• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-03-19 14:58:07    
போக்குவரத்து பிரச்சினை

cri
பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி காலத்தில் பெய்ஜிங் மாநகரின் போக்குவரத்து பிரச்சினை தீர்க்கப்படலாம் என்று பெய்ஜிங் ஒலிம்பிக் அமைப்பு குழுவின் துணை செயல் தலைவர் wang wei 6ம் நாள் தெரிவி்த்தார்.
இப்போட்டி நெருங்கி வரும் வேளையில், பெய்ஜிங்கின் போக்குவரத்து நிலைமை, மக்கள் கவனம் செலுத்துகின்ற முக்கிய பிரச்சினையாக மாறியுள்ளது. வீரர்களும் ரசிகர்களும் சரியான நேரத்தில் விளையாட்டரங்குகளை அடைவதற்கு உத்தரவாதம் செய்யும் வகையில், இப்போட்டி காலத்தில் பெய்ஜிங் அரசு, ஒலிம்பிக் ஊர்திகளுக்கான

சிறப்பு பாதைகளை உருவாக்கும். தவிர, போக்குவரத்தை தளர்த்தும் நடவடிக்கைகள் சில மேற்கொள்ளப்படும். பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் போக்குவரத்து சேவை உத்தரவாதமானது என்று அவர், செய்தியாளரிடம் பேட்டி அளித்த போது தெரிவித்தார்.
இப்போட்டி காலத்தில், பல்வேறு நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் 6 இலட்சம் வீரர்கள் அதிகாரிகள் மற்றும் ரசிகர்களை பெய்ஜிங் வரவேற்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் போக்குவரத்து அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையில், பெய்ஜிங் மாநகர அரசு 11 ஆயிரம் கோடி யுவானை ஒத்துகீடு செய்துள்ளது குறிப்படதக்கது.

பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை புறக்கணிப்பை எதிர்ப்பதாக சர்வதேச ஒலிம்பிக் குழுவின் துணைத் தலைவர் Thomas Bach ஜெர்மனியின் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த போது, தெரிவித்தார்.
இது தவறான பாதையாகும். அதற்கு மாறான முடிவுகள் பெறப்படும். அரசியல் துறை, முன்பு படிப்பினையை பெற்றுள்ளது. ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி புறக்கணிப்புகள், தோல்வியில் முடிவடையும். இத்தகவலை மக்கள் அனைவரும் அறிந்து கொண்டுள்ளனர். விளையாட்டின் நோக்கம், பாலத்தை உருவாக்குவதாகுவதே, சுவரை அமைப்பதோ அல்ல என்று பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை புறக்கணிக்க சிலரின் முன்மொழிவுக்கு எதிராக அவர் கருத்து தெரிவித்ததாக நேற்று FAZ என்னும் ஜெர்மனியின் செய்தியேடு வெளியிட்டது.

 


சர்வதேச ஒலிம்பிக் குழு, ஒரு நாட்டுக்கு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை நடத்தும் உரிமையை வழங்கும் போது, அந்நாடு, படிப்படியாகமற்ற நாடுகளுக்கு திறக்கும் என்று விரும்புவதாக Bach தெரிவித்தார். இப்போது சீனாவின் பல துறைகள் வெளிநாடுகளுக்கு திறக்கப்பட்டுள்ளன என்று அவர் கருத்து தெரிவித்தார்.
2008ம் ஆண்டுக்கான உலக Formula 1 கார் பந்தயத்தின் முதலாவது போட்டி 16ம் நாள் ஆஸ்திரேலியாவின் Melbourne நகரி்ல் முடிவடைந்தது. இப்போட்டியில், Mclaren அணியின் பிரிட்டன் வீரர் Hamilton இவ்வாண்டில் தனது முதலாவது சாம்பியன் பட்டத்தைப் பெற்றார். bmw அணியின் ஜெர்மனி வீரர் Heidfeld இரண்டாவது இடத்தைப் பெற்றார். Williams அணியின் ஜெர்மனி வீரர் Rosberg மூன்றாவது இடத்தை பிடித்தார். 2007ம் ஆண்டுக்கான உலக Formula 1 கார் பந்தய போட்டியின் சாம்பியன் பட்டத்தைப் பெற்ற Ferrari அணியின் பின்லாந்து வீரர் Raikkonen 8வது இடத்தை தான் பெற்றார்.
இந்திய ஆற்றல் அணியைச் சேர்ந்த இரண்டு வீரர்கள் இப்போட்டியை முழுமையாக நிறைவேற்ற வில்லை.