அண்மையில் சீனாவின் திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் தலைநகரான லாசாவில் நிகழ்ந்த அடித்தல், சீர்குலைத்தல், கொள்ளையடித்தல் மற்றும் தீயால் நாசமாக்குதல் போன்ற வன்செயல்களை திபெத் இனத்தின் பிரமுகரும் திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் வளர்ச்சி மற்றும் ஆலோசனை ஆணையத்தின் கௌரவ தலைவருமான Raidi இன்று பெய்சிங்கில் வன்மையாகக் கண்டித்துள்ளார். தலாய் லாமா குழுவின் பிரிவினை மற்றும் சீர்குலைவு நடவடிக்கைகள் இன்னும் நிறுத்தப்படவில்லை என்பதை இது மீண்டும் கோடிட்டுக்காட்டியுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
14ம் நாள் முற்பகல் லாசா வடகிழக்கு பகுதியிலுள்ள கோயிலான Ramoche மட கோயிலில் தங்கள் பணிகளை மேற்கொண்டு வந்த காவற்துறையினரை சில துறவிகள் கற்களால் தாக்கினர். அதனையடுத்து, சிலர் சாலையில் ஒன்று கூடி, நாட்டை பிரிவினை செய்வது உள்ளிட்ட முழக்கங்களை எழுப்பியதோடு, அடித்தல், சீர்குலைத்தல், கொள்ளையடித்தல் மற்றும் தீயால் நாசமாக்குதல் போன்ற வன்முறை நடவடிக்கைகளை வெளிப்படையாக அரங்கேற்றினர். நிலைமை கணிசமான அளவு பெரிதாக இருந்தது. புள்ளி விபரங்களின் படி, இவ்வன்முறை நிகழ்ச்சியில், சுமார் 210 வீடுகள் மற்றும் கடைகள் தீக்கிரையாக்கப்பட்டன. 56 வாகனங்கள் எரிக்கப்பட்டன. 13 பொது மக்கள் உயிரிழந்தனர்.
இது தலாய் லாமா சதியால்சூழ்ச்சி செய்யப்பட்டு தூண்டப்பட்ட நிகழ்ச்சியாகும் என்று Raidi வெளிப்படுத்தினார். இது பற்றி அவர் கூறியதாவது: ஒலி:1 நுண்ணர்வுடைய காலத்தில் ஆத்திரமூட்டலை கிளப்புவது, இரத்தம் சிந்தும் வன்முறை நிகழ்ச்சிகளை உருவாக்குவது, 2008ம் ஆண்டு பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டி அமைதியாக நடைபெறுவதை தடுப்பது, நிதானம் மற்றும் இணக்கமான சமூகத்தின் அரசியல் நிலைமையைச் சீர்குலைப்பது என்பன வன்முறை நிகழ்ச்சியை உருவாக்குவதன் நோக்கமாகும். வெளிநாட்டில் மறைந்துள்ள தலாய் லாமாவின் பிரிவினைவாதக் குழு சீனாவுக்கு கேடு விளைவிக்கும் நடவடிக்கைகளை குறைக்கவில்லை. அதன் பிரிவினை மற்றும் சீர்குலைவு நடவடிக்கைகள் நிறுத்தப்படவில்லை என்பதை இந்நிகழ்ச்சி மீண்டும் கோடிட்டுக்காட்டியுள்ளது என்றார் அவர்.
Raidi உள்ளிட்ட பல்வேறு துறைகளின் நிபுணர்களும் அறிவாளர்களும் அடங்கிய வளர்ச்சி மற்றும் ஆலோசனை ஆணையம். திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் சமூக வளர்ச்சிக்கு ஆலோசனை முன்வைப்பதில் ஈடுபடுகின்றது. 70 வயதான Raidi அடிமை குடும்பத்தில் பிறந்தார். 1951ம் ஆண்டில் திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் அமைதியான விடுதலை முதல், நிகழ்ந்துள்ள அனைத்து மாற்றங்களையும் தன்னை தானே கண்டறிந்தார். இந்நிகழ்ச்சி எதேச்சையாக நடத்தப்படவில்லை என்று Raidi தெரிவித்தார். கடந்த சில பத்து ஆண்டுகளில், வரலாற்றில் மிகவேகமான வளர்ச்சி, மிகப்பெரிய மாற்றம், மக்கள் பெற்ற மிகப் பெரும் நலன் மிகுந்த காலத்தை திபெத் தன்னாட்சி பிரதேசம் அனுபவித்துள்ளது. ஆனால், திபெத்தின் சமூக முன்னேற்றம், பொருளாதார வளர்ச்சி, இன ஒற்றுமை, திபெத் மக்களின் இன்பமான வாழ்க்கை ஆகியவற்றை பார்க்க தலாய் லாமா குழு விரும்பவில்லை. எனவே, திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் உறுதிப்பாட்டு வளர்ச்சியை இது சீர்குலைக்க பல வழிமுறைகளை தேடி பயன்படுத்தியுள்ளது.
இந்நிகழ்ச்சிக்கு பின், திபெத் தன்னாட்சி பிரதேசம் நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டு, சட்டப்படி வன்முறை குற்றசெயல்களை தடுத்தது. தற்போது, லாசாவின் நிலைமை அமைதியாகியுள்ளது. சமூக ஒழுங்கு இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. ஆனால், அடித்தல், சீர்குலைத்தல், கொள்ளையடித்தல் மற்றும் தீயால் நாசமாக்குதல் போன்ற வன்செயல்களை அமைதி பேரணிகள் என தலாய் லாமா குழுவாலும் மேலை நாடுகளாலும் மட்டுமே கூறப்படுகின்றது. அக்கூற்றுகள், நிகழ்ச்சியின் உண்மைக்குப் புறம்பானவை என்று Raidi தெரிவித்தார். அவர் கூறியதாவது: ஒலி:2 இப்படிப்பட்ட வன்முறை குற்ற நிகழ்ச்சிகளுக்கு எல்லா நாடுகளும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எல்லா நாடுகளும், மக்களின் உயிர் மற்றும் சொத்து இழப்புகள், இணக்கமான உறுதிப்பாட்டு சமூக ஒழுங்கு, நிதானமான ஒற்றுமையின் சிறப்பான நிலைமை ஆகியவற்றுக்குப் பாதுகாப்பு அளிக்கும். இப்படிப்பட்ட நடவடிக்கைகள் எந்த நாடுகளாலும் சசிக்க முடியாது என்றார் அவர்.
தற்போது, திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் லாசா நகரின் பெரும் பாலான கடைகள் வியாபாரத்தை மீட்டுள்ளதோடு, பல்கலைக்கழகங்கள், இடை நிலை மற்றும் துவக்க பள்ளிகள் சீராக இயங்க தொடங்கியுள்ளன. லாசாவின் சமூக ஒழுங்கு இயல்பாகியுள்ளது என்று அறியப்படுகின்றது.
|