை தன்னை போல பாவியா என்று அறியாத சுங் திங்போ, ஆவியை பார்த்து யார் நீ என்று கேட்டான்.
ஆவி அடக்கத்துடன் ஐயா நான் ஒரு ஆவி, பேய். நீங்கள் யார்? என்று கேட்டது. அதற்கு சுங் திங்போ, நான் சுங் திங்போ, நான்யாங்கை சேர்ந்தவன் என்று சொல்லாமல், நானும் உன்னை போல ஒரு ஆவிதான், பேய்தான் என்று பொய் சொன்னான்.
இதைக் கேட்ட ஆவி, சரி எங்கே போகிறீர் என்று கேட்டது. நான் நகருக்குச் செல்கிறேன் என்றான் சுங் திங்போ. ஆவி, அடடே நானும் நகருக்குத்தான் செல்கிறேன் என்றது.
ஆக ஆவியும், சுங் திங்போவும் நீண்ட தொலைவிலுள்ள நகரை நோக்கி நடக்கத் தொடங்கினர். ஏறக்குறைய ஒரு மைல் தொலைவு சென்றதும், அப்பாவி ஆவி, "நடப்பது கொஞ்சம் களைப்பாகத்தான் இருக்கிறது அல்லவா. ஏன் நாம் ஒருவரை ஒருவர் மாறி மாறி கொஞ்சம் தொலைவு சுமந்து செல்லக்கூடாது என்று கேட்டது.
அட, ஆமாம். அது நல்ல யோசனைதான் என்றான் சுங் திங்போ. எனவே ஆவி, முதலில் தானே சுங் திங்போவை சுமந்து செல்ல முன்வந்தது. சிறிது தூரம் சென்றதும், சுங் திங்போவின் கனமான உடலை சுமந்த ஆவி, எவ்வளவு கனமாக இருக்கிறீர். நீர் உண்மையில் பேய்தானா? என்னை போல ஆவிதானா? என்று கேட்டது. அதற்கு சுங் திங்போ, நான் புதிய ஆவி. அதனால் தான் பொதுவாக ஆவிகள் இருப்பதை விட கனமாக இருக்கிறேன் என்று கூறினான். அப்பாவி ஆவியும் அவனை நம்பி தொடர்ந்து சுமந்து சென்றது. சிறிது தூரம் சென்றதும், ஆவியின் தோளிலிருந்து கீழே இறங்கிய சுங்திங்போ, ஆவி தன் மீது சுமந்து நடக்க தொடங்கினான். ஆவி என்பதால் சுங் திங்போவுக்கு கனம் தெரியவில்லை.. வழியில் ஆவியிடம் பேசியபடியே வந்த சுங் திங்போ, முக்கிய இரகசியத்தை அறியும் நோக்கில், "நான் புதிய ஆவியல்லவா. நம்மை போல் ஆவிகளுக்கு எதைக்கண்டால் பயம் என்பது எனக்கு தெரியாது" என்றான். அப்பாவி ஆவி எதற்கு கேட்கிறான் என்று அறியாமல், அவனும் ஆவியென்று நம்பி " மனிதர்களால் காறி உமழிப்படுவதை, எச்சில் துப்பப்படுவதை மட்டும்தான் நாம் அஞ்சுவோம், வேறேதுமில்லை" என்றது. இப்படி மாறி மாறி ஆவியும், சுங் திங்போவும் ஒருவரை ஒருவர் சுமந்து நடந்து ஒரு நதியை அடைந்தனர். சுங் திங்போ முதலில் ஆவியை ஆற்றை கடந்து செல்லும்படி கூறினான். ஆவி எந்த சத்தமும் எழுப்பாமல் அழகாக கடந்து சென்றது. பின் தொடர்ந்த சுங் திங்போ, ஆற்றை கடக்கையில் சத்தம் எழுந்தது. உடனே ஆவி, ஏன் இப்படி சத்தம் எழுப்புகிறீர் என்று கேட்டது. சுங் திங்போ நான் அண்மையில்தான் இறந்தேன் எனவே ஆவியாக நான் ஆற்றைக் கடந்து பழகவில்லை என்றான். பின் தொடர்ந்து நடந்து நகரை அடைந்தது தன் தோளிலிருந்த ஆவியை கீழே இறக்கி வலுவாக பிடித்துக்கொண்டான் சுங் திங்போ. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஆவி, தன்னை விட்டுவிடுமாறு கேட்டு கதறியது. ஆனால் ஆவியின் குரலுக்கு செவிகொடுக்காத சுங் திங்போ ஆவியை வலுவாக பிடித்தபடி நேரடியாக சந்தை பகுதிக்கு சென்றான். ஆவியை அங்கே கீழே இறக்கியபோது அது ஒரு ஆடாக மாறியது. ஆடாக மாறிய ஆவி மீண்டும் ஆவியாக மாறாமல் தடுக்க உடனே அதன் மீது எச்சில் துப்பி அதை அவசர அவசரமாக விற்றும் விட்டான் சுங் திங்போ. ஆயிரத்து ஐநூறு காசுகள் கூடுதலாக கொண்டவனாக வீடு திரும்பினான் சுங் திங்போ.
இதன் மூலம் தான்
சுங் திங்போ மற்றவரை விட செய்தான் நான்றாய்
ஆயிரத்து ஐநூறு காசுக்கு விற்றான் பேயை
என்று சுங் திங்போ பற்றிய ஒரு சொல்லாடல் வந்தது என்கிறார்கள்.